வில்லுக்கு விஜயன் எனும் சொல்லுக்கு ஏற்றாற்போல் குன்னக்குடி என்றால் வயலின் வயலின் என்றால் குன்னக்குடி என்னும் அளவிற்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ள ஈடு இணையற்ற அற்புதமான வயலின் கலைஞர். அவர் வயலின் பேசும், அவர் வயலின் பாடும் , அவர் வயலின் மிமிக்கிரி செய்யும் , தன்னை ஒரு வயலின் வித்வானாக அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் மிகச்சிறந்த இசையமைப்பாளர் ஆவார். அதுமட்டுமின்றி பாடகர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இசை ஆராய்ச்சியாளர், […]

தமிழக மகாத்மா வ.உ. சிதம்பரம் பாரத நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய முக்கியமான வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள். பால கங்காதர திலகரால் ஈர்க்கப்பட்டு சுதந்திர போராட்டத்தில் இணைந்தார். 1905ம் ஆண்டு வங்கப் பிரிவினையை தொடர்ந்து நாட்டு மக்கள் கொந்தளித்தனர். இது சுதேசி இயக்கமாக மாறியது. சுதேசிய பண்டக சாலை, சுதேசி பிரச்சார சபை, நெசவு சாலை, கைத்தொழில் சங்கம் போன்றவற்றை நடத்தி வந்தார் வ.உ.சி. இவற்றின் மூலம் மக்கள் மத்தியில் […]

தாதாபாய் நௌரோஜி , (4 செப்டம்பர் 1825 – 30 ஜூன் 1917) இந்தியாவின் பெருமை மிக பெரியவர் (“இந்தியாவின் கிராண்ட் ஓல்ட் மேன்”) என்று அழைக்கப்பட்டவர் , மேலும் இவர் அன்று இங்கிலாந்து நாட்டில் முதல் முதலாக வியாபார ஸ்தாபனம் ஆரம்பித்த முதல் இந்தியர் என்பதால் – நல்ல செல்வாக்குடன் இருந்த படியால் – “இந்தியாவின் அதிகாரப்பூர்வமற்ற தூதர்” “Grand Old Man of India” and “Unofficial […]

நம் பாரத நாடு பல்வேறு வழிபாட்டு நம்பிக்கை உள்ளவர்களும் போராடி விடுதலை கண்டது. சுதந்திரம் பெற்ற பின்னர் சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்குமென பல சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. ஜுராஸ்ட்ரியன் மதத்தை சார்ந்த பாரசீகர்கள், சலுகைகளை மறுதலித்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள விழையாமல் முழுமையான அறப்பணிப்பு மனப்பான்மையோடு, பாலில் கலந்த சர்க்கரை போல தேசிய நீரோட்டத்தில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். நாட்டை உயர்த்தியுள்ளனர். அவர்களில் சிலர்- பாபா அணு மின் நிலைய […]

சுதந்திர போரட்டத்தின் ஆகப்பெரிய கிளர்ச்சி சிப்பாய் கலகம் என்போம்.அதற்கும் முன்பே அங்கொன்றும் இங்கொன்றுமாக அது தொடங்கிவிட்டது.இந்திய விடுதலை போரில் தமிழ்நிலத்திற்கு என்று பெருமைமிக்க வரலாறுகள் உண்டு.அதில் குறிப்பிடத்தக்க துவக்கத்தில் ஒன்று நெற்கட்டான்செவ்வல் மன்னர் பூலித்தேவரின் சுதந்திரப் போர். “வரகுணராமன் சிந்தாமணி காத்தப்ப பூலித்தேவன்” வழி வந்த பத்தாவது தலைமுறையான சித்திரபுத்திர தேவரின் புதல்வர்தான் ஆங்கிலேயரையும் நவாபையும் எதிர்த்த 4ம் காத்தப்ப பூலித்தேவர்.பாண்டிய மன்னரால் 14 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவர்கள் […]

எம்.எம்.தண்டபாணி தேசிகர் (1908 – 1972) “என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா” “காண வேண்டாமோ” “தில்லை என்றொரு தலமிருக்குதாம்” என்ற பாடல்களை கேட்கும்போது நந்தனார் திரைப்படத்தில் நடித்த திரு.எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்களின் நினைவு வரும். பரம்பரை பரம்பரையாக சிவத்தொண்டு புரிந்துவந்த ஓதுவார்கள் குடும்பத்தில் முருகையா தேசிகரின் குமாரர் முத்தையா தேசிகரின் மகனாக எம்.எம்.தண்டபாணி தேசிகர் 1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி நன்னிலம் அருகில் […]

நாமக்கல் கவிஞர் பாரதத்தின் சுதந்திர யுத்த வேள்வியில் தங்களை அளித்த நல்லோர்கள் பலர். அவர்களின் ஒருவர் தான் நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் காந்திய சிந்தனை கொண்டவர். சமயநெறியின் வழிநின்று சமத்துவம் பாடியவர். சமூக சீர்திருத்தத்தினை முன்னெடுத்தவர். தமிழறிஞர், தாய் தமிழை தேசம் முழுவதும் ஒலிக்கச் செய்ய உதவியவர். தமிழ் நதியினை தேசிய நீரோட்டத்தில் இணையச் செய்ய விரும்பியவர். பாரதியின் வழி நின்று எளிய நடை, எளிய பதம், புதிய சிந்தனை […]