சிப்பாய்ப் புரட்சி ஆரம்பிக்க முக்கியக் காரணமாக இருந்த மங்கள் பாண்டே பிறந்த தினம் இன்று! பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து,  [ 1857-]இல் முதல் இந்திய சுதந்தரப் போர் (சிப்பாய்க் கலகம்) நடந்தது பற்றி நமது சரித்திரப் பாடப் புத்தகத்தில் படித்துள்ளோம். அதற்கு வித்திட்ட நிகழ்வுக்குச் சொந்தக்காரர் மங்கள் பாண்டே. வங்காளக் காலாட்படையில் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியில் வீரனாக வேலை பார்த்த மங்கள் பாண்டேவை அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே ஒரு […]

ஸ்ரீ சுவாமிநாத ஆத்ரேயர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திருவாவூரில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள சிமிழி கிராமத்தில், ஸ்ரீ கே.வெங்கடராம சாஸ்திரி மற்றும் ஸ்ரீமதி சங்கரி ஆகியோருக்கு 30 நவம்பர் 1919 அன்று பிறந்தார். இவர் புகழ்பெற்ற வேத மற்றும் சமஸ்கிருத அறிஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தனது சகோதரர்களான ஸ்ரீ எஸ் வி பாலகிருஷ்ண சாஸ்திரி, ஸ்ரீ எஸ் வி ராதாகிருஷ்ண சாஸ்திரி மற்றும் ஸ்ரீ எஸ் […]

17.6.1911. தமிழர்கள் அறியவேண்டிய வரலாறு: ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்ற நாள்.   113 வருடங்களுக்கு முன் இதே நாளில் அதாவது 17.6.1911 அன்று திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொடைக்கானலில் படிக்கும் தனது பிள்ளைகளைப் பார்க்க மணியாச்சிக்கு ரயில் மூலம் 10.38 மணிக்கு வந்து சேர்ந்தான். உடன் அவனது மனைவி மேரியும் இருந்தார். ‘தி சிலோன் போட் மெயில்’ என்ற ரயிலின் வருகைக்காக காத்திருந்தனர். ஆஷ் அமர்ந்திருந்த முதல் வகுப்பு ரயில் […]

ஆங்கிலேயரோடு ஆங்கிலத்தையும் அகற்ற வேண்டும் என்றும் பாரத அன்னைக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்றும் விரும்பிய தேசபக்தர் (1884-1925). சுப்ரமணிய சிவா ஒரு விடுதலைப் போராட்ட வீரர் மட்டுமின்றி பெயர் பெற்ற எழுத்தாளரும் ஆவார். 1908 ஆம் ஆண்டிலிருந்து 1922 ஆம் ஆண்டு வரைக்கும் இருந்த காலகட்டத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்களுக்காக கணக்கில் அடங்க முறைகள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ‘தர்ம பரிபாலன சமாஜம்’ என்ற […]

ஆங்கிலேயருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த திருமங்கலம் தீரர் மாயாண்டி சேர்வை இந்திய தாய்த்திருநாட்டின் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த 1940ம் ஆண்டு முதலான காலத்தில் தேசபக்தர்கள் மீது ஆங்கிலேயர்கள் சொல்லொண்ணாத அடக்குமுறைகளை ஏவி விட்டு சுதந்திரம் கேட்கும் குரல் எங்கே ஒலித்தாலும் அதன் குரல்வளையை நசுக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது திருமங்கலம் நகரைச் சேர்ந்த மாயாண்டி சேர்வை என்ற இளைஞர் இந்த ஏகாதிபத்திய அடக்குமுறைகளுக்கு எதிராக அதிரடியாக ஏதேனும்  செய்ய […]

  பாரத நாட்டின் விடுதலைக்காக படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், மாணவர், இளைஞர் முதியவர் என அனைத்து தரப்பினரும் போராடினர். அப்படி போராடி இன்னுயிர் நீத்த பல்லாயிரக்கணக்கானவர்களின் பெயர்களும் உருவங்களும் கூட நம்நாட்டு பிள்ளைகளின் பாடத்திட்டத்தில் கூட இல்லாமல் போயிற்று என்பது வருந்தத்தக்க உண்மையாகும். இன்றைய பள்ளி அல்லது கல்லூரி மாணவரிடம் சென்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரை கேட்டால் முழி பிதுங்கி நிற்பார்கள். அதே மாணவரிடம் சினிமா நட்சத்திரங்களின் […]

1801 ஜுன் 12 ம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ ஜம்பு தீவ பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கை எல்லா இனத்தைச் சார்ந்த மக்களும் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது. எங்கே இருக்கிறது ஜம்புத்தீவு என விழிக்காதீர்கள். ஒரு காலத்தில் இந்தியாவுக்கு ஜம்புத்தீவு என்ற பெயரும் இருந்தது. […]

  “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” இது பாரதியின் பாடல்,   பாரதி இதை எப்போது? ஏன் பாடினான்? என்ற விவரத்தைக் கேட்டால் கலங்காத மனம் கூட கலங்கிவிடும். நீலகண்டன். இவர் சீர்காழிக்கு அருகில் உள்ள எருக்கூர் என்ற கிராமத்தில் பிறந்தார். எனவே இவரை எருக்கூர் நீலகண்டன் என்று அழைப்பார்கள்…   நீலகண்ட பிரம்மச்சாரி – இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் […]

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதன்முதலில் மூவர்ணக் கொடியை பறக்கவிட்ட சாகசக்காரர். செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள உயரமான கொடிக்கம்பத்தில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறப்பதை நம்மால் பார்க்க முடியும். இந்த கோட்டைக்கு நீண்டதொரு வரலாறு இருக்கிறது. 1688ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கொடி மரமானது தொடக்கத்தில் தேக்கு மரத்தினால் செய்யப்பட்டதாக இருந்தது. 1994ம் வருடம் இரும்பினால் செய்யப்பட்ட கொடிக்கம்பமாக மாற்றப்படும் வரை தேக்கு மரக் […]

தமிழகம் முழுவதும் 13ஆம் நூற்றாண்டில் முஸ்லிம் கொடுங்கோலா்களின் 98 ஆண்டு கால அரக்கர் ஆட்சிக்கு முடிவுரை எழுத புறப்பட்ட “விஜய நகர சாம்ராஜ்ய” வம்சத்தில் வந்தவா் வீரபாண்டியகட்டபொம்முநாயக்கர். பொம்மு 16 வயது இளைஞராக இருந்த போது மணியாச்சிக்கு வடகிழக்கே, 10 மைல் தொலைவில், பெரிய ஏரிக்கரையில் உள்ள சாலிக்குளம் என்ற இடத்தில், இவர் குடும்பம் வாழ்ந்தது. ஒருநாள் இரவு கள்வர் பலர் கொள்ளையடித்து விட்டு, நள்ளிரவில் இவ்வழியே வந்தனர். அந்த […]