ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் டாக்டர் மோகன் பாக்வத், டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடந்த சுயாஷ் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். டெல்லியில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் உரையாற்றிய அவர், அவர்கள் செய்யும் சமூகப் பணிகள் மனிதகுலத்தின் நலனுக்கு உதவுவது மட்டுமல்லாமல், தேசத்திற்கும் உத்வேகத்தை அளிக்கிறது என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், நம் மனதில் எப்போது அனைவரும் நமக்கு உரியவர் எனும் உணர்வு ஏற்படுகிறதோ, அப்போது தான் நாம் சேவை செய்ய இயலும். சேவை மனப்பான்மையால், மனித தன்மை அதிகரித்து, சேவை உணர்வு ஒட்டுமொத்த சமுதாயத்திலும் எழுகிறது.
அவர் மேலும் கூறியதாவது, சேவை மனப்பான்மை என்பது ‘நான் செய்தேன்’ என்பதில் இல்லை, ‘சமூகத்திற்காக செய்தேன், என் அன்புக்குரியவர்களுக்கு செய்தேன், தேசத்திற்காக செய்தேன்’ என்ற உணர்வில் தான் உள்ளது. இது போன்ற சேவை ஒரு சமூகத்தை உத்வேகப்படுத்தி அதனை எழுச்சியுற செய்யும். ஒரு வலுவான தேசத்திற்கு சமூகத்தின் மன உறுதி மிகவும் முக்கியமானது. சேவை என்பது இறைவனுக்கு செய்யும் பணி எனும் உணர்வுடன் சேவை செய்யும் போது, அனைத்து வேலைகளும் தானாகவே நடக்கின்றன. சேவை செய்பவர்களுக்கு கடவுள் தாமே பலம் தருகிறார், மனிதர்களுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவையாகும். இது உண்மையில் இந்திய தத்துவம் மற்றும் சிந்தனை என பேசினார். “எவன் ஒருவன் எளியோர்க்கு மற்றும் கஷ்டப்படுவோருக்கு உதவுகின்றானோ அவன் ஒருவனே துறவி எனப்படுவான்” என்ற துறவி துக்காராமின் அமுத மொழியை மேற்கோள் காட்டினார்.
அவர் மேலும் கூறியதாவது, நீங்கள் எந்தத் துறையில் பணிபுரிந்தாலும், எல்லா இடர்பாடுகளுக்கும் இடையூறுகளுக்கும் பிறகும் உங்கள் சேவை மனப்பான்மை சமுதாயத்தில் ஒளி வீசுகிறது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் உங்கள் பணியை தேசிய அரங்கில் எடுத்துச் செல்லும், மேலும் உங்கள் அனைத்து பணிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.