நாகபுரி சங்கப் பயிற்சி முகாமில் ஜூன் 10 அன்று சர்சங்கசாலக் மோகன் பாகவத் நிகழ்த்திய பேருரையின் ஆரம்பப் பகுதியில் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் கவனம் சிதறாமல் சங்கப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார். இது நிறைவுப் பகுதி.
“சங்கப் பணி செய்வோம்,
சமுதாயம் நாடிவரும்”
மோகன் பாகவத்
கடவுள் அனைவரையும் படைத்துள்ளார். கால ஓட்டத்தில் வந்த திரிபுகளை நீக்கி, இந்நாட்டின் புதல்வர்கள் அனைவரும் நம் சகோதரர்கள் என்பதை அறிந்து நடந்து கொள்ள வேண்டும். கருத்துக்கள் வேறு, முறைகள் வேறு, எல்லாமே வேறாக இருக்கலாம். இந்த நாட்டை நமது சொந்த நாடாக ஏற்று பக்திபூர்வமாக உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த எண்ணம் நல்லது, மனதுக்குப் பிடிக்கும், புத்தியும் ஏற்றுக் கொள்ளும். ஆனால் பல தசாப்தங்கள் பற்பல நூற்றாண்டுகளின் பழக்கங்களை மாற்றுவதற்கு நேரம் பிடிக்கும். எனவே தினமும் பயிற்சி செய்ய வேண்டும். அந்தப் பயிற்சியே சங்க ஷாகா. சிரித்து விளையாடியபடியே இவையெல்லாம் ஷாகாவில் நடக்கும்;. இதையெல்லாம் செய்வதால்தான் இப்படி நடக்கிறது என்பதைஷாகாவில் பங்கேற்பவர் உணர்வதில்லை. 10-12 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அந்தக் கால சித்திரத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, ‘நான் எவ்வளவு மாறிவிட்டேன்!’ என்பதை அவர் உணர்கிறார். இதைத்தான் சங்கம் செய்கிறது. இதற்குத்தான் சங்கம். இது தவம். எனவே, ஐந்து விஷயங்களை சமுதாயத்தின் முன் வைக்கிறோம். ஸ்வயம்சேவகர்கள் வாழ்ந்துகாட்டி இவற்றை பரப்புவார்கள்..
- சமூக நல்லிணக்கம்: ஊரில் உள்ள அனைத்து சமூகங்களிலும் நமக்கு நண்பர்கள் / குடும்பத் தொடர்பு இருக்க வேண்டும். எங்கெல்லாம் நமக்கு செல்வாக்கு இருக்கிறதோ, அல்லது சமுதாயம் நம் வார்த்தைகளை ஒத்துக் கொள்ளுமோ அம்மாதிரி பகுதிகளில், கோயில் / தண்ணீர் / மயானம் பொதுவாக இருக்க வேண்டும்.
2 சுற்றுச்சூழல்: தண்ணீரைச் சேமிப்போம், பிளாஸ்டிக் தவிர்ப்போம். பசுமைக்கு மரக் கன்று நடுவோம். நம் வீட்டை பசுமை இல்லம் ஆக்குவோம்.
3 வாழ்க்கைத் தரம்: நாம் செழிப்பை விரும்புகிறோம், விரயத்தை அல்ல. எனவே, மகாலக்ஷ்மி துதியில், செல்வம் கேட்போம், பல புதல்வர்கள் வேண்டும் என்று கேட்பது மட்டுமல்லாமல், பேராசை, மோகம், அசுப எண்ணங்கள் வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். வாழ்வில் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படலாம். ஊர் மெச்ச வாழலாம்.ஆனால் வீண் செலவு செய்ய மாட்டார்கூடாது. எளிமையாக வாழலாம், வாழ வேண்டும்.
4 சுயசார்பு: வீட்டில் தயார் செய்யக்கூடியதை வெளியில் இருந்து கொண்டு வரக்கூடாது என்பதே சுயத்தின் அடிப்படை, அதுதான் சுதேசி என்பது. ஞாயிறுஅல்லது எப்போதாவது பீட்சாவா? சரி. நாட்டிர்குள் தயாரிக்கப்பட்டதைபயன்படுத்துவோம். வெளிநாட்டின் தயாரிப்புகளைத் தவிர்ப்போம். சர்வதேச வர்த்தகத்திலும் நம் சொந்த நிபந்தனைப் படியே நடத்த வேண்டும், நிர்பந்த்தால் ஏற்பது கூடாது.இவாறு நாட்டின் கொள்கை இருக்க வேண்டும்.
- சட்டத்துக்கு மதிப்பு: நாட்டின் அமைப்புகள், சட்டம், அரசியல் சாஸனம், விதிமுறைகள் ஆகியவற்றைப் பின்பற்றுவோம். போக்குவரத்து விதிகளைக் கடைபிடிப்போம். கியூ இருந்தால் கியூவில் வருவோம்.. நகராட்சி முதல் மாநில அரசு, மத்திய அரசு வரை வரிகளை காலம் தவறாமல் செலுத்துவோம்.
‘நம்மைப் போலவே நம் குடும்பமும் இதையெல்லாம் ஏற்க வேண்டும் என்பதற்காக, வாரத்திற்கு ஒரு முறை குடும்பத்தில் எல்லோரும்கூடி அமர்ந்து கலந்துரையாடுவோம். நம் பாரம்பரியத்தை நினைத்துப் பார்ப்போம். குடும்பம் / கலாச்சாரம் / பண்புகள் அடிப்படையிலான நம் முன்னோர் வாழ்ந்ததை நினைத்துப் பார்ப்போம்.கடின சூழ்நிலையில்அவர்கள் நாட்டுக்காக தங்கள் உயிரைக் கொடுத்து செய்த சேவையை நினைவில் கொள்வோம். நம் குடும்பம் அப்படிப்பட்ட தரத்தில் வாழ்கிறதா என சோதித்துக் கொள்வோம். வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து வாரம் ஒருமுறை பக்தி அவரவர் மரபுப் படி பஜனை செய்வோம். வீட்டில் சமைத்த உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவோம். மூன்று முதல் நான்கு மணி நேரம் இந்த விஷயங்களைப் பற்றி யோசிப்பதன் மூலம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பல தசாப்தங்களாக வரும் நம் பாரம்பரியத்தை அனுசரித்து வீட்டின் சூழலில் படிப்படியாக பண்பாடு திகழச் செய்வோம்..
உலகிற்கு நம் பாரம்பரியம் தேவை. நவீன அறிவியல், நமது பாரம்பரியம் இரண்டையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தினால், உலகம் நிம்மதி பெறும்; நம் நாடும் சிறப்பாக மாறும், நம் வாழ்க்கையும் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாறும். அந்த வாழ்க்கையை உருவாக்குவதற்கான வழியை அறிய, ஸ்வயம்சேவகர் சங்க ஷாகா வருகிறார். அதனால்தான் ஒட்டுமொத்த சமுதாயமும் ஷாகா வரவேண்டும் என்று சங்கம் வலியுறுத்துகிறது.
சங்கத்தில் என்ன நடக்கிறது, என்னென்ன நிகழ்ச்சிகள், என்ன பாடல்கள், என்ன நல்லுரைகள் என்பதை எல்லாம் நீங்கள் பார்க்கலாம். ஆனால் தூரத்தில் இருந்து பார்த்தால் பயனில்லை. ஒத்துழைப்பும் பங்கேற்பும் அவசியம்.
சங்க ஷாகா நிகழ்ச்சிகளைப் பார்த்தீர்கள். ஆனால் சங்கம் செய்துவரும் சேவைப் பணிகள் சேவை திட்டங்கள் 1,22,000 க்கும் மேற்பட்டவை. சங்க ஸ்வயம்சேவகர் செயல்படாத துறையோ அமைப்போ கிடையாது. அவற்றில் . நீங்கள் சேரலாம். ஆனால் நம் உடல் / மனம் / அறிவுக்கான அன்றாட ஷாகாவில் இணைந்து கொள்ளுங்கள்.
நான் செய்தேன் என்ற அகங்காரத்தை வைத்துக் கொள்ளாமல் சேவை செய்தால் அதுவே உண்மையான சேவை. நம் நாட்டிற்கு நம் அனைவரின் உண்மையான சேவை தேவை. உலகத்துக்கும் அது தேவை. முழு உலகத்திற்கும் சேவை செய்யும் திறன் கொண்டதாக பாரதம் மாற வேண்டும் என்றால், சமுதாயம் இப்படித்தான் உருவாக வேண்டும். இப்படி சமுதாயம் உருவானால், அமைப்புகளும் அமைப்பை நடத்துவோரும் தானாகவே நாடி வருவார்கள். எப்போதும் அடித்தளத்தில் இருந்து தொடங்க வேண்டும். முதலில் உச்சாணிக் கிளை கடசியில் வேர்ப்பகுதி என்ற அற்புதம். கடவுளுக்கு மட்டுமே சாத்தியம்.. உலகில் கடவுள் செயல் எதையும் செய்வதில்லை, செய்விக்கிறார்.. உட்கார்ந்தபடி சுதர்சன சக்கரத்தை ஏவியிருந்தால், ராவண வதம் ஆகியிருக்கும்.. மனிதனாகப் பிறந்து துன்பங்களைத் தாங்கி தொலைதூரக் காடுகளுக்கும், கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்; அந்த மக்கள் ஒன்று கூடி, முன் நின்று போரில் அவருடன் தோளோடு தோள் நின்றார்கள் . பின்பு ராவணன் கொல்லப்பட்டான். வன்னி மரப் பொந்திலிருந்து ஆயுதங்களை வெளியே எடுத்து பாண்டவர்கள் தர்ம யுத்தத்திற்கு தயாரான பிறகு கிருஷ்ணர் செய்தது தேரோட்டியது மட்டுமே. அவர் விரும்பியிருந்தால், சபையில் திரௌபதி அவமதிக்கப்பட்ட கணமே கௌரவர்களை அழித்திருப்பார். ஆனால் கடவுள் அப்படி அற்புதம் அரிது. முதலில் அடித்தளப் பணி செய்வோம். கடவுள் நமக்கு புத்திசாலித்தனம் தருகிறார், சுதந்திரம் தருகிறார். நமக்கே உரிய பண்பட்ட விதத்தில் புத்திசாலித்தனத்தால் பணிபுரிய வாய்ப்பளிக்கிறார்.இதுகடவுளின் வழிமுறை. நாம் நெம்புகோலால் மலையைப் புரட்டுவதில் இறங்க வேண்டும் . அப்போதுதான் கோவர்த்தன மலையை தூக்க கடவிளின் விரல் வரும்..மலையை நாம் தூக்குவதாக நமக்குத் தோன்றும். உலக வரலாற்றில் எங்கும் இப்படித்தான் நடந்துள்ளது. இங்கும் அப்படி நடக்க வேண்டும். அதாவது நாம் கடவுளின் கருவியாக செயல்பட வேண்டும்.
மாபெரும் இந்த சங்கப் பணியில் ஈடுபட உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.