Thiyagi Subramaniya Siva

VSK TN
    
 
     

பாரத அன்னையின் தவப்புதல்வரான சுப்ரமணிய சிவா தியாகத்தின் மறுஉருவம் என்றால் அது மிகையல்ல. அன்றைய ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறையை எதிர்த்து தென்னகத்தில் தேசபக்தியை ஊட்டிய மும்மூர்த்திகளில் ஒருவரான சிவம், மகாகவி பாரதியாரால் “வீரமுரசு” என்று புகழப்பட்டவர்.

தமிழகத்தின் தென் பகுதியான மதுரைக்கு அருகே வத்தலக்குண்டு என்னும் ஊரில் 4.10.1884 ல் ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு மகனாக பிறந்தார்.

அவருடைய இளமை காலம் முழுதும் வருமையில் கடந்தது, பள்ளிப் படிப்பு மதுரை, திருவனந்தபுரம் மற்றும் கோவையில் முடித்தார். இந்த காலகட்டத்தில் இவரின் தேச பக்தி அரும்பத் தொடங்கியது.

1899-ல் இவருக்கும் மீனாட்சியம்மாளுக்கும் திருமணம் நடைபெற்றது. இல்லறத்தில் நுழைந்தாலும் தேச சேவையிலிருந்து நொடிப் பொழுதுகூட விலகவில்லை.

1906-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தில் தன்னை இணைத்து கொண்டு பல சொற்பொழிவுகளை கேட்க சுப்பிரமணிய சிவாவின் தேசபக்தி சுடர் அனலாய் எரியத் தொடங்கியது. இதன் நோக்கம் இளைஞர்களின் மனதில் தேசபக்தியை உருவாக்கி சுதந்திர உணர்வை தூண்டுவதே ஆகும்.

இதனை எதிர்த்த திருவாங்கூர் சமஸ்தானம் சிவாவை திருவாங்கூவுர் சமஸ்தானத்தில் இருந்து உடனே வெளியெற உத்தரவிட்டது. இதன் பின்னர் இவர் ஊர் ஊராகச் சென்று ஆங்கில அரசுக்கெதிராக பிரச்சாரம் செய்து வந்தார். பின் கைதுசெய்யப்பட்ட சிவா சென்னை சிறையில் அடைக்கப்பட்டார்.

2-11-1912-ல் விடுதலை அடைந்த அவர், விடுதலைக்குப் பின் சென்னையில் குடியேறினார். சென்னை வாழ்க்கை மிகுந்த நெருக்கடியில் தான் கழிந்தது. இந்நிலையில் அவருடைய மனைவி மீனாட்சியம்மாள் உடல் நிலை மொசமாகி 15-5-1915-ல் சென்னையில் காலமானார்.

மனைவி இறந்தபின் சிவாவின் சுற்றுப் பயணங்கள் மேலும் அதிகரித்து ஊர் ஊராக சென்று மக்களுக்கு தேச உணர்வை கூட்டினார். பொது கூட்டமாக நடத்தாமல் மக்கள் எங்கு கூட்டமாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் பேசினார்.

பல பத்திரிக்கைகளை நடத்தி வந்த அவர் , 1919-ல் மீண்டும் இந்திய தேசாந்திரி என்ற பத்திரிகையை தொடங்கினார். ஆரம்பம் முதலே சுப்பிரமணிய சிவா தொழிலாளரின் மீதூ மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டு அவர்களுக்காக அயராது உழைத்தார்.

1920-ஆம் வருடம் கல்கத்தாவில் லாலா லஜபதி ராயின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் சம்பந்தமாக நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு விபின் சந்திர பாலர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக நின்றார். அவர் கலந்து கொள்ளாத மாநாடுகளோ, போராட்டங்களோ இல்லை என்றே சொல்லலாம்.

அவற்றில் எல்லாம் சிவாவின் எரிமலைப் பிரசங்கங்கள் இடம் பெற்றுள்ளன. சிவா மிகுந்த துணிச்சல் மிக்கவர். காந்தீயத்தின்பால் அவர் உள்ளம் சென்றாலும் அவரின் தீவிர தன்மை என்றுமே அடங்கியதில்லை. சிவாவின் பிரசங்கங்கள் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியதால் ஆங்கிலேய அரசாங்கம் அவர் பேச தடைவிதித்தது.

தருமபுரி அருகே உள்ள பாப்பாராபட்டியில் உள்ள தனது ஆசிரமத்தில் தேசபந்து சித்தரஞ்சன் தாசைக் கொண்டு 23-1-1923-ல் பாரத மாதாவிற்கு ஆலயம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.

மறுபடியும் சிவா மூன்றாம் முறை சிறை செல்ல நேர்ந்தது. இது ஓர் ஆண்டு சிறைவாசம். அதுகுறித்து இவர் ஒரு வழக்கு தொடர்ந்து அதிலிருந்து விடுதலையானார். இவர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டதனால் இவரை அன்றைய பிரிட்டிஷ் அரசு ரயிலில் பயணம் செய்வதை தடை செய்திருந்தது.

எனவே இவர் மதுரையிலிருந்து தன் உடல் உபாதையையும் பொருட்படுத்தாமல் பாப்பாரப்பட்டிக்கு வந்துவிட வேண்டுமென்று கால்நடையாகவே பயணம் செய்து வந்து சேர்ந்தார்.

இவருக்கு வயது அதிகம் ஆகவில்லையாயினும், தொல்லை தரும் கொடிய வியாதி, ஆங்கில அரசின் கெடுபிடியினால் கால்நடைப் பயணம் இவற்றல் ஓய்ந்து போனார்.

இவர் யாருக்காகப் போராடினாரோ அந்த மக்களும் சரி, சுதந்திரத்துக்காக முன்நின்று போராடிய காங்கிரசும் சரி, இவர் காந்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இவர் ஒதுக்கப்பட்டார். மனம் உடைந்த சிவா 23-7-1925இல் இவ்வுலக வாழ்க்கையை நீத்து அமரரானார்.

ராம கிருஷ்ணர் மீதும் விவேகானந்தர் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட சிவா அவர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சி செய்த சுப்பிரமணிய சிவா பல கனவுகளுடன் மறைந்து விட்டார்.

திரு. சுந்தர்
கட்டுரையாளர்

Next Post

Subramaniya Siva- One Of the Greatest Nationalists Of The Tilak Era

Sat Jul 23 , 2022
VSK TN      Tweet    ஆங்கிலத்தில் s என்று ஆரம்பிக்கும் பெயர்கள் தான் அதிகம். அது போல தமிழ் மொழியில் சுப்ரமணியம் என்று பெயர் வைத்துக் கொண்டவர்கள் அதிகம். சுதந்திரம் எங்கு நசுக்கப்படுகிறதோ, அங்கே நான் சென்று என்னால் முடிந்த அளவு பாடுபட்டு சுதந்திரதிற்காக போராடுவேன் என்று எங்கு அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கு நான் தோன்றுவேன் என்று கிருஷ்ண பரமாத்மா போல் முழங்கியவர் தான் நம் சுதந்திர போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா […]