குடும்பத்தில் பாரத பாரம்பரிய மகத்துவத்திற்கு ஊக்கமளிப்பதனால், சமூகம் சரியான திசையில் முன்னேறும் – டாக்டர்.மோஹன் பாகவத் ஜி
கௌஹாத்தி
23-02-2025
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் கௌஹாத்தி நகரத்தின் ஒரு பொது அறிவு கூட்ட நிகழ்ச்சி சௌத் பாயிண்ட் பள்ளி வளாகத்தில் பரஷாபரா என்னும் இடத்தில் நடத்தப்பட்டது. ஏறக்குறைய பொறுப்பில் உள்ள சேவகர்கள் 1000 பேர் முன்னிலையில், சர்சங்க சாலக் டாக்டர்.மோஹன் பாகவத் ஜி சமூக முன்னேற்றத்திற்காக, “பஞ்ச பரிவர்த்தன்” (5 மாற்றங்கள்) கொள்கையை சாவியின் ரூபத்தில் அடிக்கோடிட்டு காட்டினார். அவர் சமூகத்திற்காக 1. சமூக இணக்கம், 2. குடும்ப மதிப்புணர்வு, 3. சுற்றுப்புற பாதுகாப்பு, 4. தாய்நாட்டுப் பற்று, 5. குடிமகனின் கடமைகள் என்று ஐந்து மாற்றங்களுக்கான கொள்கைகளை விரிவாக விளக்கினார்.
அவர், சமூகத்தில் உள்ள பல ஜாதி, மதம், ஸ்தலங்கள், மொழிகள் இவைகளுக்கு நடுவில் நட்புணர்வையும், ஒற்றுமையையும் ஊக்கப்படுத்தி பேசினார். அப்போது மட்டுமே, நல்லிணக்க சமூகம் உருவாக்க முடியும். நமது குடும்பங்களிலேயே பாரத மகத்துவத்திற்கு ஊக்கமளிப்பதில் சமூகம் சரியான பாதையில் முன்னேற வழி வகுக்கும். அனைத்து ஹிந்துமத கோயில்கள், புனித நீர் தேக்கங்கள், மயான பூமி இவைகளை ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடன் உபயோகித்தல் வேண்டும்.
சர்சங்க சாலக் ஜி சமூகத்தின் சுற்றுப்புற பாதுகாப்பு பற்றியும் வலியுறுத்தினார். அதில், நீர் சேமிப்பு, ப்ளாஸ்ட்டிக்கின் குறைபாடு ஆகியவற்றை விளக்கியதோடு, மரம் நடுதல் போன்றவற்றை மேம்படுத்திப் பேசினார். மேலும் அவர், ஒவ்வொரு இந்தியக்குடும்பமும், தன் தாய்மொழி, தான் உடுத்தும் விதம், உணவுப்பழக்கம் குடியிருப்பு, சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போதும், நமது தாய்நாட்டுக் கொள்கையையே ஏற்க வேண்டும். வெளிநாட்டு மொழியை தவிர்த்து நமது தாய்மொழியில் பேசுவதை வலியுறுத்தினார்.
நாம் எவ்வளவு குடிமக்கள் கடமையை ஆற்றுகிறோமோ அதில் அனைத்து மாநில கொள்கைகளையும் சட்டங்களையும் பின்பற்றுவதுடன் ஒவ்வொருவரும் தனது பாரம்பரிய, சமூகநீதி விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இவை யாவும் குடிமக்கள் சட்ட புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இவற்றைக் கடைப்பிடிப்பதால் தான் சமூகம் நன்மையடையும்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு அசாம் சங்கசாலக் டாக்டர்.பூபேஷ் ஷர்மா மற்றும் கௌஹாத்தி நகர சங்கசாலக் குருபிரசாத் மேதியும் வீற்றிருந்தனர்.