Muslim Attrocities in Nilgiri and Coimbatore Area (Tamilnadu) – a Report

18
VSK TN
    
 
     
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கொடூரத் தாக்குதல்கள்:   நிகழ்வு– 1   கடந்த தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று (14.04.2013), மாலையில், நீலகிரி மாவட்டம், உதகையில் ஏ.டி.சி. திடலில், இந்து முன்னணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது சில முஸ்லிம் இளைஞர்கள் கூட்டத்தில் புகுந்து கலாட்டா  செய்தனர். காவல்துறையினர் தலையிட்டு அவர்களை வெளியேற்றினர்.   இந்தப்  பொதுக்கூட்டம் முடிந்து, தனது சரக்கு ஆட்டோவில், எச்.எம்.டி. பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மஞ்சுநாத் (34). அப்போது 20 இரு சக்கர வாகனங்களில் அவரைப் பின்தொடர்ந்து வந்த முஸ்லிம் இளைஞர்கள், ராகவேந்திரர் கோவில் அருகே ஆட்டோவை  மறித்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.   அவர் வந்த சரக்கு ஆட்டோவைத் தாக்கிய அந்தக் கும்பல், ஆட்டோவிலிருந்து மஞ்சுநாத்தை இழுத்துவந்து நடுரோட்டில் அரிவாள், இரும்புக் கம்பிகள், தடிகளால் கொடூரமாகத் தாக்கியது. இதில் அவர் தலையில் பலத்த காயங்கள் அடைந்துள்ளார். அவரது அலறல் கேட்டு ஓடிவந்த மக்களைக் கண்டவுடன் கொலைவெறிக் கும்பல் தப்பிவிட்டது. அவர் தற்போது கோவையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுகிறார்.   இச்சம்பவத்தைக் கண்டித்து உதகையில் 15-ம் தேதி முழு கடையடைப்பு நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் தொடர்பாக தமுமுகஅமைப்பைச் சேர்ந்த ரியாஸ் (28), பைசல் (27), அப்துல் ரஹ்மான் (38),  இம்தியாஸ் (24), பைரோஸ் (20) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.    நிகழ்வு – 2:   உதகையில் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து குன்னூரில் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருந்தது. அது தொடர்பான சுவரொட்டியை இந்து முன்னணியினர் குன்னூர் பஸ் நிலையம் அருகே 16 –ம் தேதி இரவு ஒட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 100-க்கு மேற்பட்ட முஸ்லிம்கள்  திரண்டு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வந்த காவல் துறையினர் தடியடி நடத்தி உள்ளனர்.   இந்த நேரத்தில், ஏற்கனவே திட்டமிட்டு ஆயுதங்களுடன் வந்திருந்த முஸ்லிம் கும்பல் மீண்டும் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஐவர் தாக்கப்பட்டனர்; இதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.   இவர்களில் இந்து  முன்னணியின் (இன்னொரு) மாவட்டச் செயலாளர் ஹரிஹரன் (32), தலையில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான  நிலையில் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். வெங்கட்ராஜ்  என்ற இந்து முன்னணி தொண்டர் உடல் முழுவதும் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பிளேடால் கிழிக்கப்பட்டுள்ளார். ஜெயகுமார் என்ற இந்து முன்னணி தொண்டர் தலையில் தாக்கப்பட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.   இந்தத் தாக்குதல் தொடர்பாக இதுவரை (17-ம் தேதி மதியம் வரை) குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. காவல்துறையினர் இருக்கும் போதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத் தக்கது.   முஸ்லிம் கும்பல்களின் கொலைவெறித் தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடும் நால்வரையும் இந்து முன்னணி மாநில அமைப்பாளர்  முருகானந்தம், மாநிலச் செயலாளர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட இந்து இயக்கத் தலைவர்கள் நேரில்  சந்தித்தனர்.   இந்து இயக்கத்தினர் மீது தொடர்ந்து நடைபெறும் கொலைவெறித் தாக்குதல்களைக் கண்டித்தும், இத்தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், வரும் வெள்ளிக்கிழமை (19-ம் தேதி) கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பந்த் நடத்த இந்து முன்னணி அழைப்பு விடுத்திள்ளது.    சில அண்மைக்கால நிகழ்வுகள்:   1. கடந்த ஆண்டு (06.11.2012) மேட்டுப்பாளையத்தில் திருப்பூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். செயலாளர் எஸ்.ஆனந்த் முஸ்லிம் குண்டர்களால் கொலைவெறித்  தாக்குதலுக்கு ஆளானார். இந்த தாக்குதலில் ஆனந்தின் முகம் கடுமையாக சிதைக்கப்பட்டது. தெய்வாதீனமாக, தீவிர மருத்துவ சிகிச்சையால் அவர் உயிர் பிழைத்தார். எனினும் இன்னமும் அவர் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை. இத்தாக்குதலுக்கு காரணமான கயவர்கள் மீது இன்னமும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.   2. கோவையில் சில இடங்களில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அந்த இடங்களில் இந்துக்களின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் பொது வழித்தடங்களைப் பயன்படுத்தக்கூட விடாமல் முஸ்லிம்கள் இந்துக்களைத் தடுக்கின்றனர்.   கோட்டை மேடு, உக்கடம்அல்அமீன் காலனி, செல்வபுரம், குனியமுத்தூர், ஆத்துப்பாலம் பகுதிகளில் இது தொடர்பாக மோதல்கள் நடந்து வருகின்றன. சட்டத்தைக் காக்க வேண்டிய ஆட்சியரும், காவல் துறையினரும், இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில்லை.   3. கோவையில் உள்ள ஒரு இந்து இயக்கத் தலைவரின் வீட்டில் (இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத்) கடந்த ஏப்ரல்  13- ம் தேதி பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.   4. கடந்த 2010 விநாயக சதுர்த்தியின் போது, கோவையில் உக்கடம், குனியமுத்தூர், மதுக்கரை, மேட்டுப்பாளையம், செல்வபுரம் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதற்கு முந்தைய  ஆண்டு திருப்பூரில் ஸ்ரீநகர் பகுதியில் விநாயகர் ஊர்வலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து முன்னணி  தொண்டர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.   அரசுக்கு வேண்டுகோள்:   தற்போது நடைபெற்றுவரும் சம்பவங்களைப் பார்க்கும்போது, அமைதிப்பூங்காவான தமிழகத்தில் மீண்டும் முஸ்லிம் பயங்கரவதிகள் தலையெடுத்து வருவது திண்ணமாகத் தெரிகிறது.   இந்த ஆபத்தான நிலையை முளையிலேயே கிள்ளி எறிய  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் லாபத்துக்காக, இந்துக்கள் தாக்கப்படுவதை அரசியல் கட்சிகள் வேடிக்கை பார்க்கக் கூடாது. கோவை நகரம் ஏற்கனவே 1998-ல் வெடிகுண்டு தாக்குதலால் நிலைகுலைந்த நகரம். அங்கும், அதன் அருகில் உள்ள மாவட்டங்களிலும் நிலவும் அசாதரணமான சூழலைக் கருத்தில் கொண்டு நேர்மையாகவும், துணிவாகவும் நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர்  முன்வர வேண்டும்.  

  சில முந்தைய அனுபவங்கள்:   30.08.1989: கோவையில் இந்துமுன்னணி செயலாளர் வீரகணேஷ் கொல்லப்பட்டார்.   05.09.1991: கோவை இந்து முன்னணியின் முக்கிய பொறுப்பாளர் சிவகுமார் அவரது வீட்டின் அருகிலேயே பட்டப்பகலில் கொல்லப்பட்டார்.   15.04.1995: கோவை பா...பிரமுகர் ராஜேந்திரன் கொல்லப்பட்டார்.   31.12.1995: இந்து முன்னணி உறுப்பினர் கார்த்திகேயன் மேட்டுப்பாளையத்தில் கொல்லப்பட்டார்.   31.01.1997: கோவையில் ஏற்பட்ட கலவரத்தில் (20-01-1997 அன்று பொள்ளாச்சியில் ஜிகாத் கமிட்டி என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் பழனிபாபா கொலையை அடுத்து), செல்வபுரம் என்னுமிடத்தில் ஆட்டோ டிரைவர் ரகுபதி கொல்லப்பட்டார்.   03.02.1997: கோவையில் மரக்கடை என்னுமிடத்தின் அருகே சென்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருஷ்ணசாமி (நெற்றியில் விபூதிகுங்குமம் வைத்திருந்தார் என்ற காரணத்திற்காக) கொல்லப்பட்டார்.   01.09.1997: மகேந்திரன், அருணாசலம், ரஜினி ரமேஷ் ஆகியோர் கோவையின் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் கொல்லப்பட்டனர்.   02.09.1997: திரிக்மரா ராம் (ஐந்து முனை), மூர்த்தி (போத்தனூர்), முருகன் (ஆசாத் நகர்),  கண்ணன் ஆகியோர்  வெவ்வேறு இடங்களில் கொல்லப்பட்டனர்.   1997: முஸ்லிம் பயங்கரவாதிகளை எதிர்த்த காரணத்துக்காக, உக்கடம் பகுதியில் கோட்டை  அமீர் என்ற பெரியவர் கொல்லப்பட்டார். (இவரது பெயரில் மாநில அரசு, மதநல்லிணக்க விருது வழங்கி வருகிறது.)   1997: கோவை சிறையில் ஜெயிலர் பூபாலன் கொல்லப்பட்டார்.   29.11.1997: போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் உக்கடம் என்னுமிடத்தில் நடுரோட்டில், முஸ்லிம் இளைஞர்களின் தவறை சட்டப்படித் தட்டிக் கேட்டதற்காக, அவர்களால் கொல்லப்பட்டார்.   28.03.2002: ஆர்.எஸ்.எஸ். பிரசாரச் செயலாளர் முருகேசன், கோவையின் புறநகரான குனியமுத்தூரில், அவரது வீட்டருகிலேயே கொல்லப்பட்டார்.   இப்பட்டியலின் படி, கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த இருபதே வருடங்களில், 17 பேர்கள் (ஒரு முஸ்லிம் நபர் உட்பட) பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் கொலைவெறித் தாக்குதலுக்கு உட்பட்டு பின்னர் தெய்வாதீனமாக உயிர் பிழைத்தோரும் உண்டு.   1982:  கோவை, தேர்நிலைத்திடலில் நடந்த பா... பொதுக்கூட்டத்தை அடுத்து, அதில் பங்கேற்ற ஜனா.கிருஷ்ணமுர்த்தி, நாராயண ராவ், திருக்கோவிலூர் சுந்தரம், டி.ஆர்.கோபாலன் ஆகியோர் இஸ்லாமியப் பயங்கரவாதிகளால்  கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதில் திருக்கோவிலூர் சுந்தரம் பிழைப்பது அரும்செயலாகிவிட்டது.   18.07.1984:  மதுரையில், இந்து முன்னணி மாநில அமைப்புச் செயலாளராக இருந்த ராம.கோபாலன் அல் உம்மா தலைவன் பாஷாவால் தலையில்  வெட்டப்பட்டார்.  இதில் தெய்வாதீனமாக கோபால்ஜி உயிர் தப்பினார்.   1988: கோவைதியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் நாராயணன், சக்திதாசன், சாமிநாதன் ஆகியோர் படுகாயம் அடைந்து, உயிர் தப்பினர்.   31.12.1995: இந்து முன்னணி ஆதரவாளரான டாக்டர் ஹிரியன் மேட்டுப்பாளையத்தில் அவரது கிளினிக்கில்  தாக்கப்பட்டார். கத்திக்குத்துக் காயங்களுடன் அவர் உயிர் பிழைத்தார்.   மேலும், காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டதை அடுத்து (29.11.1997), போலீசார் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மறியல் செய்தனர். தொடர் கலவரத்தில், இரு தரப்பிலும் பலர் உயிர் இழந்தனர்.  பின்னர் உச்சக்கட்டமாக, 14.02.1998 அன்று, மாபெரும் சதிச் செயலாக பா... தலைவர் அத்வானியைக் குறிவைத்து  கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதில் 46 அப்பாவி இந்துக்கள் உட்பட 60 பேர் பலியானார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Report of fact finding team on V.Kalathur communal riots, Perambalur

Thu Apr 18 , 2013
VSK TN      Tweet     A village, V.Kalathur in vepamthattai taluk in Perambalur district, Tamil Nadu, where people of various religion were living in perfect harmony for decades, has been witnessing frequent communal riots in past couple of years. This year in January and February 2013, the village has seen communal riots. Several […]