அவர் கூறும்போது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பேசப்பட்டு வரும் இந்த பேச்சுவழக்கு மொழிகளுக்கு எந்த எழுத்துருவும் கிடையாது. இந்த மொழிகள் யாவும் இப்போது அழிந்து வருகிறது. இந்த அரிய மொழிகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்கும் பணி இப்போது துவங்கியுள்ளது. இதற்கு, ரோமானிய எழுத்து வடிவங்களுக்கு பதிலாக பாரத நாட்டில் வழக்கில் உள்ள மொழிகளின் எழுத்து வடிவங்கள் பயன்படுத்தப்படும். இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த பணி நிறைவு பெரும்.
ராமஜென்மபூமி விவகாரத்தை பற்றி கூறும்போது அவர், அந்த இடத்தில ராமர் கோவில் மட்டுமே கட்டப்படும், வேறு எதுவும் அல்ல, ஆனால் இது நடப்பதற்கு சில காலம் பிடிக்கும் என்று கூறினார். இந்த விவகாரத்தை கருத்தொற்றுமையின் மூலம் தீர்ப்பது மிகவும் கடினமான காரியம். ஆனாலும் இந்த விஷயத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் எடுத்து வரும் முயற்சிகளை வரவேற்கிறோம்.
விவசாயிகள் பிரச்சினை சம்பந்தமான கேள்விக்கு பதிலளிக்கும்போது, அரசு விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளை பற்றி கவலை கொள்ளாத அரசு ஒரு நிலையான அரசாக இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.தொழிலதிபர்கள் வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றும் விவகாரத்தில், இந்த அமைப்பு மிகவும் வலுவிழந்ததாக உள்ளது, இது மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். கர்நாடகாவில் லிங்காயத் சமுதாயத்தினர் தங்களை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்பதற்கு பதிலளித்த அவர், இந்து மாதத்தில் சைவம், வைணவம், சாக்தம் போன்ற பிரிவுகளுக்கிடையே எந்த முரண்பாடுகளும் இல்லை என்றார்.
பாஜக பதவிக்கு வருவதற்கும் RSS வளர்ந்து வருவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 2014ம் ஆண்டு பாஜக பதவிக்கு வருவதற்கு முன்பே இந்த நாட்டில் சங்கம் வளர்ந்து இருந்தது. ஒவ்வொரு நாளும் சங்கத்திற்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதிகமான நபர்கள் சங்கத்தில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் RSS அகில பாரத பிரச்சார் பிரமுக் திரு மன்மோகன் வைத்யா, சக பிரச்சார் பிரமுக் திரு நரேந்திர தாகூர் ஆகியோர் உடனிருந்தனர்.