செண்பகராமன் பிள்ளை ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெளிநாட்டில் ராணுவப்படையை உருவாக்கியதில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முன்னோடி.
திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட எட்டு வீட்டு பிள்ளைமார் எனப்படும் பெயரும் போரும் மிக குடும்பத்தில் பிறந்தவர் இளம் வயதிலேயே பேரறிவும் பெரும் ஆற்றலும் இயல்பாகவே வருடம் குடி கொண்டிருந்தது.
முதலாம் உலகப் போரில் ஜெர்மனியப்படைகளுக்கும் நேச நாடுகளுக்கும் இடையில் மிகவும் முக்கியமான போர் நடந்து கொண்டிருந்த காலகட்டம்.
ஜெர்மானிய நீர்மூழ்கி கப்பலான எம்டன் இந்திய பெருங்கடலில் பல பிரிட்டிஷ் போர்க்கப்பல்களை தவிர்த்து பிரிட்டிஷ் காலனி ஆதிக்க நாடுகளின் மீது கடுமையான தாக்குதலை தொடுத்துக் கொண்டிருந்தது.
1914 செப்டம்பர் 22ஆம் நாள் எம்டன் நீர்மூழ்கி கப்பல் சென்னை காரில் வந்தது அந்த நீர்மூழ்கி கப்பலின் தலைமை அதிகாரியாக இருந்தவர் இளம் வயது செண்பக ராமன் பிள்ளை ஆவார்.
இவர் இந்திய புரட்சி படை வீரராய் வெளிநாடுகளில் ஆங்கிலேயருக்கு எதிராக போர் தொடுக்கும் யுகத்தை அமைத்து ஆங்கிலேயரை நமது தாய் திருநாட்டில் இருந்து அகற்றும் மாபெரும் பணியில் ஈடுபட்டிருந்தார். ஆங்கிலேய அரசாங்கமானது செண்பகராமன் பிள்ளையை பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தால் ஒரு லட்சம் பவுண்டு வைக்கும் போது அறிவித்திருந்தது என்பதிலிருந்து அவர் எந்த அளவிற்கு ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.ஆனால் அவர் இறுதி வரை ஆங்கிலேயர்களின் கையில் அகப்படாமல் மிக சாதுரியமாக தப்பி வந்தார்.
லோகமான்ய திலகர் உடைய பத்திரிக்கையான கேசரியில் அவருடைய எழுத்துக்கள் செண்பகராமன் பிள்ளையை ஒரு முதல் நிலை புரட்சியாளராக மாற்றிவிட்டது. லோகமான்ய திலகர் கைது செய்யப்பட்டு மாண்டலே சிறைக்கு நாடு கடத்தப்பட்ட செய்தி செண்பகராமன் மனதை மிகவும் பாதித்தது.அதன் விளைவாக தனது வாழ்க்கை இந்திய சுதந்திரத்திற்காக முழுவதும் அர்ப்பணிக்க அவர் முடிவு செய்தார்.அவரை பொறுத்தமட்டில் ஆங்கிலேயரின் எதிரிகளோடு இணைந்து போர்த்தாக்குதல் மூலம் மட்டுமே ஆங்கிலேயர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற முடியும் என்று அவர் நம்பினார். அவருக்கு 17 வயதாக இருந்தபோது ஜெர்மானியர்கள் வேவு பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஆங்கிலேயனின் தொடர்பு கிடைத்ததால் அவருடைய உதவியோடு அவர் தனது வீட்டை விட்டு தனது நாட்டை விட்டு வெளியேறினார். இந்தியாவிலிருந்து வெளியேறிய செண்பகராமன் முதலில் இலங்கையில் உள்ள கொழும்பு வரை அடைந்து அங்கிருந்தார்.அங்கே அவர் தனது மேற்படிப்பை முடித்து பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.அதே நேரத்தில் முதலாம் உலகப் போர் தொடங்கியது. இந்தியாவிற்காக ஒரு போர்ப்படையை உருவாக்கி ஆங்கிலேயரை தாக்க வேண்டும் என்று எண்ணி இருந்த செண்பகராமனுக்கு அந்த பொன்னான வாய்ப்பும் கடந்து வந்தது .
1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அங்கே உள்ள ஜெர்மனிய தூதரகத்தின் உதவியோடு அவர் சர்வதேச இந்திய கமிட்டியை உருவாக்கினார். சூரிச் நகரை தலைமையகமாகக் கொண்டு அந்த கமிட்டியின் தலைவராக தன்னையும் அவர் அறிவித்தார் முதலாம் உலகப் போர் அறிவிக்கப்பட்ட உடனேயே இந்த இந்திய கமிட்டியும் அறிவிக்கப்பட்டு விட்டது.இதன் மூலம் வெளிநாடுகளில் தங்கி இருந்த இந்திய புரட்சியாளர்களை ஒருங்கிணைக்கும் பணியும் இந்திய விடுதலைக்கான வேகமும் தொடங்கியது.இதன் மூலம் செண்பகராமன் பிள்ளையின் தொலைநோக்கு நன்கு புலனாகிறது. போரினால் ஏற்பட்ட புதிய சூழ்நிலையில் வெளிநாடு வாழ் புரட்சியாளர்கள் செண்பகராமன் பிள்ளையின் அணி திரண்டு இந்திய விடுதலைக்கான வழிமுறைகளை ஆலோசிக்க தொடங்கினர்.
முதல் உலகப்போரில் அவர் இந்திய தேசிய தன்னார்வப் படையினை உருவாக்கினார். அதன் மூலம் பொருள் ஈடுபட்டுள்ள எந்த நாட்டின் தலைமையோடும் நேரடி தொடர்பை பெறுவதற்கான ஒரு வாய்ப்பையும் அவர் உருவாக்கினார்.
1914 ஜூலை மாதம் பிள்ளை அவர்கள் பெர்லினில் இருந்து கொண்டு இந்திய சிப்பாய்களுக்கு ஒரு தகவல் கொடுத்தார்.அதன்படி அவர்கள் புரட்சியில் ஈடுபட்டு ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சி செய்து இந்தியாவை ஆங்கிலேயரின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதோடு மற்றும் நின்று விடாமல் ஜெய்ஹிந்த் என்ற வீர, தீர கோஷத்தை உருவாக்கி அனைவராலும் வீரகர்ஜனையோடு முழக்கம் இடச் செய்தார். இவரது ஜெய்ஹிந்த் கோஷமும் பத்திரிகையில் பிரசுரித்த படைப்புகளும் இந்தியாவில் வசித்து வந்த சுபாஷ் சந்திர போஸ் போன்ற ஆயிரக்கணக்கான வீர கொண்ட இளைஞர்களை சுதந்திரப் போராட்டத்திற்குள் மிக வேகமாக களமிறங்குவதற்கு வழிகோலின.
1919இல் பிள்ளையவர்கள் நேதாஜியை வியன்னாவில் சந்தித்தபோது தனது திட்டத்தை அவருக்கு விவரித்தார். அதன்படி அப்போது பிள்ளை அவர்களால் வழிநடத்தப்பட்ட ராணுவப்படை உருவாகும் திட்டத்தினை பின்பற்றி நேதாஜி அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து இரண்டாம் உலகப் போரின் போது இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து வெற்றி கண்டார்.
ஒரு சமயம் செண்பகராமன் ஹிட்லருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது “இந்தியர்கள் பிரிட்டிஷாருக்கு அடிமையாக இருக்கவே தகுதி பெற்றுள்ளார்கள்; இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தால் நாட்டை திறமையாக ஆளும் தகுதி இந்தியருக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே” என்று இந்தியரை தாழ்த்திக் கூறினார் ஹிட்லர் அதிபர். ஹிட்லரின் இந்த இழிச்சொல் செண்பகராமன் பிள்ளையை மிகவும் கோபாவேசத்திற்கு உள்ளாக்கியது. அதனால் ஹிட்லருக்கு நேராகவே எதிர்த்து திறமையாக வாதாடி எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்பு கோர வைத்தார்.இதனை தனது மனதிற்குள் வஞ்சனையாக வைத்திருந்த ஹிட்லர் அவர் கலந்து கொண்ட அரசாங்க விருந்து ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் திட்டமிட்டபடி அவரது ஆதரவாளர்களை வைத்து நஞ்சை கலக்கச் செய்தார்.அந்த நஞ்சு நாளடைவில் மெல்ல மெல்ல செண்பகராமனை நோயாளியாக்கி படுத்த படுக்கையில் வீழ்த்தியது.அந்த நஞ்சிலும் அவர் இறக்காததை அறிந்த கருணையற்ற ஹிட்லர் செண்பகராமன் தீவிர சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் ஊசி மூலம் விஷத்தை செலுத்தி சிறிது சிறிதாக அவரை மரணம் அடையச் செய்தார்.
அந்நிய நாட்டில் வைத்து தனது உயிர் பிரிந்து உடல் எறியூட்டப்பட்டாலும் என்றைக்கு இந்தியா சுதந்திரம் அடைகிறதோ அதன் பிறகு அந்த சாம்பலை தான் வளர்ந்த மண்ணான திருவனந்தபுரத்தில் உள்ள கரமனை ஆற்றில் கரைத்து விட்டு மீதியை வயல்வெளியில் தூவ வேண்டும் என்ற அவரது கடைசி ஆசையின்படி பலவித இன்னல்களுக்கு நடுவில் அவரது மனைவி நிறைவேற்றினார்.இத்தகைய வீர சாகசம் புரிந்த செண்பகராமன் பிள்ளையின் அளப்பரிய தியாகத்தையும் தேசபக்தியையும் நாம் வணங்கி போற்றுவோம்.
திரு.அனுக்ரஹா