குழந்தை பருவமும் ஆரம்பகால வாழ்க்கையும்:
அன்றைய பனாரஸில் (வாரணாசி அல்லது காசி) வசித்து வந்த மஹாராஷ்டிர கர்ஹடே(கர்டே) பிராமணரான மோரோபந்த் தாம்பே(தம்பே)- பாகீரதி சப்ரே(பாகீரதி பாய்) தம்பதியருக்கு நவம்பர் 19, 1828 (சில ஆதாரங்கள் படி 1835) ஆண்டு மகளாக லட்சுமி பிறந்தார்.
அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா (மனு).
மிக சிறு வயதில் தாயை இழந்து வருந்திய லட்சுமியை திசை திருப்ப மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா நீதிமன்றத்தில் வேலை செய்த அவருடைய அப்பா அவருக்கு தற்காப்பு கலைகள், குதிரையேற்றம், அம்பு எய்தல், வாள் சண்டை என தந்தை கல்வி பயிலும் போதே கூடவே இவைகளையும் கற்று குடுக்க தன் கல்வியை முறையாக பயின்றதோடு அனைத்து சண்டையையும் கற்று தேர்ந்தார்.
நானா சாஹிப் மற்றும் தத்யா டோப் ஆகியோருடன் வளர்ந்தார். பிற்காலத்தில் இவர்கள் மூவரும் இந்தியாவின் முதல் சுதந்திரப் போரில் தீவிரமாக பங்கேற்றார்கள்.
ஆட்சி:
இவரது தந்தை 1842 ஆம் ஆண்டில், ஜான்சியின் மகாராஜா ராஜா கங்காதர் ராவ் நெவல்கருக்கு மண முடித்தார். இவருக்கு திருமணத்துக்கு பின் அரசியாக பதவியேற்கும் போது ‘லக்ஷ்மிபாய்’ என்று பெயர் சூட்டப்பட்டது.
1851 ஆம் ஆண்டில், அவர்களுக்கு தாமோதர் ராவ் என்ற குழந்தை பிறந்தான், ஆனால் நான்கு மாத காலம் மட்டுமே அக்குழந்தை இவ்வுலகில் வாழ்ந்து மறைந்தது.
அதன் பின்னர், ராஜா கங்காதர் ராவின் உறவினரின் மகன் ஆனந்த் ராவை தத்தெடுத்து அவருக்கு தாமோதர் ராவ் என்று பெயர் மாற்றி வளர்த்தனர்.
நவம்பர் 1853 இல் ராஜா கங்காதர் ராவ் உடல்நலக்குறைவால் அமரராக, கவர்னர் ஜெனரல் லார்ட் டல்ஹெளசியின் கீழ் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, “Doctrine of Lapse” சட்டத்தை ஜான்சியில் அமுல்படுத்தியது.
அதாவது ஒரு மன்னருக்கு நேரடி வாரிசு இல்லை என்றால் அந்த அரசு தங்களுக்கே சொந்தம் என ஆங்கிலையர்கள் உரிமை கொண்டாடி அந்த ராஜ்ஜியத்தை தங்களுடையதாக ஆக்கி கொள்வர்.
இந்த சட்டத்தை அமுலாக்கியதால் தாமோதர் ராவ் ராணியின் வளர்ப்பு மகன் என்பதால், அவருக்கு சிம்மாசனம் மறுக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல,
பிரிட்டிஷ் அரசு ஜான்சி மாநிலத்தை தனது பிரதேசங்களுடன் அநியாயமாக இணைத்தது.
மார்ச் 1854 இல், வருடம் அறுபதாயிரம் ரூபாய் ஓய்வூதியத்துடன், ஜான்சி கோட்டையை விட்டு வெளியேற ராணிக்கு பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது.
ஆனால் தனது வளர்ப்பு மகனுக்காக சிம்மாசனத்தைப் பாதுகாப்பதில் லட்சுமிபாய் உறுதியாக இருந்தார். தனது நாட்டின் பாதுகாப்புகளை பலப்படுத்தினாள்.
அவர் ஒரு இராணுவத்தை கூட்டி, அதில் பெண்களுக்கும் இராணுவ பயிற்சி அளித்தார்.
அவரது படைகளில் குலாம் கவுஸ் கான், தோஸ்த் கான், குடா பக்ஷ், லாலா பாவ்பக்ஷி, மோதி பாய், சுந்தர்-முண்டர், காஷி பாய், திவான் ரகுநாத் சிங் மற்றும் திவான் ஜவஹர் சிங் போன்ற வீரர்களும் இணைந்தனர்.
போர்:
மே 10, 1857 அன்று மீரட்டில் ஏற்பட்ட சிப்பாய் போர் ஆரம்பம் ஆனது.
போர்வீரர்களுக்கு புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கி குண்டுகளில் பசுவின் கொழுப்பும், பன்றியின் கொழுப்பும் பூசப்பட்டதால் அதை தொட வீரர்கள் மறுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பிரிட்டிஷார் அவர்களை அடக்கியும், தாக்கவும் செய்ய அதனை எதிர்த்து கிளர்ச்சி தொடங்கியது.
இதன் எதிரொலியாக கிளர்ச்சியினால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல பிரிட்டிஷ் மக்கள் இந்திய வீரர்களால் கொல்லப்பட்டனர்.
இதனால், இந்த போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய பிரிட்டிஷ் அரசு தனது கவனத்தை அங்கு செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், தற்காலிகமாக ஜான்சியை ஆட்சி செய்ய லக்ஷ்மி பாய் பிரிட்டிஷால் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையில் ஜூன் 1857 இல், வங்காளத்தை பூர்வீகமாக கொண்ட சில கிளர்ச்சியாளர்கள், புதையல் நிறைந்த ஜான்சி கோட்டையை கைப்பற்ற சண்டையிட்டனர். ‘ஓர்ச்சா’ மற்றும் ‘டாடியா’ படைகளால் ஜான்சி நாட்டின் மீது படையெடுப்பு ஏற்பட்டது; ஜான்சியை பிரிப்பதே அப்படைகளின் நோக்கம்.
இதனால் லட்சுமிபாய் வேறு வழியில்லாமல் பிரிட்டிஷாரிடம் உதவி கோரினார், ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
ஆகையால், லட்சுமிபாய் படைகளை ஒன்று திரட்டி, ஆகஸ்ட் 1857 இல் படையெடுப்பாளர்களை தோற்கடித்தார். பின் சுமார் ஒரு வருடம் ஜான்சியை அமைதியாக லட்சுமிபாய் ஆட்சி செய்தார். பிரிட்டிஷ் படைகள் ஜான்சி பக்கம் வராது போகவே அவரது ஆட்சி பலமானது.
அது மட்டுமல்லாமல் சுதந்திரத்திற்காக போராட இந்திய மக்களை ஊக்குவித்தது.
ஜான்சி ராணியினால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படும் என பயந்த பிரிட்டிஷார் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த கொலைகளுக்கு லஷ்மி பாய்க்கு பங்கிருப்பதாக குற்றம் சாட்டி, அதற்கு தண்டனையாக ஜான்சியை ஒப்படைக்க கோரியபோது, லட்சுமிபாய் உறுதியாக மறுத்துவிட்டார்.
இதன் விளைவால், 1858 மார்ச் 23 அன்று ஹு ரோஸ் என்பவன் தலைமையில் ஜான்சியை கைப்பற்ற படை அனுப்பி வைக்கப்பட்டு போர் தொடங்கியது.
லட்சுமிபாய், தனது படைகளுடன், ஜான்சி ராஜ்யத்தை காப்பாற்ற தைரியமாக போராடினார்.
அவருக்கு உதவுவதற்காக வந்த தாந்தியா தோபேயும், பான்பூர் மன்னர் தலைமையில் வந்த 20,000 படை வீரர்களை பிரிட்டிஷார் சூழ்ந்து தாக்கி 1500 பேரை வீரமரணம் அடைய செய்து மீதி இருந்தவர்களை அவர்களின் ஆயுதங்களை கவர்ந்து, மிரட்டி தங்களது படை பிரிவோட இணைத்து கொள்ளவே யாராலும் லஷ்மி பாய்க்கு உதவ முடியாது போனது. பிரிட்டிஷ் படைகள் போரை வென்றது.
மாவீரன் தாந்தியா தோபேவின் ஆயுத வண்டிகள் கொள்ளை அடிக்கப்பட்டு பாதுகாவலர்களும் கொல்லப்பட்டதால் அவரும் புறமுதுகிட்டு விலக நேரிட்டது. அவரை காக்க வந்த ஆயுதங்கள் அவருக்கு எதிராக பிரிட்டிஷாரால் பயன்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்வினால் லட்சுமிபாய் தன் மகனுடன் கல்பிக்கு தப்பி ஓட வேண்டிய கட்டாயமான சூழல் ஏற்பட்டது,
அங்கு டோப் உள்ளிட்டகூடுதல் கிளர்ச்சிப் படைகள் லட்சுமிபாயுடன் இணைந்தன.
மே 22, 1858 அன்று, பிரிட்டிஷ் படைகள் கல்பியைத் தாக்கி மீண்டும் இந்திய படைகளை தோற்கடித்தன, இதனால் லட்சுமிபாய் உள்ளிட்ட தலைவர்கள் குவாலியருக்கு தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஜூன்16, 1858 அன்று, பிரிட்டிஷ் படைகளுடன் லட்சுமிபாய் தனது படைகளுடன் கடுமையான போரிட்டார்.
மரணம்:
ஜூன் 18, 1858 இல், குவாலியரில் பிரிட்டிஷ் இராணுவத்துடன் போரிட்டு ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் வீரமரணம் அடைந்தார். அவரின் வீழ்ச்சிக்கு பின் குவாலியரையையும் அரண்மனையையும் அவரின் நாட்டு பெண்களையும் சூறையாடி பிரிட்டிஷார் தங்களது வெறியை தீர்த்து கொண்டனர்.
அவரது இறுதி வார்த்தை “வாசுதேவரே நான் உங்களை வணங்குகிறேன்” என்பதோடு அவரின் உயிர் பறவை பறந்து வாசுதேவரின் திருவடிகளை அடைந்தது.
புகழ்:
ஸ்ரீமதி சுமித்ர குமாரி சௌகான் என்ற புகழ்பெற்ற இந்திய கவிஞர் எழுதிய ஜான்சி ராணி பற்றிய இந்தி மொழிக் கவிதைகள் இந்தியில் மிகுந்த புகழ் பெற்றவை.
“ஸ்வராஜ்ய கனவின் அக்கினி குஞ்சு
இங்குதான் ஜனித்தது..
ஒரு வீராங்கனையின் இறுதி நாள்
சாதனைகள் அரங்கேறிய வீரபூமியில் நிற்கும்
இந்த நினைவிடம் சிறியதுதான்…
ஆனால் இந்த வீர சரித்திரம் கேட்டால்
புற்றீசல் கூடப் புலியாக மாறிப் போராடத் தொடங்கிவிடும்”
ஆங்கிலேயர்களின் படையை வழிநடத்திய ஹீ ரோஸ் வீரத்துக்காகவும் விவேகத்துக்காகவும் விடாமுயற்சிக்காகவும் குறிப்பிடத்தக்கவர் என்றும் அனைத்துப் புரட்சித் தலைவர்களிலும் மிகவும் ஆபத்தானவர் என்றும் இராணி இலட்சுமிபாயைப் புகழ்ந்து கூறினார்.
இவரது வீரதீரச் செயல்களும் ஆங்கிலேயரை எதிர்த்து இவர் புரிந்த போரும் இந்திய நாட்டில் இன்றும் நாட்டுப்புறப் பாடல்களாகவும் நாடகங்களாகவும் பலரால் போற்றப்படுகின்றன.
அமரத்துவம் பெற்ற ஒரு வீராங்கனையாக என்றென்றும் இவர் பெயர் அழியாப் புகழ் பெற்றுள்ளது.
புனைகதையில்
ஜியார்ஜ் மேக்டொனால்டு ப்ரேசரின் ப்ளாஷ்மேன் இன் தி கிரேட் கேம் என்ற வரலாற்றுப் புனைகதைப் புதினத்தில் ப்ளாஷ்மேனும் இராணி இலட்சுமிபாயும் சந்திப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
மைக்கேல் டி கிரீசின் லா பெம்மே சக்ரீ (புனிதப் பெண்) என்ற பிரெஞ்சுப் புதினம்
2007ஆம் ஆண்டு வெளிவந்த ஜயஸ்ரீ மிஸ்ராவின் இராணி என்ற ஆங்கிலப் புதினம்
திரைப்படத்திலும் தொலைக்காட்சித் தொடரிலும்
சோராப் மோடியால் தயாரித்தும் இயக்கியும் 1953ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியாவின் முதல் மூவண்ணத் திரைப்படமான தி டைகர் அன்ட் தி ஃப்ளேம்
ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் 2010 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதியிலிருந்து 2012 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி வரை “ஜான்சி ராணி ஒரு வீரப்பெண்ணின் கதை”என்ற தொடர் இராணி இலட்சுமிபாயின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பப்பட்டது.
லஷ்மி பாய் வாழ்க்கையின் அடிப்படையில் கே. வி. விஜயேந்திர பிரசாத்தின் திரைக்கதையிலிருந்து கிருஷ்ணா மற்றும் நடிகை கங்கனா ரனாத் என பிரபலமாக அறியப்பட்ட ராதா கிருஷ்ணா ஜாகர்லாமூடி, ஜீ ஸ்டுடியோஸ், கமல் ஜெயின் மற்றும் நிஷாந்த் பிட்டி ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் ராணவுட் நடித்தார்.
இந்த படத்தின் சிறப்புத் திரையிடல் ஜனவரி 25, 2019 அன்று கங்கனா ரனாத் மற்றும் அவரது குழுவினர் முன்னிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் ராம்நாத் கோவிந்த், இந்திய ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. படத்தைப் பார்த்த பிறகு, அந்தத் திரைப்படத்தின் கலைஞர்களையும் குழுவினரையும் ஜனாதிபதி பாராட்டினார். இந்த திரைப்படம் உலகெங்கிலும் உள்ள 50 நாடுகளில் 3700 திரைகளில், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகியவற்றில் உலகளவில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் விமர்சகர்களாலும், குறிப்பாக ரனாவுட்டின் செயல்திறனை நோக்கிய புகழுடன் கூடிய பார்வையாளர்களாலும் நன்கு அறியப்பட்டிருந்தது.
வரலாற்று ஆய்வு
மஹாஸ்வேத தேவியால் 1956ஆம் ஆண்டில் வங்காள மொழியில் எழுதப்பட்ட தி குவீன் ஆஃப் ஜான்சி (சகரீயாலும் மந்திரா செங்குப்தாவாலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது.) என்ற நூலில் மகாராணி லட்சுமிபாயின் வாழ்வைப் பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக வரலாற்று ஆவணங்களும் (பெரும்பாலும் ராணியின் பேரனான ஜி. சி. தம்பேயால் வழங்கப்பட்டவை) நாட்டார் கதைகளும் கவிதைகளும் வாய்மொழி மூலங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஜான்சி ராணி படை
வெள்ளையர் எதிர்ப்புக்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெண்கள் படையை உருவாக்கி சிறப்பித்தார்.
தனது கடைசி மூச்சு வரை தேசபக்தியுடன் தைரியமாக போராடி,மறைந்த ஜான்சி ராணியை வரலாறு ஒருபோதும் மறக்காது.
திருமதி.சுபா பாலாஜி