ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் இயக்க சர்சங்க சாலக் டாக்டர்.மோகன் பாகவத் அவர்களின், இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த உரைகளில் இருந்து சில பகுதிகள்
நாட்டை வழிநடத்த எந்த லட்சியத்தை மனதில் வைத்து அரசியல் சாசனத்தை உருவாக்கினார்களோ, அந்த லட்சியத்தை அடைய நாம் வேலை செய்ய வேண்டும்
விஜயதசமி உற்சவம் நாக்பூர் (03-10-2014)
——————————
இந்த நாட்டின் கலாச்சாரம் நம் அனைவரையும் இணைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. நம் சட்ட அமைப்பும் இந்த ஒற்றுமை உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. நம்முடைய எண்ணங்களும் இந்த கருத்தை தான் பிரதிபலிக்கிறது (ஆர்.எஸ்.எஸ். மூன்றாம் ஆண்டு பயிற்சி உரை – நாக்பூர் 09-06-2016)
———————–
சுதந்திர இந்தியாவின் அனைத்து அடையாளங்களுக்கு நாம் உரிய மரியாதை அளிக்க வேண்டும். அரசியல் சாசனமும் அதில் ஒன்று. பல நூற்றாண்டுகளுக்கு பிறகு, நாம் விரும்பும் வகையில் சுதந்திரமாக வாழ வாய்ப்பு கிடைத்துள்ளது. நாட்டு குடிமக்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி, நமது வல்லுநர்கள் அரசியல் சாசனத்தை உருவாக்கியுள்ளார்கள். (எதிர்கால இந்தியா, புது தில்லி – 18-09-2018 விஞ்ஞான் பவன்)
————————————–
நமது அரசியல் சாசனம் அவ்வளவு எளிதாக உருவாக்கப்படவில்லை . அதன் ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்து , எல்லோராலும் ஏற்கக் கூடியதாக, பூரண முயற்சி எடுத்த பிறகே, எல்லோரின் சம்மதம் பெற்ற பிறகே, அரசியல் சாசனம் இறுதியானது. இதில் குடிமக்களுக்கு கடமைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதில் வழிகாட்டு கொள்கைகள் உள்ளன. மேலும் குடிமக்களுக்கு உரிமைகளும் இருக்கின்றன. (எதிர்கால இந்தியா, புது தில்லி 18 செப்டம்பர் 2018 )
————————-
நமது ஜனநாயக நாடு ஒரு அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. இதை இந்தியர்கள் தான் உருவாக்கினர்/ நம் அரசியலமைப்பு, நம் நாட்டின் “ஆத்ம உணர்வு”. ஆகையால், இதன் ஆத்மாவை காப்பாற்றுவது அனைவரின் கடமையாகும். இதை ஆர்.எஸ்.எஸ். ஆரம்பத்தில் இருந்தே ஏற்றுள்ளது (எதிர்கால இந்தியா – புது தில்லி 18 செப்டம்பர் 2018 )