லாசித் பர்புகானின் இயற்பெயர் லாசித் டெக்கா .இன்றைய அசாமின் கோலாகட் மாவட்டத்தில் பிடியோனி என்ற ஊரில் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பர்புகன் அஹோம் பேரரசின் ஆக்ரோஷமான ,சளைக்காத மாவீரன். 1603 முதல் 1639 வரை அஹோமை ஆண்ட பிரதாப் சிங்கின் ஆட்சியில் கவர்னராகவும் படையின் தலைவராகவும் இருந்த மோமய் தமுலி போர்பரூவா என்பவரது மகன்தான் லாசித். லாசித் இளவயதிலேயே ராணுவப் பயிற்சியை மேற்கொண்டு […]