சாதகமாக இருந்தாலும் சரி விபரீதமாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு சூழ்நிலையிலும் சங்க கார்யகர்த்தர்கள் நியாயத்தின் பாதையிலேயே பயணிக்க வேண்டும்.
நாக்பூர், (7 ஆகஸ்ட் 2024). ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பகவத் ஜி, மரியாதைக்குரிய தத்தாஜி டிடோல்கரின் பிறந்த நூற்றாண்டு நிறைவு விழாவில், கடுமையான சூழ்நிலைகளில் சங்கத்தின் செயல் திட்டங்களைத் திறம்பட நிறைவேற்றும் நல்ல செயல் வீரர்களை உருவாக்கிய தத்தாஜி திடோல்கரின் ஒருங்கிணைக்கும் திறன் வியக்கத்தக்கது என்று கூறினார். அவரைச் சந்தித்தவர்கள் அனைவரும் அவருடைய ஆளுமையால் ஈர்க்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தத்தாஜியை தன்னுடையவராகவே கருதினர்.
நிறைவு நிகழ்ச்சி நாக்பூரில் உள்ள கவிவர்ய சுரேஷ் பட் அரங்கில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் , ஸ்ரீதேவ்நாத் மடம்- ஸ்ரீ க்ஷேத்ரா அஞ்சன்கான்-சுர்ஜியின் சுவாமி ஜிதேந்திரநாத் மகராஜ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்புச் செயலர் ஆஷிஷ் சவுகான், வரவேற்புக் குழு செயலாளரும் முன்னாள் ராஜ்யசபா எம்பியுமான அஜய் சஞ்சேதி, அருண் கர்மார்க்கர் உள்ளிட்டோர் மேடையில் உடனிருந்தனர்.
மாணவர்களின் வாழ்க்கையில் தத்தாஜியின் குணநலங்களின் பிரதிபலிப்பு மிகத் தெளிவாக காணப்பட்டது என்று சர்சங்சாலக் ஜி கூறினார். தத்தாஜியின் சொல்லும் செயலும் பல செயல்வீரர்களை உருவாக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. தத்தாஜியின் வாழ்க்கை மற்றும் பணிகளைப் பற்றி அறிந்து கொண்டும் , மக்களுடன் தொடர்பு கொள்ளும் அவரது கலையை உள்வாங்குவதுமே அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி.
ஒருவரது வாழ்க்கையின் தவத்தின் மூலம் மட்டுமே சொல்லில் ஆற்றல் வெளிப்படுகிறது என்று சர்சங்சாலக் ஜி கூறினார். புகழும் வளமும் மட்டுமே ஒரு செயல் திட்டத்தை வெற்றியடையச் செய்வதில்லை, அதற்காக ஒருவர் கடுமையாக உழைக்க வேண்டும். ஒவ்வொரு சாதகமான மற்றும் பாதகமான சூழ்நிலையிலும் கார்யகர்த்தர்கள் நியாயத்தின் பாதையிலேயே பயணிக்க வேண்டும். சமூகத்தின் நிலைமை மாறி இருக்கலாம் , ஆனால் நமது பணியின் திசை மாறக்கூடாது.
தத்தாஜி டிடோகர் நிச்சயமாக ஒரு அஜாதசத்ரு- அதாவது அவர் யாரையும் எதிரியாக கருதமாட்டார் – என்று சர்சங்கசாலக் கூறினார், மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்தவர்கள் கூட அவரது தூய்மையான நடத்தை காரணமாக அனைவராலும் மதிக்கப்பட்டார். நமது இயக்கங்களின் செயல்கள் – கருத்துக்கள் பரிகசிக்கப் பட்ட நேரத்தில், அகில வித்யார்த்தி பரிஷத்தில் உறுதியாக நின்று பணியாற்றினார். அவர் யார் யாருடைய பயிற்சியின் கீழ் பணிபுரிந்தாரோ அவர்களின் குணங்களையும் சுவீகரித்துக் கொண்டார். இது மகிழ்ச்சியான நீரோடை அல்ல என்பதை அறிந்திருந்தும், சிரமங்களைச் சமாளித்து, தொடர்ந்து பணியை முன்னெடுத்துச் சென்றார்.
பணியை முன்னோக்கி கொண்டு செல்ல கார்யகர்த்தர்களாகிய நாம் பெற வேண்டிய குணங்கள் என்ன, நமது தீர்மானம் என்ன, புதிதாக சேர்ந்துள்ள கார்யகர்த்தர்களின் வளர்ச்சிக்கு நமது சிந்தனை என்ன? இவற்றையெல்லாம் நாம் முழுமையாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கூறி டாக்டர்.மோகன் பாகவத் நிறைவு செயதார்.
எனது ஆளுமையை வடிவமைப்பதில் தத்தாஜிக்கு பெரும் பங்கு உண்டு என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். நாக்பூர் தெகிடி கணேஷ் கோவிலிலிருந்து வித்யாபீடத்தின் புதிய பட்டமளிப்பு ஆடிட்டோரியம் மற்றும் நாக்பூர் வித்யாபீத் செல்லும் சாலையில் உள்ள பாலத்திற்கு தத்தாஜியின் பெயரை சூட்டுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தத்தாஜியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘ஆதர்வத்’ என்ற அவர் நினைவைப் போற்றும் நூல் வெளியிடப்பட்டது.