துண்டு துண்டாய்ச் சிதறும் பாகிஸ்தான் -2

VSK TN
    
 
     

14 ஆகஸ்ட் 1947 ல் பாகிஸ்தான் உருவான பிறகு, பாகிஸ்தானின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதி கிழக்கு வங்காளமாகும். ரெட்கிளிஃப் வங்காளத்தின் கிழக்குப் பகுதியை பாகிஸ்தானின் கணக்கில் கொடுத்தார். அதே நேரத்தில் இந்தியாவுக்கு மேற்கு வங்கம் கிடைத்தது.

வேடிக்கையான விஷயத்தைப் பாருங்கள் – பாகிஸ்தான் பிறந்ததன் காரணமாக, வங்காளத்தில் முஸ்லிம் லீக் உருவானது. 30 டிசம்பர் 1906 ல், வங்கம் துண்டாடப்படும் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, டாக்காவின் நவாப் சலிமுல்லா கான், முஸ்லீம் லீக்கை நிறுவினார். முகமது அலி ஜின்னா, ஆகா கான் (III), குவாஜா சலிமுல்லா மற்றும் ஹக்கீம் அஜ்மல் கான் ஆகியோர் இணைந்திருந்தனர்.

பாகிஸ்தானை உருவாக்கும் செயல்பாட்டில், வங்காளத்தின் ‘நேரடி நடவடிக்கை தினம்’ (Direct action day) மிகப்பெரிய பங்கு வகித்தது. வங்காளத்தின் முஸ்லீம் லீக் அரசாங்கம் 1946 ஆகஸ்ட் 16 அன்று தனி பாகிஸ்தானை உருவாக்க வலியுறுத்தி நேரடி நடவடிக்கை தினத்தை அறிவித்தது. வங்காளத்தின் முஸ்லீம் லீக் முதல்வராக இருந்தவர் ஷஹீத் சுஹ்ரவர்தி. கல்கத்தாவில் ஒரே நாளில் 10,000 இந்துக்களை கொன்று ரத்த ஆறுகளை ஓடவிட்டார்கள். போதும், இது திருப்புமுனையாக இருந்தது, இதன் காரணமாக காங்கிரஸ் தலைகுனிந்தது. முதலில் பிரிக்க முடியாத பாரதத்தை பற்றி பேசிய காங்கிரஸ் இந்த ‘நேரடி நடவடிக்கை நாள்’ படுகொலையால் காங்கிரஸ் திகிலடைந்து ஒத்துக்கொண்டது. பின்னர் ஜூன் 3, 1947 இல், மவுண்ட்பேட்டன் பிரிவினையுடன் சுதந்திரத்தை முன்மொழிந்தபோது, காங்கிரஸ் உடனடியாக டெல்லியில் தனது செயற்குழுக் கூட்டத்தை அழைத்தது. 1947 ஜூன் 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெற்ற இந்த காங்கிரஸ் காரியக் கமிட்டி, இந்தியப் பிரிவினைக்கான முன்மொழிவை ஏற்று, பாகிஸ்தான் உருவாக வழிவகை செய்யப்பட்டது. இதன் அர்த்தம், பாகிஸ்தானை உருவாக்குவதில் வங்காளத்தின் பங்களிப்பு மிகப்பெரியது.

ஆனால் பாகிஸ்தானை முதலில் கற்பனை செய்த, ‘பாகிஸ்தான்’ என்ற பெயரை முதலில் பரிந்துரைத்த, ரஹ்மத் அலியின் கற்பனையில், பாகிஸ்தான் உருவானதில் வங்கம் எங்கும் இல்லை.

அதாவது பாகிஸ்தான் உருவான பிறகு, அதன் மிகப்பெரிய மாநிலமான ‘கிழக்கு வங்கத்தின் எந்த ஒரு  அடையாளமும் பாகிஸ்தானில் இல்லை.

ஆனால் பாகிஸ்தானை உருவாக்கியதிலும் புதிய பாகிஸ்தானை உருவாக்குவதிலும் வங்காளத்தின் பங்கு பெரியதாக இருந்தது. பாகிஸ்தானின் உருவாக்கத்திற்காக, பாகிஸ்தான் அரசியலமைப்பு சபையின் முதல் கூட்டம் 11 ஆகஸ்ட் 1947 அன்று ஜோகேந்திர நாத் மண்டல் தலைமையில் நடைபெற்றது. அவர் வங்காளத்தைச் சேர்ந்தவர். அவர் கிழக்கு வங்காளத்தில் கீர்த்தன்கோலா ஆற்றின் கரையில் அமைந்துள்ள பாரிசல் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை உருவாக்கப்பட்டது, அதில் முதலமைச்சராக இருந்த ஹமீதுல் ஹக் சவுத்ரியும் கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்தவர், பின்னர் வெளியுறவு அமைச்சரானார். வங்காளத்தைச் சேர்ந்த சர் குவாஜா நஜிமுதீன் பாகிஸ்தானின் முதல் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார், பின்னர் 1951 இல் ஒன்றரை ஆண்டுகள் பாகிஸ்தானின் இரண்டாவது பிரதமரானார். பாகிஸ்தானின் மூன்றாவது பிரதமர் முகமது அலி போக்ராவும் கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்.

பாகிஸ்தானின் ஐந்தாவது பிரதமரும் வங்காளத்தைச் சேர்ந்த ஷஹீத் சுஹ்ரவர்தி ஆவார். நேரடி நடவடிக்கை நாள் காரணத்தினால் பிரபலமானவர். அப்போது அவர் பிரிக்கப்படாத வங்காளத்தின் முதல்வராக இருந்தார்.

பாகிஸ்தானில் வங்காளத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கடைசி பிரதமர் நூருல் அமீன் ஆவார். அவர் 13 நாட்கள் பிரதமராக இருந்தார்.

பாகிஸ்தான் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பிரதமராக இருந்தவர் என்ற புகழ் அவர் பெயரில் இருந்தது. கிழக்கு வங்காளத்தில் ‘முக்தி-பாஹினி’ மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான கொரில்லாப் போர் நடந்து கொண்டிருந்தது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் மூண்டது. ஆனால் நூருல் அமீன் பங்களாதேஷிற்கான இயக்கத்தை நடத்திய அவாமி லீக்கில் இல்லை. . பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினராக இருந்தார். அவாமி லீக் இயக்கத்திற்கும் அதன் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கும் எரிச்சலூட்டும் வகையில், அமீன் சஹாப் பிரதமரானார். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வியுற்றிருந்தார்.

அதாவது, 1947 ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதில் இருந்து, பாகிஸ்தானின் மிகப்பெரிய மாநிலமான கிழக்கு வங்கம், ஏறக்குறைய  1971 வரை (அதாவது, கிழக்கு வங்கம் ‘பங்களா தேஷ்’ ஆக உருவெடுக்கும் வரை), பாகிஸ்தான் கிழக்கு வங்காளத்தில் ஆட்சி முறை பிரதிநிதித்துவம் பெற்றது. ஆனால் பாகிஸ்தானின் தலைநகர் முதலில் கராச்சியாகவும் பின்னர் ராவல்பிண்டியாகவும் இருந்ததால், கட்டுப்பாடு எப்போதும் மேற்கு பாகிஸ்தானின் கைகளிலேயே இருந்தது.

பாகிஸ்தானின் உருவாக்கத்தில் வங்காளத்தின் பங்கு மிக மகத்தானதாக இருந்தபோதிலும், வங்காள கலாச்சாரத்திற்கும் மேற்கு பாகிஸ்தானின் சிந்தி-பஞ்சாபி கலாச்சாரத்திற்கும் இடையே வானத்திற்கும் பூமிக்குமான வேறுபாடு இருந்தது. மொழி வேறு, உடை வேறு, உணவுப் பழக்கம் வேறு, பழக்க வழக்கங்களும் வேறு. அதனால் தான் ஒரே மதத்தை கொண்டிருந்த பிறகும் கூட, மேற்கு பாகிஸ்தானியர்கள் கிழக்கு பாகிஸ்தானின் பெங்காலி சமூகத்துடன் ஒட்டவே இல்லை.

பாகிஸ்தானின் உருவாக்கத்திற்குப் பிறகு, காயிதே ஆசம் ஜினா மார்ச் 1948 ல் கிழக்கு பாகிஸ்தானுக்கு (அதாவது கிழக்கு வங்காளம்) விஜயம் செய்தார். மார்ச் 19 ஆம் தேதி டாக்காவிற்கு வந்த அவர், மார்ச் 24 ஆம் தேதி டாக்கா பல்கலைக்கழகத்தின் கர்ஜன் ஹாலில்  மாணவர்களிடையே உரையாற்றினார்.

அனைத்து மாணவர்களும் பெங்காலி பேசுபவர்கள். ஆனால் ஜீனா வங்கமொழி அறியாதவர்.  அவருக்கு உருது கூட சரியாகப் பேசத் தெரியாது. அதனால் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார்.

அந்த பேச்சின் சாராம்சம், ‘பாகிஸ்தானில் உருது மட்டுமே செல்லும். இந்த ஒரு உருது மொழி மூலமே பாகிஸ்தான் இணையும்..” பல்கலைக்கழகங்கள் மட்டுமல்ல, மார்ச் 21 அன்று டாக்காவில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் (தற்போது – சுஹாரவர்தி உத்யன்) ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் ஜினாவும் இதையே கூறினார். அவரது ஆங்கிலப் பேச்சின் வார்த்தைகள்-

Let me make it very clear to you that the state language of Pakistan is going to be Urdu and no other language. Anyone, who tries to mislead you, is really the enemy of Pakistan. Without one state language, no nation can remain tied up solidly together and function. Look at the history of other countries. Therefore, so far as the state language is concerned, Pakistan’s shall be Urdu.’

(பாகிஸ்தானின் மாநில மொழி உருதுவாக இருக்கும், வேறு எந்த மொழியும் இல்லை என்பதை நான் உங்களுக்கு தெளிவாகக் கூறுகிறேன். உங்களை தவறாக வழிநடத்த முயல்பவர்கள் உண்மையில் பாகிஸ்தானின் எதிரிகள். ஒரே ஒரு மாநில மொழி இல்லாமல், எந்த தேசமும் உறுதியாக ஒன்றிணைந்து செயல்பட முடியாது. மற்ற நாடுகளின் வரலாற்றைப் பாருங்கள். எனவே, மாநில மொழியைப் பொறுத்தவரை, பாகிஸ்தானின் மொழி உருதுவாக இருக்கும்.)

கராச்சிக்குத் திரும்பும் வழியில், மார்ச் 28 அன்று, டாக்கா வானொலி நிலையத்தில் ‘உருது மட்டும்’ என்ற கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

(முறையே)

– பிரசாந்த் போல்

–  மாலதி அருள் (in tamizh)

Next Post

Annual Independence Day celebrations at RSS Headquarters

Tue Aug 15 , 2023
VSK TN      Tweet     RSS Sarsanghchalak Dr. Mohan Bhagwat Ji hoisted the National Flag and addressed the Independence Day Celebrations organised by Samartha Bharat at Vasavi Convention Hall, Bengaluru. Sarkaryavah Dattatreya Hosabale Ji was also present.           Sri Ma Ko Si Rajendran, RSS Akila Bharata Poorva Sainik Seva […]