
ரக்ஷா பந்தன் குடும்ப விழா
மதுரை மாநகரில் ரக்ஷா பந்தன் குடும்ப சங்கம விழா செல்லம் செஞ்சுரி ஹால்,மதுரை தெப்பக்குளத்தில், ஆகஸ்ட் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நான்கு மணி முதல் இரவு 9 மணி வரை கோலாகலமாக கும்மி, ஒயிலாட்டத்துடன் கொண்டாடப்பட்டது . இந்நிகழ்ச்சியை கேசவ சேவா கேந்திரம் மற்றும் சங்கத்தின் மஹாநகர் மகிளா சமன்வய இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. ஏறக்குறைய 800றுக்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் விழாவில் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து சகோதர சகோதரிகளும் தங்கள் கவலைகளை மறந்து ஒன்று கூடி அகமகிழ்ந்தனர். பாரம்பரிய மிட்டாய் வகைகளுடன் வரவேற்பு வெகு சிறப்பாக நடைபெற்றது.பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒருங்கே சங்க ஷாக்கா விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன. முறையே விழா துவஜ அரோகணம் செய்யப்பட்டு, மேடையில் இருந்த பெரியவர்களால் ராக்கி அணிவிக்கப்பட்டு விழா இனிதே துவங்கியது. மதுரை ஜில்லா சங்க சாலக் சந்திரன் ஜி அவர்கள் தலைமை உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து முன்னிலையுரை மகிலா சமன்வயவின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி கனிமொழி அவர்கள் வழங்கினார் . பிராந்த பிரச்சாரக் திரு ஆறுமுகம் ஜி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் பஞ்ச பரிவர்த்தன் பற்றி எடுத்துரைத்து நாம் நமது பண்பாட்டினை காக்க அனைவரும் முன்வர வேண்டும் என வலியுறுத்தி, பண்பாட்டு வகுப்புகள் எடுக்க உத்வேக ப்படுத்தினார் .
பாரம்பரிய சம்பிரதாயங்களை கடைப்பிடித்து அதன்படி தமக்கை, அண்ணனுக்கு திலகமிட்டு அட்சதை தூவி வாழ்த்தி ரக்க்ஷை கட்டி இனிப்பு வழங்கி ஆரத்தி எடுத்தது அனைவரையும் நெகிழ வைத்தது .
இந்நிகழ்வு இந்துக்களின் பாரம்பரியத்தின் வெளிப்பாடாக அமைந்தது. இரவு விருந்துடன் விழா இனிதே நிறைவேறியது.
இவ் விழாவிற்கு வந்தவர்கள்,என்றென்றும் இந்நிகழ்வு மனதில் பசுமையாக இருக்கும் என மனம் உருகி கூறினர்.



3 thoughts on “Raksha Bandhan Madurai”
Comments are closed.