PRESS NOTE by HINDU MUNNANI

22
VSK TN
    
 
     

10-10-2012
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!
விவேகானந்தர் இல்லத்தை நீண்ட குத்தகைக்கு அளித்த
தமிழக முதல்வரைப் பாராட்டுகிறோம்,
தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்..
சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படும் வேளையில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை நோக்கி உள்ள விவேகானந்தர்  இல்லத்தை 99 வருட குத்தகைக்கு ஷ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு அளித்துள்ளார்கள். இதனை இந்து முன்னணி வரவேற்கிறது, பாராட்டுகிறது. இது காலத்தில் செய்த பேருதவி. சுவாமி விவேகானந்தர் 1887ஆம் ஆண்டு சென்னை வந்தபோது ஐஸ்அவுஸ் கட்டிடத்தில் தங்கியிருந்தார். இங்கு ஷ்ரீ ராமகிருஷ்ண மடம் சில ஆண்டுகள் இயங்கியும் வந்தது. இந்த இல்லத்திற்கு சகோதரி நிவேதிதா வந்துள்ளார்கள். இப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இடத்தில் தற்போது விவேகானந்தரின் வாழ்க்கை, உபதேசங்கள், மற்றும் அரிய புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டு நேர்த்தியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பார்வையாளர்களிடம் சென்னையின் ஆன்மீகப் பெருமை விளக்கும் இந்த இல்லம், சுவாமி விவேகானந்தர் பற்றியும், ஆன்மீகச் சிந்தனையையும் இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் செல்லும் களமாகச் செயல்பட்டு வருகிறது.
நீண்ட குத்தகைக்கு அளிக்கப்பட்டிருந்த இந்த இடம், பிறகு வந்த அரசுகளால் புதுப்பிக்கப்படாமல் தொடர்ந்து குறுகிய கால குத்தகையாக நீட்டிக்கப்பட்டு வந்தது. இதனை மாற்றி மீண்டும் நீண்ட (99 வருட) குத்தகைக்குத் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்கள். மீண்டும் இதுபோன்ற நிலை வருங்காலத்தில் வராமல் இருக்க இந்த இடத்தை நிரந்தரமாக ஷ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு அளித்திட வேண்டும் என்று தமிழக முதல்வரை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. இத்தகைய நினைவு இடங்கள் வரலாற்றுப் பொக்கிஷங்கள். இதனைப் பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வரும் ஷ்ரீராமகிருஷ்ண மடம் தமிழகத்தின் ஆன்மீகக் கேந்திரமாகும். சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி பெருவிழாவின் போது இத்தகைய நற்செயலை தமிழக அரசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Tawang Yatra: A movement against Chinese dominance

Fri Oct 12 , 2012
VSK TN      Tweet     Tawang Yatra: A movement against Chinese dominance   Guwahati (Oct 10): Sonam Tsering, has never seen his mother land yet but dreams to be in Tibet. “If not me, at least the upcoming generations will breath the free air of their native land” said Tsering, “To live in Tibet […]