19

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! அறநிலையத்துறையின் அலட்சியத்தை போக்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழகத் திருக்கோயில்களில் விடப்படும் பசுக்கள் கசாப்பிற்கு விற்கப்படுவதும், கோசாலைகள் என்ற பெயரில் தனியார் சிலர் நடத்துவோருக்கு அளிக்கப்பட்டு முறைகேடுகள் நடைபெற்ற செய்திகள் வெளிவந்துள்ளன. அதுவும் திருத்தணி கோயிலில் 6000 பசுக்கள் கணக்கில் காணவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கக்ககூடிய விஷயம். மக்கள் புண்ணியத்திற்கு கோயிலுக்கு என அளிக்கும் பசுக்கள் […]

22

10-10-2012 இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! விவேகானந்தர் இல்லத்தை நீண்ட குத்தகைக்கு அளித்த தமிழக முதல்வரைப் பாராட்டுகிறோம், தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்..சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படும் வேளையில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை நோக்கி உள்ள விவேகானந்தர்  இல்லத்தை 99 வருட குத்தகைக்கு ஷ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு அளித்துள்ளார்கள். இதனை […]

21

இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டுகிறோம்..   கயிலாய யாத்திரை மானியம் குழப்பத்தைப் போக்க நடவடிக்கை தேவை..   தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கயிலாய புனித யாத்திரைக்கும், முக்திநாத் யாத்திரைக்கும் மானியம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இது குறித்து சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறை, பத்திரிகை விளம்பரம் ஒன்று வெளியிட்டுள்ளது. முதலில் அரசு மானியம் வழங்கும் என்றே கூறப்பட்டது, […]

13

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! மழைநீரைச் சேமிக்க நடவடிக்கை எடுத்த முதல்வரைப் பாராட்டுகிறோம்.. தமிழகத்தின் முக்கிய தேவை தண்ணீரும், மின்சாரமும் ஆகும். இவற்றின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. அதற்கு ஏற்ப அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதனை உணர்ந்து தமிழக முதல்வர் இன்னும் 10 நாளில் வர இருக்கும் வடகிழக்குப் பருவமழையின் நீரைச் சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க […]

17

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! பாரதப் பண்பாடு, கலைகள், ஆகமங்கள் கற்பிக்க மீண்டும் பழநித் திருக்கோயில் கல்லூரியைத் துவக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.. சமீபத்தில் துக்ளக் வார இதழில் பழநித் திருக்கோயிலில் நடைபெற்று வந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் கோரிக்கை பிரசுரமாகியுள்ளது. 1980ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அந்தப் படிப்பில் வேதங்கள், சைவ, வைணவ ஆகமங்கள், ஆலய வழிபாடுகள், இந்தியக் […]

20

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! நித்திய அன்னதானத் திட்டை வரவேற்கிறோம், தமிழக முதல்வரைப்பாராட்டுகிறோம்..   தமிழகத்தின் முக்கியத் திருக்கோயில்களில் நித்திய அன்னதான திட்டத்தை அறிவித்து செயல்படுத்த உத்திரவிட்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை இந்து முன்னணி பாராட்டுகிறது. தமிழக திருக்கோயில்களில் தொன்றுதொட்டு பல்வேறு அறங்கள் நடைபெற்று வந்தன. அதில் முக்கியமானது அன்னதான தர்மம். அதனை மீண்டும் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தவர் தமிழக […]