எம்.எம்.தண்டபாணி தேசிகர் (1908 – 1972) “என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா” “காண வேண்டாமோ” “தில்லை என்றொரு தலமிருக்குதாம்” என்ற பாடல்களை கேட்கும்போது நந்தனார் திரைப்படத்தில் நடித்த திரு.எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்களின் நினைவு வரும். பரம்பரை பரம்பரையாக சிவத்தொண்டு புரிந்துவந்த ஓதுவார்கள் குடும்பத்தில் முருகையா தேசிகரின் குமாரர் முத்தையா தேசிகரின் மகனாக எம்.எம்.தண்டபாணி தேசிகர் 1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி நன்னிலம் அருகில் […]

கிருபானந்த வாரியர் தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து, மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும் தனித்திறன் அவருக்குண்டு. சின்னக் குழந்தைகளைக் கூட தன் பேச்சால் கவர்ந்து வயப்படுத்தி வைத்திருந்த மகான் இவர். இந்தியா மட்டுமில்லாது, இலங்கை, […]

கிருபானந்த_வாரியார் கடைக்கோடி மனிதர்களின் மனதில் தெய்வீகத்தை விதைத்தவர் ஸ்ரீ கிருபானந்த வாரியார். நாம் சிந்திக்க வேண்டிய வார்த்தைகள் அவரால் நகைச்சுவையாக வெளிப்படுத்தப்பட்டன. உண்மையில் 64 வது நாயனாராக இருந்தார் என்பதே ஆன்மீகவாதிகளின் நம்பிக்கை. #கிருபானந்த_வாரியார் 1906 ஆம் ஆண்டு வேலூருக்கு அருகிலுள்ள காங்கேயநல்லூரில் மல்லையா தாஸ் பாகவதர் மற்றும் கனகவல்லி அம்மையாருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார். அவருக்கு உடன்பிறப்புகள் பதினொரு பேர் இருந்தனர். #கிருபானந்த_வாரியார் அவர்களின் தந்தையே அவருக்கு அறிவையும் […]

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் டாக்டர் மோகன் பாக்வத், டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடந்த சுயாஷ் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்  தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். டெல்லியில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் உரையாற்றிய அவர், அவர்கள் செய்யும் சமூகப் பணிகள் மனிதகுலத்தின் நலனுக்கு உதவுவது மட்டுமல்லாமல், தேசத்திற்கும் உத்வேகத்தை அளிக்கிறது என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், நம் மனதில் எப்போது அனைவரும் நமக்கு […]

நாமக்கல் கவிஞர் பாரதத்தின் சுதந்திர யுத்த வேள்வியில் தங்களை அளித்த நல்லோர்கள் பலர். அவர்களின் ஒருவர் தான் நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் காந்திய சிந்தனை கொண்டவர். சமயநெறியின் வழிநின்று சமத்துவம் பாடியவர். சமூக சீர்திருத்தத்தினை முன்னெடுத்தவர். தமிழறிஞர், தாய் தமிழை தேசம் முழுவதும் ஒலிக்கச் செய்ய உதவியவர். தமிழ் நதியினை தேசிய நீரோட்டத்தில் இணையச் செய்ய விரும்பியவர். பாரதியின் வழி நின்று எளிய நடை, எளிய பதம், புதிய சிந்தனை […]

“தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா…” “தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு…” இவை எல்லாம் எண்ணற்ற திராவிட மேடைகளில் காலம் காலமாக முழங்கி வரும் வரிகள். இவற்றுக்குச் சொந்தக்காரர் நாமக்கல் கவிஞர், வே ராமலிங்கம் பிள்ளை. இந்த வரிகளை மட்டும் படித்துவிட்டு, இன்றைய திராவிட மாடல்களுக்கு அடித்தளம் அமைத்தவர்களில் இவரும் ஒருவர் என்ற எண்ணம் தோன்றலாம். இன்றைய சமூக நீதி வியாபாரிகள் எப்படி தாதாஸாஹேப் அம்பேத்கரை தவறாக மேற்கோள் […]

ராஷ்ட்ரிய சேவிக சமிதி ஏற்பாடு செய்திருந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசினார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவர்கள். பெண்களுக்கான அதிகாரப்பகிர்வு என்பது வீட்டிலிருந்து துவங்க வேண்டும், அதுவே சமூகத்தில் சரியான இடத்தை அவர்களுக்கு பெற்றுத் தரும் என தெரிவித்தார். பாரதம் விஸ்வ குருவாக வேண்டும் என்று நாம் விரும்பினால்,  அதில் ஆண்களும்,பெண்களும் சம அளவு பங்காற்ற வேண்டும் என குறிப்பிட்டார்  அதை நோக்கிய முறையான மாற்றங்கள் மெதுவாக நடைபெற்று […]

ராவ்பகதூர் எம்.சி.ராஜா பிள்ளை அவர்கள் அகில இந்திய அளவில் ஷெட்யுல்ட் இன மக்களை ஒருங்கினைத்த முதல் சமூகப் பிரதிநிதி.1916 முதல் 1943 வரை ராவ்பகதூர் ராஜாவின் அரசியல் எழுச்சி என்பது மறந்து போன ( இருட்டடிப்பு செய்யப்பட்ட) வரலாற்று உண்மை. பாபாசாகேப் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே, ராவ்பகதூர் எம்.சி. ராஜா பிள்ளை (1916 இல்) சென்னை மாகான ஆதி திராவிடர் மஹாஜன சபையின் மாகான செயலாளர். அப்போது பாபாசாகேப் அம்பேத்கர் […]

  18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர்களை கதிகலங்குமாறு செய்த ஒண்டிவீரனின் வீர தீர செயல்களை நாம் அறியும்போது பூரிப்பு ஏற்படுகிறது. ஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர், பிறந்த தேதி, ஊர் போன்ற விவரங்களின் ஆவணங்கள் இல்லை. அவர் பூலித்தேவரின் படையில் முக்கிய தளபதியாக செயல்பட்டவர். பூலித்தேவரும் ஒண்டிவீரனும் ஒருவரின்றி மற்றவர் இல்லை என வரலாற்று விவரங்களின் மூலம் அறியலாம். ஆக, ஒண்டிவீரனைப் பற்றி அறியவேண்டும் என்றால் பூலித்தேவரின் சரித்திரமும் தெரிந்துக்கொள்ளும் அவசியம் உள்ளது. பூலித்தேவரின் முன்னோர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள். திசைகாவலுக்காக திருநெல்வேலி வந்தனர். அங்கே, நெற்கட்டும் செவ்வேல் அருகே கோட்டை அமைத்து ஆட்சி செய்தார்கள். அவர்களின் வாரிசாக பிறந்தவர் பூலித்தேவர். அந்த பகுதியில் இருந்த அருந்ததியர் மக்களின் நிலங்களை இருளப்பிள்ளை என்பவர் தன் பலத்தை பயன்படுத்தி பிடுங்கிக்கொண்டார். அருந்ததிய மக்கள் பூலித்தேவரிடம் தங்களுக்கு உதவுமாறு முறையிடு செய்தார்கள். அவர்களின் நிலங்களை இருளப்பிள்ளையிடமிருந்து மீட்டுத் தந்தார் பூலித்தேவர். அதற்குப்பிறகு அருந்ததியினர் பூலித்தேவரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு மீட்டுக்கொடுக்கப்பட்ட நிலங்களில் ஒன்று ஒண்டிவீரனின் தாத்தாவின் நிலம். எட்டு பிள்ளைகள் பெற்ற அவரின் மூத்த மகனின் மகன்தான் ஒண்டிவீரன். பாளையக்காரன் பூலித்தேவரின் வலிமையே அவருடைய படை தான். அவரது படை வீரர்கள் தங்களது பாளையத்துக்காகவும் பூலித்தேவருக்காகவும் […]