சிவபெருமானின் அவதாரமாக 2500 ஆண்டுகளுக்கு முன் காலடியில் சிவகுரு, ஆர்யாம்பாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்த சங்கரர், சிறுவயதிலேயே ஆன்மிக தேடலால் துறவு பூண்டு, அத்வைத கோட்பாடினை இந்த உலகுக்கு விளக்கி, ஷன்மத முறையை நிறுவி, பல்வேறு ஸ்லோகங்கள் எழுதி, இருள் சூழ்ந்திருந்த சனாதன தர்மத்தை ஒளியடையச் செய்தவர் ஆதிசங்கர பகவத்பாதர். பாரதத்தை முழுவதுமாக சுற்றிவந்து வேதநெறி தழைத்தோங்க பல மடங்களை நிறுவிய அவர், கடைசியில் ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்றான காஞ்சியில் […]