RSS-Sevabharathi seva activity at Vadapalani and Nesapakkam

18
VSK TN
    
 
     
In Vadapalani, around
60 swayamsevaks and 15 women participated in relief work.  Relief materials were distributed to
sub-centres like MMDA, K K Nagar, Nesapakkam, Mambalam, T Nagar, Adyar,
Saidpet.  41500 food packets were
distributed; 18400 water packets, 11,832 water bottles; dress materials to 980
people; kits containing basic materials to 5000 people. Swayamsevaks have made and distributed 7704 kits (including 1030 kits from Alwarpet).

In  Nesapakkam, swayamsevaks who were in relief
activity from the first spell of rains in November distributed food to 4000
people and settled them in relief camps. 
In the second spell of rains, 3000 people were rescued.  On the second day itself, 5000 people were
fed with food; temporary way was formed for the public to come out from the
floods which was very much appreciated by the locals; 13 medical camps were
conducted so far wherein 5000 patients were benefitted.  


வடபழனி நிவாரண மையத்தில் இருந்து
நடைபெற்ற பணிகள்
வடபழனி
மையத்தில் இருந்து சுமார் 60 ஸ்வயம்சேவகர்களும், 15 தாய்மார்களும் நிவாரணப் பணிகளில்
ஈடுபட்டனர். அங்கிருந்து, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ, கே.கே.நகர், நெசப்பாக்கம், மாம்பலம்,
தி.நகர், அடையாறு, சைதாப்பேட்டை ஆகியப் பகுதிகளில் அமைந்துள்ள துணை மையங்களுக்கு பொருள்கள்
அனுப்பி வைக்கப்பட்டன.
இதுவரை
41,500 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. 18,400 தண்ணீர் பாக்கெட்டுகளும்,
11,832 தண்ணீர் பாட்டில்களும் விநியோகிக்கப்பட்டன. 980 பேருக்கு உடைகள் வழங்கப்பட்டன.
மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய 5,000 பைகள் விநியோகிக்கப்பட்டன.
நெசப்பாக்கம்
கே.கே.நகரை
அடுத்த நெசப்பாக்கம் பகுதியில், கடந்த 2015, நவம்பர் மாதம் 14ஆம் தேதி மழை பெய்ததில்
இருந்தே ஸ்வயம்சேவகர்கள் நிவாரணப் பணிகளைத் தொடக்கி விட்டனர். அப்போது, 4,000 பேருக்கு
உணவு வழங்கப்பட்டது. மக்களுக்கு தாற்காலிக முகாம்கள் ஏற்படுத்தித் தரப்பட்டன.
டிசம்பர்
1ஆம் தேதி மழை பெய்ததும், ஸ்வயம்சேவகர்கள் உடனடியாக களத்தில் இறங்கி, மீட்புப் பணிகளில்
ஈடுபடத் தொடங்கிவிட்டனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்கப்பட்டது.
2ஆம் தேதி காலையே சுமார் 5,000 பேர் உணவருந்தினார்கள். அந்தப் பகுதியில் வெள்ளம் கடுமையான
பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள போதிலும், மற்ற அமைப்புகளால் உடனடியாக களத்தில் இறங்க
முடியவில்லை.
இந்தச்
சூழ்நிலையில், மீட்புப் பணிகளில் இறங்கிய ஸ்வயம்சேவகர்கள், சுமார் 3,000 பேரை மீட்டனர்.
நெசப்பாக்கம் பகுதிக்கு மற்ற அமைப்புகளின் நிவாரண உதவிகள் சென்றடைவதற்கும் ஸ்வயம்சேவகர்கள்
பாதை ஏற்படுத்தித் தந்தனர். இதை மக்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.
13ஆம்
தேதி வரை 6 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இவற்றில் 5,000 பேர் பயனடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

RSS-Sevabharathi Health Camp Covers All Sections Of Society

Sun Dec 13 , 2015
VSK TN      Tweet     Medical camp was organized at various places in Chennai. Hundreds of patients got benefitted through this medical camp cutting across the barriers from all religions. In Vinay theertha Vinayakar koil at Vinayakapuram, near Retteri a medical camp was conducted.  Muslims also attended the medical camp and thanked RSS.  Service of […]