என் “தேசம்” என் “கடமை” மூன்றெழுத்தில் தேசத்தின் மூச்சுக் காற்று ஆன ஆர்.எஸ்.எஸ்

VSK TN
    
 
     
ஆர்.எஸ்.எஸ் காரங்க மைதானத்துல கபடி விளையாடுவாங்க, ராணுவம் மாதிரி அணிவகுப்பு ஊர்வலம் போவாங்க, தேசபக்தியை உயர்த்திப் பிடிப்பாங்க, இயற்கை பேரிடர் சமயங்களில் யாரும் கேட்காமலே போய் சேவை செய்வாங்க – இதை எல்லாத் தரப்பு மக்களும் உணர்ந்து விட்ட காலகட்டம் இது. ஆம்! அதுக்கு, கொரோனா பாதிப்பு நாட்களும் விதிவிலக்கல்ல.
நோய்த்தொற்று பரவி அதிகரிக்காமல் இருக்க, அரசாங்கம் ஊரடங்கு அறிவித்த மார்ச் 22 தொடங்கி, இந்த தகவல் பதிவிடப்படும் நாள் வரை, நாடு முழுவதும் லட்சக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் (ஸ்வயம்சேவகர்கள்) இயக்கத் தலைமையின் குறிப்பை எதிர்பார்த்துக் காத்திருக்காமல், அவரவர் பகுதியில் மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை, மருத்துவ / பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர். ஊரடங்கு அதிக நாட்களுக்கு தொடரவேண்டிய நிலை ஏற்பட்டதால், சேவைப் பணிகளை அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களால் நிர்வகிக்கப்படும் அறக்கட்டளைகள் மூலம் எல்லாத் தரப்பு மக்களுக்கும் உணவுத்தேவை, முகக்கவசம், கையுறைகள், அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல், முதியோர்களுக்கு மருத்துவ உதவி, தகவல் சேவை என அனைத்து விதத்திலும் சேவைப் பணிகள் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டன.
மளிகைப்பொருட்கள் தேவைப்படும், எளிய மக்களின் பயனாளிகள் பட்டியல் தொகுக்கப்பட்டு அவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
வாஞ்சையுடன் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அனைத்து மக்களுக்கும் மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவை செய்ததால் மக்களுக்கும், சங்க ஸ்வயம்சேவகர்களுக்கும் உண்டான அனுபவங்கள் பலப் பல..
தனது வீட்டில் மளிகைப் பொருட்கள் இல்லாத நிலையிலும் அதைப்பற்றி கவலைப்படாமல், சென்னை திருவொற்றியூரில், தன் பகுதியில் ஏழைப் பயனாளிகளுக்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கிய சம்பவம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல.
பொதுவாகவே ஊடக விளம்பரத்தில் நம்பிக்கை வைக்காத ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, தன் தொண்டர்கள் செய்த சேவைகளை விளம்பரப்படுத்தாமல், செய்த விஷயங்களை, தகவலாக மக்களிடம் பகிர்ந்துகொள்கிறது .
பாரத நாடு முழுவதும் மே 2 வரை 67,336 இடங்களில் 3,42,319 தன்னார்வலர்கள் கீழ்க்கண்ட சேவைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
 மளிகைப்பொருட்கள் அடங்கிய பைகள்: 50 லட்சத்து 48 ஆயிரத்து 88 பைகள் [ 50,48,088 ]
 உணவுப்பொட்டலங்கள்: 3 கோடியே 17லட்சத்து 12ஆயிரத்து எழுநூற்று அறுபத்தேழு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. [ 3,17,12,767 ]
 ரத்த தானம்: 22 ஆயிரத்து நானூற்று நாற்பத்தாறு நபர்கள் ரத்த தானம் செய்துள்ளனர் [ 22,446 ]
 மருத்துவ கஷாயங்கள் : 21 லட்சத்து 24 ஆயிரத்து நானூற்று நான்கு பேருக்கு கபசுர குடிநீர் போன்ற சித்தா ஆயுர்வேத கஷாயங்கள் வழங்கப்பட்டன. [ 21,24,404 ]
 முகக் கவசங்கள்: 44 லட்சத்து 54 ஆயிரத்து 555 பேருக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன [ 44,54,555 ]
 தங்கும் இட வசதி: 58 ஆயிரத்து 739 நபர்களுக்கு தங்கும் இட வசதி செய்து தரப்பட்டது. [ 58,739 ]
 அனைத்து மாநிலங்களிலும் பிற மாநிலத்தவர்க்கு உதவி: 4 லட்சத்து 89 ஆயிரத்து 824 பிற மாநில சகோதர சகோதரிகளுக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளது [ 4,89,824 ]
 வீடற்றவர்களுக்கு உதவி: ஒரு லட்சத்து அறுபத்தொன்றாயிரத்து ஐந்து வீடற்ற நபர்களுக்கு உணவு, மருத்துவ உதவி உட்பட சேவைகள் வழங்கப்பட்டுள்ளது [ 1,61,005 ]
 தேசபக்தியே உந்துதல்: ’130 கோடி பாரத மக்களும் என் சகோதர சகோதரிகள்; அவர்கள் இன்னல் படுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ – இந்த உணர்வு உந்திட, மக்கள் சக்தியை ஒருங்கிணைத்து என் தேசம், என் கடமை என முழூமூச்சுடன் தேசப்பணியாற்றுகிறார் ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ் அன்பரும்.

Next Post

Unabted Anti-Hindu Rant By Tamil Film Celebs: Eeerie Engineering?

Fri May 8 , 2020
VSK TN      Tweet     Tamil Film industry evolved faster in terms of technology and genre, when compared to film industry in other states. Right from the beginning (1930s), Tamil Film industry served as an excellent medium to convey the Bharatheeya values, patriotism and religious ethos through its films. The film producers and […]