Press Release by Hindu Munnani

16
VSK TN
    
 
     

26-6-2013 இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!
காஷ்மீர் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.. நேற்று முன்தினம் (24-6-2013) இராணுவ முகாம் மீது இந்திய முஜாஹூதீன் எனும் காஷ்மீர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் திடீர் தாக்குதல் நடத்தி 8 பேரை கொன்றுள்ளதும், பத்துக்குமேற்பட்டவர்கள் படுகாயத்தோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதும் நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  மிகுந்த பாதுகாப்பு நிறைந்த இடத்தில் இத்தகைய தாக்குதல் நடந்திருப்பது கவலையளிக்கிறது. இந்தத் தாக்குதல் திட்டமிட்ட ரீதியில் நடத்திருக்கிறது. நமது இராணுவ வீரர்களிடையே இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு உளவு சொல்லும் புல்லுருவி இருக்கலாமோ என சந்தேகம் எழுகிறது. பாரத நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் இருந்த சர்தார் வல்லாபாய் பட்டேல் அவர்கள் இந்த நாட்டை ஒருங்கிணைத்தார், காஷ்மீர் பகுதியை மட்டும் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு இணைத்திட கையில் எடுத்துக்கொண்டு, தனது நண்பர் ஷேக் அப்துல்லாவை தஜா செய்ததன் விளைவு பிரிவினைவாதம் எனும் தீராத நோய் பற்றிக்கொண்டு தொல்லை கொடுத்து வருகிறது. காஷ்மீர் மாநிலத்திற்குத் தனி அந்தஸ்தை வழங்கும் 370வது பிரிவால், காஷ்மீர் தனிநாடாகவும் அங்கு செல்ல பர்மிட் வாங்க வேண்டும் என்றும், தனிக்கொடி, தனி பிரதமர் என்றும் இருந்ததை தனியொருவராக மனிதராக சென்று சத்தியாகிரகம் செய்து எதிர்த்தவர் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபகர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி. அவரை கைது செய்து சிறையில் அடைத்த ஷேக் அப்துல்லா அரசு, அவருக்கு சிறையில் விஷம் கொடுத்து கொன்றதாக அப்போது செய்திகள் வந்தன. முகர்ஜியின் உயிர்தியாகத்தால் காஷ்மீருக்கு பர்மிட் வாங்க வேண்டும் என்பதை ரத்து செய்தும், மேலும் சில மாற்றங்களையும் மத்திய அரசு செய்தது. ஆனாலும் தொடர்ந்து காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு நீக்கப்படாமல் இருந்து வருகிறது. இதுவே பிரச்னையின் ஆரம்பம், இதனை நீக்கினால் எல்லாம் சரியாகிவிடும். சமீபகாலமாக காஷ்மீர் பயங்கரவாத ஆதரவாளர்களான யாசின் மாலிக் போன்றவர்களின் தூண்டுதலால் காஷ்மீர் மாணவர்கள் சிலர் இராணுவத்தினர் மீது கற்களை எறிந்து கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், இராணுவத்தினர் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் மனித உரிமை மீறல் என்று பசப்புவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. காஷ்மீரில் இராணுவப் பாதுகாப்பை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா வலியுறுத்தி வருகிறார். இராணுவத்தினர் மீதே தாக்குதல் நடத்தும் அளவிற்கு பயங்கரவாதம் வளர்ந்துள்ள நிலையில் இராணுவத்தை வாபஸ் பெற்றால் சாதாரண பொதுமக்கள் நிலை என்னவாகும்? பொறுப்பற்ற மாநில அரசு, பயங்கரவாதிகளுக்கு பயந்து நடுங்குவதையே இந்தக்கோரிக்கை காட்டுகிறது. எனவே, மத்திய அரசு காஷ்மீரில் தலைவிரித்தாடும் முஸ்லீம் பயங்கரவாத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. அத்துடன் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்க வேண்டும். பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர் இழந்த இராணுவத்தினருக்கும், உத்தாராகண்ட் வெள்ளத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் ஹெலிக்காப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கும் இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவர்களது ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Sewa activity in Uttranchal by RSS swayamsevaks

Wed Jun 26 , 2013
VSK TN      Tweet    RSS sewa activities in Uttranchal published in some papers like Punjab Kesari, Rashtriya Sahara etc.