சத்தீஸ்கரின் ராய்பூரில் 2022 செப்டம்பர் 10 முதல் 12 வரை சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பல்வேறு அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அகில இந்தியளவில் நடைபெறும் இந்த ஒருங்கிணைப்பு கூட்டம் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தை ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் ஒருங்கிணைக்கிறது .
இதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பகவத், பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோஸ்பலே, 5 இணை பொது செயலாளர்கள் மற்றும் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர். பாரதீய மஸ்தூர் சங்கத்தின் ஸ்ரீ ஹிரண்மய் பாண்டியா, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் திரு. பி. சுரேந்திரன், திரு. அலோக் குமார் மற்றும் திரு. மிலிந்த் பரண்டே, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் திரு. ஆஷிஷ் சவுகான் மற்றும் திருமதி நிதி திரிபாதி, பாஜக தலைவர்கள் திரு. ஜே.பி. நட்டா மற்றும் திரு. பி.எல். சந்தோஷ் பாரதிய கிசான் சங்கத்தின் திரு.தினேஷ் குல்கர்னி, வித்யா பாரதியில் இருந்து ,கே ஸ்ரீ ராமகிருஷ்ண ராவ் மற்றும் ஸ்ரீ கோவிந்த் மஹந்தி, சாந்தா அக்கா , ராஷ்ட்ர சேவிகா சமிதியைச் சேர்ந்த செல்வி அன்னதானம் சீதா அக்கா, வனவாசி கல்யாண் ஆசிரமத்தைச் சேர்ந்த திரு ராமச்சந்திர காரடி மற்றும் திரு அதுல் ஜோக் உட்பட 36 அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். இந்த அமைப்புகள் அனைத்தும் தேசிய உணர்வுடன் சமுதாயத்தின் பல்வேறு துறைகளில், சேவை பணிகள் செய்து வருகின்றன
இந்த கூட்டத்தில், ஒவ்வொருவரும் தங்கள் பணி மற்றும் சாதனைகளை எடுத்துரைப்பார்கள். அது தவிர, கல்வி , தத்துவம், பொருளாதாரம், சேவைப் பணிகள் மற்றும் பல்வேறு சமூக மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பணிகளில் உள்ள சவால்கள் பற்றியும் விவாதிக்கப்படும். இந்த அமைப்புகளில் உள்ள தன்னார்வலர்களுக்கு தேவைப்படும் ஒருங்கிணைப்பை சங்கம் செய்து வருகிறது .
சுற்றுச்சூழல், குடும்பங்கள் மத்தியில் விழிப்புணர்வு மற்றும் சமூக நல்லிணக்கம் போன்ற விஷயங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த முயற்சிகள் பற்றிய கலந்துரையாடலும் நடைபெறும்.
சுனில் அம்பேகர்
அகில இந்திய ஊடகத்துறை செயலாளர்
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்