மகாத்மா காந்தியின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தைப் பின்பற்றுவோம் , டாக்டர் மோகன் பாகவத்

15
VSK TN
    
 
     
பாரத தேசத்தின் நவீன வரலாற்றிலும் சரி, சுதந்திர பாரதத்தின் மேம்பாடு குறித்த பதிவுகளிலும் சரி சில மஹான்களின் பெயர்கள் நிரந்தரமாக இடம் பெற்று உள்ளன. தொன்று தொட்டு நிகழ்ந்துவரும் பாரத வரலாறு கூறும் பதிவுகளில் அந்த பெயர்கள் ஒரு திருவிழா கொண்டாட்டமாக பரிணமித்து விடுகின்றன. அத்தகைய பெயர்களில் வணக்கத்திற்குரிய மஹாத்மா காந்தியின் பெயர் தலையாய இடம் பெறுகிறது. பாரதம் ஆன்மீக பூமி. ஆன்மீக அடிப்படையில்தான் அது மேம்பாடு அடையும். இந்த அடிப்படையில் பாரத அரசியலை ஆன்மீக அஸ்திவாரத்தின் மீது கட்டி எழுப்பும் பரிசோதனையை மேற்கொண்டார் மஹாத்மா காந்தி. 

மகாத்மா காந்தியின் முயற்சி ஆட்சி அரசியலோடு நின்றுவிடவில்லை. சமுதாயத்திற்கும் சமுதாயத்தை வழிநடத்துவோருக்குமான சாத்விகமான ஒழுக்கத்தினை உருவாக்குவதிலேயே அவர் முனைந்தார். தேசத்திலும் உலகெங்கிலும் பேராசையாலும் சுயநலத்தாலும்  உந்தப்பட்டு ஆணவத்துடன் நடைபெற்ற
வழிதவறிய
அரசியலை அவர் முற்றிலுமாக நிராகரித்தார். உண்மை, அஹிம்சை, சுயசார்பு, மனிதர்களுக்கு நிஜ சுதந்திரம் இவை கொண்ட தேசமாக பாரதம் விளங்கவேண்டும்  
இதுதான்
தேசத்திற்கும் மானுடத் திற்கும் என அவர் கண்ட கனவு.ந்த எண்ணம்  காந்திஜியின் வாழ்வெல்லாம் வியாபித்தது.
     1922 ஆம் ஆண்டு காந்தியடிகள் கைது செய்யப்பட்டதும் நாகபுரி நகர காங்கிரஸ் கிளை நடத்திய
பொதுக்கூட்டத்தில் பங்கேற்று டாக்டர் ஹெட்கேவார்
, காந்திஜியை புண்ய புருஷர் என்று வர்ணித்து உரை நிகழ்த்திய போது காந்திஜியின் சொல் செயல் இரண்டும் ஒன்றாக உள்ளதைக் குறிப்பிட்டார். தன் கருத்துக்களுக்காக அனைத்தையும் துறக்க தயாரானவர் காந்திஜி என்றார். காந்திஜியின்  புகழ்பாடுவதால் மட்டும் அவரின் பணி நிறைவேறிவிடாது. அவரின் குணநலன்களை வாழ்வில் கடைப்பிடித்தால்தான் அவரின் பணியைப் பூர்த்தி செய்ததாகும் என்றார் டாக்டர் ஹெட்கேவார்.
      அன்னியர்
ஆட்சி
யால் உருவா அடிமைப் புத்திவ்வளவு கேடானது என காந்திஜி அறிந்திருந்தார். அந்த மனநிலையை உதறி, உயர்ந்த சுதேசி நோக்கத்தில் பாரதம் செயல்பட்டு வளர்ச்சி
காணும் விதம் பற்றி
அவர் “ஹிந்த் ஸ்வராஜ்”
ல்
சித்தரித்துள்ளார். அன்றைய உலகில் அனைவரையும்
திகைக்க
ச் செய்யும் விதத்தில் மேற்கின் ஆதிக்கம் 
தன்
ஆட்சி அதிகார
பல
த்தின் மூலம் கல்வியை வக்கிரமாக மாற்றி  பொருளாதார ரீதியாக அனைவரும் தன் கையை எதிர்பார்த்து இருக்கச்
செய்து
உலகெங்கும் தன் உத்தியை, தன் சித்தாந்தத்தை பரப்பி வந்தது. அத்தகைய காலகட்டத்தில் சுயத்தின் அடிப்படையில் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் புதிய சிந்தனையை
பதியச் செய்திடுவதில் காந்திஜி செய்த முயற்சி மிக
வெற்றிகரமான பரிசோதனையாக அமைந்தது. ஆனால் அடிமை மனப்பான்மையில் திளைத்தவர்கள் சிறிதும் சிந்திக்காமல்
மேற்கிலிருந்து வந்த
வற்றை முக்கியமாக கருதி தன் முன்னோர்களின் 
பழம்பெருமை
, பண்புகள் இவை மட்டம்,  என்று கூறி ஒதுக்கி வைத்தார்கள். மேற்கைக் கண்மூடித்தனமாகக் காப்பியடித்து
அடிவருடித்தனத்தில் இறங்கினார்கள். 
இன்றும் அதன் மிகப்பெரிய தாக்கம் பாரதம் செல்லும் பாதையிலும் நடப்பு நிலவரத்திலும் காணப்படுகிறது.
     காந்திஜி காலத்திய பிறநாட்டு 
தலைவர்கள்  பாரதத்தை மையமாகக் கொண்ட அவரின் சில
கருத்துக்களை ஏற்று அதனை அவரவர் தேச நிர்மா
த்தில் தமதாக்கிக்கொண்டனர். காந்திஜி மறைந்தபோது “இவ்வுலகில்
இப்படியொரு மனிதர் வாழ்ந்து மறைந்தார் என அடுத்த தலைமுறை நம்புவது
கூட மிகவும் கடினம்” என்றார் ஐன்ஸ்டைன்.
அத்தகைய தூய எண்ணங்களுடன் ஒழுக்கநெறி நின்று தம்
வாழ்வையே உதாரணமாக நம்முன் வாழ்ந்து காட்டியுள்ளார்
காந்திஜி.
    காந்திஜி 1936 ல்வார்தாவிற்கு அருகில் நடைபெற்ற சங்க
முகாமுக்கு வருகை புரிந்தார். அடுத்த நாள் காந்தி
ஜி தங்கியிருந்த இடத்திற்கு டாக்டர் ஹெட்கேவார் சென்றார். அங்கு  காந்திஜியை சந்தித்து நீண்ட நேரம்
உரையாடினார். கேள்வி பதிலும் இடம் பெற்றது. அதன் விவரம் தற்பொழுது அச்சில் வெளிவந்துள்ளது. தேசப்பிரிவினை நடந்த கொடூர தினங்களில் தில்லியில் காந்திஜி தங்கியிருந்த இடத்திற்கு அருகில்
நடைபெற்ற ஷாகா
விற்கு காந்திஜி வருகை புரிவதுண்டு. அவரின் கருத்துரையும் ஷாகாவில் இடம்பெற்றது. அதன் தொகுப்பு
விவரமாக
 1947 டிசம்பர் 27 ஹரிஜன்பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
சங்க ஸ்வயம்சேவகர்களின் ஒழுக்க
த்தையும் சாதிபேதமற்ற இயல்பான தன்மையும் பார்த்து காந்திஜி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
“ஸ்வ” (சுயம்) என்ற அடிப்படையில் முழுமையான
பாரதத்தை
புதிதாக்க் கட்டமைக்கும் கருத்து உள்ளவர்கள், சமுதாய
சமத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும்
 முழுமையாக ஆதரிப்போர் ஆகியோருக்கு  முன்னுதாரணமாக காந்திஜியை நாம் அனைவரும் பார்த்து, புரிந்து கொண்டு கடைப்பிடிக்க வேண்டும். இந்த நற்பண்புகளின்
காரணமாகவே அவரிடம் சிறிது கருத்து வேறுபாடு உள்ள நபர்கள் கூட அவரை
மரியாதையுடன் பார்த்தார்கள்.
      ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் தினமும்
காலை ஒரு துதி
மூலம் தேசத்தின் மஹாபுருஷர்களை நினைவுகூர்கிற முறை சங்கம் துவங்கிய காலத்திலிருந்தே
நிகழ்ந்து வருகிறது.
1963 ல் இது திருத்தி எழுதப்பட்டபோது அதனில் சில புதிய பெயர்கள்
சேர்க்கப்பட்டன. அச்சமயத்தில் வணக்கத்திற்கு
ரி 
காந்தி
ஜி மறைந்துவிட்டிருந்தார். அவருடைய பெயரும் அதில் சேர்க்கப்பட்டது. இன்று அதை “ஏகாத்மதா
ஸ்தோத்திரம்” என்கிறோம்
. சங்க ஸ்வயம்சேவகர்கள் தினமும் காலையில் காந்திஜியின் பெயரை உச்சரித்து முன் சொன்ன அந்த உயர்ந்த நற்பண்புகளை கொண்ட அவரின்
வாழ்வை நினைவுகூ
ர்கிறார்கள்.
       அவரின் 150 வது பிறந்த தினத்தில் அவரை
நினைவுகூர்வதுடன் நாம் அனைவரும் ஓர் உறுதி ஏற்கவேண்டும்
. அதாவது அவரின் தூய்மை, தியாகம் பொருந்திய, ஒளிவுமறைவற்ற வாழ்க்கையையும் சுயசார்பு வாய்ந்த அவரது  வாழ்க்கைக் கண்ணோட்டத்தையும் பின்பற்றி பாரதத்தை உலகின் குருக்குவற்காக நம் வாழ்வையும் அர்ப்பணமும் தியாகமும் நிறைந்ததாக்கிட உறுதி ஏற்போம்.
===================================

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Maha-Seva Day observed to mark Gandhi Jayanthi

Wed Oct 2 , 2019
VSK TN      Tweet     Maha Seva Day observed by swayamsevaks across the nation every year on Gandhi Jayanthi day. In Perambur, Chennai around 290 people participated in maha-seva at three locations, cleaning temple premises, pond etc and distributed pamphlets creating environment awareness. In Vadapalani, Chennai around 200 people participated in cleaning the […]