ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் அகில பாரதிய பிரதிநிதி சபா 2025 (பொதுக்குழுக் கூட்டம்) மார்ச் 21-23, 2025 ஜனசேவா வித்யா கேந்திரம், சன்னேனஹள்ளி, பெங்களூரு   பாரதத்தின் ஒப்பற்ற விடுதலை வீராங்கனைகளில் ஒருவரான மஹாராணி அப்பக்கா அவர்களின் 500-வது பிறந்தநாளை முன்னிட்டு சர்காரியவா தத்தாத்ரேய ஹோசபலே அவர்களின் அறிக்கை.     பாரதத்தின் தன்னிகரற்ற விடுதலை வீராங்கனைகளில் ஒருவரான தென் கர்நாடகத்தில் உள்ள உல்லால் சமஸ்தான மஹாராணி, அப்பக்கா ஒரு […]

பாரதமாதாவின் தவப்புதல்வர்களைப் போற்றுவோம்! இருபதாம் நூற்றாண்டு முற்பகுதியின் “புரட்சி இயக்க’’ நாயகன் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி அவர்கள் நினைவு தினம் இன்று. [பிறப்பு:1889 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி . அமரத்துவ தினம்:1978 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் தேதி ] “தமிழகத் தியாகிகள்” என்னும் வலைப் பக்கப் பதிவிலிருந்து…. எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி. நீலகண்ட பிரம்மச்சாரி – இந்திய சுதந்தரப் போராட்ட காலத்தில் […]

சர்தார் வேதரத்தினம் பிள்ளை 1897-ம் ஆண்டு பிப்ரவரி 25 ம் தேதி வேதாரண்யத்தில் அப்பாகுட்டி பிள்ளைக்கும், தங்கம்மாள் அம்மையாருக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் வேதரத்தினம் பிள்ளை. இவரது மூதாதையர் தாயுமானவர் வழிவந்தவர் ஆகையால் சைவத்தையும், தெய்வபக்தியையும், தமிழையும் ஊட்டி அறநெறி வழுவாது வளர்த்தனர் பிள்ளையை. திண்ணைப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்றவர், நாகைப்பட்டினத்தில் உயர்கல்வி கற்றார். பிள்ளையிடம் பன்மொழிகளைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்ததால், தாய்மொழியாம் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், […]

பாரத மாதாவின் தவப்புதல்வன் பரட்சிப்போராளி சூர்யா சென் நினைவு தினம் இன்று! சூரியா சென் (Surya Sen) (22 மார்ச் 1894 – 12 ஜனவரி 1934) இந்திய விடுதலைப் போரின் புரட்சித் தலைவர்களில் முதன்மையானவர்; தேசபக்தி உணர்வு கொண்ட இளைஞர்களைத் திரட்டி புரட்சி படை அமைத்து, பிரிட்டிஷ் இராணுவத்துடன் நேருக்கு நேர் போரிட்டவர்; தாய் நாட்டின் விடுதலைக்குத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்; அவர் தான் புரட்சிப் போராளி சூர்யாசென். […]

சாகித்திய கர்த்தாக்களைப் போற்றுவோம்! தமிழின் முதல் பெண் புதின ஆசிரியர் வை.மு.கோதைநாயகி அம்மாள் அவர்களின் பிறந்த நாள் இன்று. வை. மு. கோதைநாயகி அவர்கள்.”Queen of Fictions” (டிசம்பர் 1, 1901 – பிப்ரவரி 20, 1960) வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி. 35 ஆண்டுகளில் 115 புதினங்கள்! தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் முதல் புதினத்தை எழுதியவர், வை.மு.கோதைநாயகி. அறியாத வயதில், பால்ய விவாகம் என்னும் குழந்தைத் திருமணக் கொடுமைக்கு ஆளானவர். […]

குழந்தை பருவமும் ஆரம்பகால வாழ்க்கையும்: அன்றைய பனாரஸில் (வாரணாசி அல்லது காசி) வசித்து வந்த மஹாராஷ்டிர கர்ஹடே(கர்டே) பிராமணரான மோரோபந்த் தாம்பே(தம்பே)- பாகீரதி சப்ரே(பாகீரதி பாய்) தம்பதியருக்கு நவம்பர் 19, 1828 (சில ஆதாரங்கள் படி 1835) ஆண்டு மகளாக லட்சுமி பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா (மனு). மிக சிறு வயதில் தாயை இழந்து வருந்திய லட்சுமியை திசை திருப்ப மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா நீதிமன்றத்தில் […]

சமூக நீதிக்காக போராடிய காஜுலு லக்ஷ்மிநரசு செட்டி நமது நாடு விடுதலை அடைந்து, 77 ஆம் வருடத்தை நாம் கொண்டாடி வரும்  இந்த தருணத்தில், நமது நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட எத்தனையோ வீர புருஷர்களின் தியாகங்கள் நமக்கு தெரியாமலே மறைக்கப்பட்டு உள்ளன. ஆங்கிலேயர்கள் “வரி” என்ற பெயரில் செய்த அட்டூழியங்களை, “கல்வி” என்ற போர்வையில் செய்த மதமாற்றங்களை, அவர்கள் பாணியில் தகுந்த ஆதாரங்களுடன் பத்திரிகை ஆரம்பித்து, அதன் மூலம் வெளிக் […]

மறக்கப்பட்ட மாமனிதர்கள்! Unsung Heros. சேலம் விடுதலைப் போராட்ட வீரர் கவிஞர் அர்த்தநாரீச வர்மா அவர்களின் பிறந்த தினம் இன்று. [ 27.07.1874 – 07.12.1964 ] விடுதலைப் போரில் வட தமிழ்நாடு: யார் இந்த இராஜரிஷி அர்த்தநாரீச வர்மா?  தமிழ் மொழிக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் சமுதாய முன்னேற்றத்துக்காகவும் அயராது உழைத்தவர் கவிஞர் அர்த்தநாரீச வர்மா. வாழ்க்கை முழுவதும் ஒரு போராளியாக, கவிஞராக, பத்திரிகையாளராக சமூகத் தொண்டினையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்த […]

பாரதமாதாவின் தவப்புதல்வர்களைப் போற்றுவோம்! இன்று இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் பிறந்த தினம். (23 ஜூலை 1906 – 27 பிப்ரவரி 1931) செவ்வாய்க்கிழமை. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பதர்க்கா என்ற ஊரில் 1906 ஆம் ஆண்டு பிறந்த ஆசாத்தின் இயற்பெயர் சந்திரசேகர சீதாராம் திவாரி. இவரது தந்தை அலிஜார்பூரில் ஒரு எஸ்டேட்டில் பணியாற்றினார். சிறுவயதில், பருவத்தில் பழங்குடியின மக்களிடம் முறையாக வில் வித்தை கற்றார். […]

பாரத மாதாவின் தவப்புதல்வர்களைப் போற்றுவோம்! வீரத்துறவி சுப்பிரமணியசிவா நினைவு நாள் இன்று. 23 – 07 – 2024.   “சிவம் பேசினால் சவம் எழும்” என்ற மகாகவியின் வரிகளுக்குச் சொந்தமான வீரத்துறவி சுப்பிரமணிய சிவா நினைவு தினம் இன்று… பார்த்தேன்; படித்த்தேன்; பகிர்கின்றேன். பேராசிரியர் சரஸ்வதி ராமநாதன் அவர்களின் கட்டுரை: “சிவமும் பிள்ளையும், இல்லாவிட்டால் இந்தப் பாரதி வெறும் குருடன்’’ என்று பாரதி புகழ்ந்த இருகண்கள் வ.உ.சி. என்ற […]