Empowerment Of Women Should Begin At Home – RSS Sarsanghchalak Dr. Mohan Bhagwat Ji .

VSK TN
    
 
     

ராஷ்ட்ரிய சேவிக சமிதி ஏற்பாடு செய்திருந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசினார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவர்கள். பெண்களுக்கான அதிகாரப்பகிர்வு என்பது வீட்டிலிருந்து துவங்க வேண்டும், அதுவே சமூகத்தில் சரியான இடத்தை அவர்களுக்கு பெற்றுத் தரும் என தெரிவித்தார். பாரதம் விஸ்வ குருவாக வேண்டும் என்று நாம் விரும்பினால்,  அதில் ஆண்களும்,பெண்களும் சம அளவு பங்காற்ற வேண்டும் என குறிப்பிட்டார்  அதை நோக்கிய முறையான மாற்றங்கள் மெதுவாக நடைபெற்று வருகிறது, இருப்பினும் அதன் வேகம் அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான  இட ஒதுக்கீடு  குறித்து விவாதங்கள் நடந்து கொண்டேயிருந்தாலும், பெண்களுக்கு சாதகமான ஒரு சூழ்நிலை உருவாகி வருகிறது எனவும் குறிப்பிட்டார்

அவர் மேலும், “ஆண்கள் தான்  பெண்களை உயர்த்த வேண்டும் எனும் அவசியம் இல்லை, ஏனெனில் பெண்கள் ஆண்களை விட அதிகத் திறன் கொண்டவர்களாக இருக்கிறது.  பெண் சமூகம்  சுயமாக முன்னேறும் திறன் கொண்டது. ,அவர்களின் பாதையை அவர்களே தேர்வு செய்வார்கள்..  பல காலங்களாக பெண்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்தார்கள், தற்போது அவர்கள் அதிகாரம் பெறட்டும், புகழ் அடையட்டு. ஒரு புறம்  ,பெண்கள் ஆண்களுக்கு சமானமானவர்கள் என்று கூறும் சமுதாயம், மறுபுறம் பெண்களை  அடிமைகளாகவே வைத்திருக்கப் பார்க்கிறது.  இந்த ஒவ்வாத மனநிலையைக் கைவிட்டு  சமூகத்தில் பெண்களுக்கு சம அந்தஸ்து அளிக்க வேண்டும் .
யாரெல்லாம் நமது பண்பாட்டையும், திருமண பந்தத்தையும், பெண்களின் சுதந்திரத்தையும் ,குடும்ப அமைப்பையும், விமர்சனம் செய்தார்களோ, அவர்களே இன்று பாரதீய வாழ்க்கை முறையை ஆராய்ச்சி செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள். . ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய குடும்ப அமைப்பின் உயர் பண்புகளைப் பற்றி நாம் எவ்வளவு போற்றிக் கொண்டாடினோமோ அதைப்பற்றி இன்று  பேசுகிறார்கள்”

Next Post

The Dharmic Nature And Its Spiritual Attribution Made The Life Of Tamil Language - Venkatarama Ramalingam Pillai

Wed Aug 24 , 2022
VSK TN      Tweet    “தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா…” “தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு…” இவை எல்லாம் எண்ணற்ற திராவிட மேடைகளில் காலம் காலமாக முழங்கி வரும் வரிகள். இவற்றுக்குச் சொந்தக்காரர் நாமக்கல் கவிஞர், வே ராமலிங்கம் பிள்ளை. இந்த வரிகளை மட்டும் படித்துவிட்டு, இன்றைய திராவிட மாடல்களுக்கு அடித்தளம் அமைத்தவர்களில் இவரும் ஒருவர் என்ற எண்ணம் தோன்றலாம். இன்றைய சமூக நீதி வியாபாரிகள் எப்படி தாதாஸாஹேப் அம்பேத்கரை தவறாக […]