சமுதாய மாற்றத்திற்கு ஆர்.எஸ்.எஸ். மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வைக்கம் சத்தியாகிரகம் உத்வேகம் தந்தது என ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் திரு. தத்தாத்ரேயா ஹொசபலே தெரிவித்தார். பல சமுதாயங்கள் ஒன்றிணைந்து வைக்கம் போராட்டத்தை வெற்றி பெற செய்தன என்றார் அவர். தேசிய சிந்தனை கொண்டவர்களை ஒன்றிணைத்து உன்னதமான பாரதத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். முனைந்து வருகிறது. ஒருங்கிணைந்த சமுதாயம் இருந்தால் நாட்டின் சேவை மற்றும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் எனவும் அவர் பேசினார்.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சியையொட்டி, வைக்கம் கடற்கரையில் ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செய்திருந்த சாங்கிக் நிகழ்ச்சியில் பேசும் போது அவர் இதனை தெரிவித்தார் வைக்கம், பூங்குன்னம் மற்றும் கோட்டயம் பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள் இதில் பங்கீட்டனர். வைக்கம் போராட்டம் எந்த நோக்கத்துடன் நடைபெற்றதோ, அதை நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ். வேலை செய்து வருகிறது என அவர் தெரிவித்தார். சமுதாயத்திற்காக போராடிய கே. கேளப்பன, டி.கே. மாதவன், மன்னாத்து பத்மநாபன் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நிகழ்ச்சி அமைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், வீரசாவர்க்கர் படித் – பவன் கோவிலை, இதே லட்சியத்துடன் உருவாக்கினார். சமுதாயத்தில் இருக்கும் நல்லிணக்கம் தான் ஆர். எஸ்.எஸ். அமைப்பின் தூண்டுகோல். ஷாகா மூலம் ஸ்வயம்சேவகர்களின் வாழ்க்கையில் இந்த பழக்கமானது நிலைத்து விட்டது. ஹிந்து எவருமே தாழ்ந்தவர் இல்லை எனும் முழக்கம் ப்ரயாக்ராஜ்-ல் நடந்த மாநாட்டில் உருவானது. உடுப்பியில் பல துறவிகள் ஒன்று கூடி, ஹிந்து அனைவருமே சகோதரர்கள் எனும் உயரிய மந்திரத்தை போதித்தனர்.
தற்போதுள்ள சர்சங்கசாலக் ஸ்ரீ மோகன் பாக்வத் அவர்களும், இதே கருத்தை கூறுகிறார். கோவில்கள், நீர்நிலைகள், மயானங்கள் அனைவருக்கும், எல்லா சாதியினருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். தனது நூற்றாண்டை நோக்கி செல்கையில் 5 விஷயங்களை மையப்படுத்தி வேலை செய்கிறது. அவை, குடும்ப மேன்மை , சமுதாய நல்லிணக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தேசபக்தியை பரப்புதல் மற்றும் நெறியான வாழ்க்கை முறை .
வலிமையான, வளமான பாரதம் உலகிற்கே ஒரு வரப்பிரசாதமாக அமையும். சமீபத்தில் நடந்து முடிந்த G20 மாநாடு ‘வசுதைவ குடும்பகம்’ எனும் தாத்பரியத்தை உலகிற்கு உணர்த்தியது. பல்வேறு துறைகளில் பாரதம் கண்டு வளர்ச்சி ஊக்கம் அளிக்கிறது என்றார்.