பாரதத்தை தவிர மற்ற நாடுகள் உலகளாவிய சந்தை பற்றி நன்கு அறிந்திருக்கலாம் ஆனால் வசுதைவ குடும்பம் ( உலகம் ஒரே குடும்பம் ) என்ற கருத்தில் அவர்களுக்கு அனுபவம் கிடையாது. ஆனால் பாரதத்திற்கோ அதில் 3000 ஆண்டுகள் அனுபவம் உள்ளது . பாரதத்தில் பல்வேறு மொழிகள் , ஜாதிகள் , மாதங்கள் ,ஏன் உணவு பழக்கவழக்கங்கள் இருந்தும் ஒற்றுமையாக இருப்பதற்கு காரணம் நற்பண்புகளே . பாரதத்தில் பல்வேறு மொழிகள் , மதங்கள், ஜாதிகள் இருந்தாலும் தேச பக்தி என்ற ஒரு புள்ளியில் அனைவரும் ஒன்றாகின்றனர் .
பாரதீயர்கள் அனைவரும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே முன்னோர்கள் வழி வந்தவர்கள் தான். அனைவரின் மரபணுவும் ஒத்துபோகிறது என விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன. பன்முகத்தன்மை கொண்ட சமூகங்கள் இந்து என்ற அடையாளத்தில் ஒன்றிணைந்துள்ளோம் .
இந்து சமூகங்களின் ஒற்றுமையே வளமான பாரத தேசத்தை படைக்க வழிவகுக்கும் . பாரதத்தின் முன்னோர்கள் ஒருபோதும் மற்றவர்களிடம் அத்துமீறவோ அல்லது மத மாற்றவோ முற்படவில்லை, மாறாக இருக்கும் கலாச்சாரங்களுடன் சேர்த்து, இடைவெளிகளை நிரப்பினார்கள். அவர்கள் இதயங்களை வெல்லவே முயற்சித்தார்கள் தவிர நிலங்களை அல்ல .
பாரதிய சிந்தனையில் உடல், மனம் மற்றும் அறிவு ஆகியவை ஒன்றோடொன்று இணைந்திருப்பதாகும். இது பாரதத்திற்கு வெளியே உள்ள மக்களின் எண்ணங்களில் இருந்து வேறுபட்டது. மேற்கூறிய ஒன்றோடொன்று தொடர்பு பற்றி அறியாதவர்கள், செல்வத்தைப் பெற, அவர்கள் இன்பங்களைத் துறக்க வேண்டும். அவமானங்களைச் சுமக்காமல் வாழ்வதற்குப் பொருளாதாரச் சிக்கலைச் சந்திக்க வேண்டியிருக்கும். முழுமையான செழிப்பு மற்றும் முக்திக்கு உடல், மனம் மற்றும் புத்தியின் அம்சங்களை ஒத்திசைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
உலக அரங்கில் வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரு குடும்பம்) என்ற கருத்து G20 க்குள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது . ஏனெனில் இது உலக சந்தைக்கு அப்பாற்பட்ட உலகளாவிய குடும்பத்தை உள்ளடக்கிய ஒரு பார்வை, . இதனால் தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது தேசம் வாழ்ந்து வருகிறது.
இந்த மாதிரியான தனித்துவமான கருத்தை வழங்க ஹிந்துக்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தான் சாத்தியமாகும். சமூகத்தின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதன் முன்னேற்றத்தை நோக்கிச் செயல்படும் நபர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு முக்கியமானது என்றார் அவர்.
அமைப்பின் குறிக்கோள் அதன் சொந்த நலனுக்காக அல்ல, தேசம் மற்றும் அதன் மக்களின் முன்னேற்றத்திற்காக உள்ளது.