ப ஞ் சா மி ர் த ம்

VSK TN
    
 
     

ப ஞ் சா மி ர் த ம்
இன்று (2024 ஜூன் 6) அமாவாசை. பஞ்சாமிர்தம் படியுங்கள்

1. பலே பிரதீப் ஷெட்டி
மே 26 அன்று உடுப்பி மாவட்டத்தில் (கர்நாடகா) இன்னாஞ்சே – படுபித்ரி இடையே தண்டவாளத்தில் வெல்டிங் பழுதடைந்ததைக் கவனித்த ஒரு தண்டவாளப் பராமரிப்பாளர் (காங் மேன்) பிரதீப் ஷெட்டி ரயில் விபத்தைத் தடுத்தார். அதிகாலை 2:25 மணி. பழுது குறித்து அவர் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து பழுதடைந்த பாதையை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல விரைவு ரயில்கள் சில மணிநேரங்களில் அந்த இடத்தை கடக்க வேண்டியிருந்தது. காலை 6 மணிக்கு ரயில் போக்குவரத்து சீரானது. அன்று நண்பகல் கொங்கன் ரயில்வே உயர் அதிகாரிகள் பிரதீப் ஷெட்டிக்கு ₹25,000 ரொக்கப் பரிசு வழங்கினார்கள்.
ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா, மே 27, 2024.

 

2 சான்றோனாக்கிய தந்தை
மத்தியப் பிரதேசம் பர்வணி மாவட்டம் கர்கோன் கிராமத்தில் வசிக்கும் செங்கல் சூளை தினக் கூலி தொழிலாளர் ஒருவர் தன் 16 வயது மகனை ஒரு ஏ டி எம் மில் இருந்து 4,700 ரூபாய் எடுத்துவரச் சொல்லி அனுப்பினார். தெருவில் ஒரு கார்டு கிடந்தது. அதை அவன் எடுத்துக் கொண்டான். சமூக ஊடகத்தில் பார்த்து கற்றுக்கொண்ட ஒரு வித்தை உண்மைதானா என்று பார்க்கத் தோன்றியது. ஏ டி எம்மில் அந்த எண்ணை அடித்தான். 10,000 ரூபாய் வந்து விழுந்தது. மறுபடியும் அது போல செய்தான்; 5,000 ரூபாய் வந்து விழுந்தது. அன்றைய பரிவர்த்தனை அவளவளவுதான் என்று ஏ. டி. எம் இயந்திரம் தெரிவித்தது. கிடைத்த தொகையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போனான். 25,000 ரூபாயை அப்பாவிடம் கொடுத்தான். உடனே அவர் மகனையும் அழைத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றார். “ஏடிஎம் இயந்திரம் எப்படி இயங்குகிறது என்று எனக்கு தெரியாது. ஆனால் இந்தப் பணம் வேறு யாரோ ஒருவருடையது என்பது தெரியும்” என்று கூறி ரொக்கத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
ஆதாரம்: ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, 2024 மே 28.

3 மந்தைவீர சாமிக்காக சொந்த வீடே காணிக்கை
ஒரு கோவிலை இடிக்காமல் காப்பாற்ற ஒரு கிராமமே தியாகம் செய்த கதை இது. மதுரைக்கு அருகில் உள்ளது மேலூர். தெற்குத் தெருவில் கிராம தேவதையான மந்தை வீரன் கோவில் உள்ளது. சாலை விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்த அரசு அதிகாரிகள் முயற்சித்தனர். கோயிலும் கையகப்படுத்த வேண்டிய நிலத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியது. தெருவை நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்த கோவிலை இடிக்க போவதை அறிந்த கிராம மக்கள் சீறினர். கோயில் இடிக்கப்படுவதைத் தடுக்க எந்த விலையையும் கொடுக்கத் தயார் என்று அறிவித்தனர். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதற்கு மாற்றாக அருகில் உள்ள 100 வீடுகளையாவது இடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு கிராம மக்கள் உடனடியாக சம்மதித்து, அவர்களே தங்கள் வீடுகளை இடிக்க ஆரம்பித்தனர். தங்களுக்கு மிகவும் பிடித்த கோவிலை காப்பாற்ற இந்த ஹிந்துக்கள் இவ்வளவு பெரிய விலை கொடுத்துள்ளனர்.
ஆதாரம்: தினமலர், பிப்ரவரி 9, 2007

4 மாநிலம் பலவாய் பிரிந்திருந்தாலும் மக்கள் நாம் ஒன்றே
தஹிபாரா. கடற்கரையிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் ஒரிசாவின் ஒரு குக்கிராமம். இது 1,050 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது – ஆம், இருந்தது. 1999 அக்டோபரில், மாநிலத்தின் 5 கடலோர தாலுக்காக்களை பேரழிவிற்கு உட்படுத்திய சூப்பர் சூறாவளியால் இவர்களில், 587 பேர்,
கொல்லப்பட்டனர். தஹிபாராவில் இருந்து தப்பியவர்கள் நிவாரண முகாமில் தற்காலிக பாலித்தீன் கூடாரங்களில் தங்கள் வாழ்க்கையை சரிசெய்ய முயன்றபோது, குஜராத்தின் சில பகுதிகளில் பூகம்பம் ஏற்பட்டது. ஒரிசாவின் இந்த கிராம மக்கள் ரூ. 7,000 திரட்டினார்கள். தொகையை குஜராத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று அவர்கள் உடனடியாக ஒரிசா முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆதாரம்: த ஹிந்து, 2001 பிப்ரவரி 22.

5 பாலைவன மண்ணில் தழைக்கும் தேசபக்தி
ராஜஸ்தானின் பாலைவன மத்தியில் உள்ள போகரண் கிராம மக்களைப் பாரீர். அவர்கள் இரண்டு நிலத்தடி அணுசக்தி சோதனைகளை பார்த்துள்ளனர். ஒன்று 1974 ல்; மற்றது 1998 மே 11 அன்று. இரண்டாவது சோதனைக்கு முன், ஒரு ராணுவ அதிகாரி கிராமவாசிகள் சிலருடன் உரையாடினார். சில ராணுவ வீரர்கள் அந்த இடத்தில் வழக்கமான ரோந்துப் பணி செய்வார்கள் என்று அவர் சூசகமாக கூறினார். கிராம மக்கள், “சார், குண்டுதானே? நாங்கள் ரகசியத்தை காப்போம். கவலைப்பட வேண்டாம்” என்று பதிலளித்து அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். அப்படியே செய்தனர். சிஐஏவின் கண்காணிப்பு செயற்கைக் கோள்களின் முயற்சிகள் கூட வெடித்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை ஊடக செய்திகள் பின்னர் வெளிப்படுத்தின.
ஆதாரம்: 1998 இந்தியா டுடேயில் ராஜ் செங்கப்பா எழுதிய கவர் ஸ்டோரி.

Next Post

पंचाम्रित

Thu Jun 6 , 2024
VSK TN      Tweet    पंचाम्रित ।। (संस्कृत में पंच का अर्थ पाँच होता है। अम्रित अच्छी है) आज (2024 जून 6) अमावास्या है, और आपके समक्ष ‘पंचाम्रित’! 1. एक की सतर्कता बचाई हज़ारों के जीवन। प्रदीप शेट्टी, एक ट्रैक मेंटेनर (गैंगमन) ने 26 मई रात 2:25 को उडुपी जिले (कर्नाटक) में इन्नांजे – […]