Chennai – Sandesh (SETHU)

15
VSK TN
    
 
     
சேது
——————————————————————–
சென்னையிலிருந்து; செய்தியுடன் பண்பாடு
கலி 5113 நந்தன ஆடி 19 ( 2012, ஆகஸ்ட் 4 )
ஹிந்துவின் உறுதி வெற்றி பெற்றது 
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், அகரம் கிராமத்தில், 12 ஆண்டுகளுக்கு முன்பு அகரம் கிராமத்தில், ஒரு முஸ்லீம் குடும்பமும் இருந்ததில்லை. சித்திக் என்ற முஸ்லீம் மாவட்ட ஆட்சியாளராக வந்தார். அவர் வட்டார வளர்ச்சி அதிகாரி, கிராம பஞ்சாயத்தார் உள்ளிட்டோரை வற்புறுத்தி வனத்துறை நிலங்களை ‘முஸ்லீம் புதைமேடு ‘ என்று ஒதுக்கீடு செய்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றச் செய்தார். சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு நான்கு முஸ்லீம் குடும்பங்கள் இந்த கிராமத்தில் நுழைந்து குடியேறின. சட்ட விரோதமாக கையகப்படுத்தபட்ட’ நிலத்தில் ஒரு மசூதி கட்டப்பட்டது. பின்பு தொழுகை நேரத்தில் கூம்பு வடிவ ஓலிபெருக்கி மூலம் வந்த அவர்களுடைய தொழுகை சத்தம் உள்ளூர் கிராம மக்களுக்கு இடையூறாக இருந்தது. கூம்பு பெருக்கி பொருத்த சட்டப்படி உரிமம் பெற வேண்டும். இது பற்றி உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு தெளிவாக உள்ளது: “ஒருவரின் பிரார்த்தனை மற்றவர்களின் அமைதியை குலைக்கவோ அல்லது தொந்தரவு கொடுக்ககூடியதாகவோ இருக்ககூடாது. ஓலிபெருக்கிகள் கூடாது”. கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்த பிறகும் கூம்பு ஓலிபெருக்கியை கழற்றவில்லை. போலீசிடம் புகார் செய்தனர். பலன் இல்லாமல் போகவே, கிராம மக்கள் ஒருங்கிணைந்து ஒரு நாள் ‘பந்த்’ற்கு அழைப்பு விடுத்தனர். ஊர் மக்களின் எதிர்ப்பை வெளிபடுத்தும் விதம் ஒரு நாள் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதற்கு பின்பு தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ். பி ஆகியோர் சமாதான பேச்சிற்கு அழைப்பு விடுத்தனர். இந்து முன்னணி செயல்வீரர்கள் சுப்பு நாகராஜன், ராஜா, பிரேமானந்த், அனந்தநாராயணன் ஆகியோர் தலைமையில் 100 கிராமவாசிகள் சமாதான பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். எழுத்து மூலமாக ‘கூம்பு பெருக்கி’ எடுத்து விடுவதாக கூறினர். ஆனால் மறுநாள் சுமார் 200 முஸ்லீம்கள் அகரம் மசூதியில் தொழுகை நடத்தினர். இது கிராம மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒப்புதல் அளித்தபடி ‘கூம்பு பெருக்கி’யை கழட்ட மறுத்தனர். கோபமடைந்த கிராம மக்கள் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தனர். போலீஸ் அதிகாரிகள் கூம்பு பெருக்கியை கழட்டிவிடுவதாக உறுதியளித்தனர். பெரும் போராட்டத்திற்கு பிறகு ‘கூம்பு பெருக்கி’யை கழற்றி ‘பாக்ஸ் பெருக்கி’ பொருத்தப்பட்டுள்ளது. 
ஹிந்துக்களின் விழிப்புணர்ச்சிக்கு கிடைத்த வெற்றி
விஜய் டி.வி நடத்தும் ‘நீயா நானா’ உரையாடல் நிகழ்ச்சியில் சில நாட்களாக ‘கார்பரேட் சாமியார்கள்’ என்ற தலைப்பில் உரையாடல் நிகழ்ச்சி (டாக் ஷோ) விளம்பரம் ஒளிபரப்பானது. இந்து மதத்தின் நம்பிக்கையை சாடும் வகையில் அமைத்திருந்தது. இது இந்துக்களின் நம்பிக்கைகளை காயப்படுத்தி நோக்கம் என்று தெளிவாயிற்று. இந்து முன்னணி செயல்வீரர்கள் நகர ஆணையரிடம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்ப கூடாதென்று புகார் மனு அளித்தனர். நகர ஆணையர் விஜய் டி விக்கு நோட்டீஸ் அனுப்பினர். எந்த வித வாக்குறுதி வராத காரணத்தால் ஹிந்து முன்னணி செயல்வீரர்கள் தொலைக்காட்சி சேனல் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். சுமார் 40 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் எஸ் எம் எஸ் மூலம் செய்தி பரவியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தொலைபேசியில் தொகுப்பாளர் கோபிநாத்திடம் இந்த எபிசோடை கைவிடுமாறு உறுதியாகவும், கண்ணியமாகவும் எச்சரிக்கை செய்தனர். கோபிநாத் ஹிந்து முன்னணி தலைவர் ராம கோபாலனிடம் தொடர்பு கொண்டு ஹிந்துக்களின் உணர்வை பாதித்ததற்கு மன்னிப்பு கோரினார். மேலும் இந்த நிகழ்ச்சி எந்த சமயத்திலும் ஒளிப்பரப்பாகாது என்று உறுதி கூறினார். 
சாமி கும்பிட தண்டம் கட்டணுமா? – ஹிந்து கேட்கிறான் 
ஹிந்து கோவில் நிர்வாகத்தில் மதச்சார்பற்ற அரசின் செயல்பாடு ஹிந்து ஒற்றுமையை பாதிக்கிறது. உதாரணமாக சாமி தரிசனத்திற்கு சிறப்பு கட்டணம் வசூலிப்பது. இது கண்டனத்திற்குரியது. ஹிந்து அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கோவில்களில் குறைந்தபட்சம் ரூ.100 முதல் ரூ.500 வரை வசூலிக்கபடுகிறது. இந்த பணம் கோவில்களின் பராமரிப்பிற்காக என்று கூறிக் கொள்கிறார்கள். கோவில்களில் வசூலிக்கப்படும் சிறப்பு நுழைவு கட்டணத்தை எதிர்த்து சமீபத்தில் ஹிந்து முன்னணி கையெழுத்து பிரச்சாரம் தொடங்கியது. சிறப்பு தரிசனம் என்ற பெயரில் பணத்தை வசூலிப்பது நடைமுறையில் கடவுள் முன்பு ஏழை மற்றும் பணக்காரர் என்ற வேற்றுமை ஏற்படுத்தும். இந்த கட்டணத்தை ரத்து செய்ய கோரி 2012 ஜூலை 22 அன்று மாநிலம் முழுவதும் ஹிந்து முன்னணி செயல்வீரர்கள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 42 இடங்களில் 14,898 தொண்டர்கள் பங்கேற்றனர். சிறப்பு நுழைவு கட்டணத்தை ரத்து செய்ய கோரி சுமார் 25 லட்சம் பக்தர்களின் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன. “கேரளாவில் உள்ள சபரிமலை, குருவாயூர் கோவில்களில் சிறப்பு நுழைவு கட்டணம் வசூலிப்பதில்லை. அது போல நம் மாநிலத்தில் ஏன் செயல் படுத்த முடியாது?” என்று ஹிந்து முன்னணி சென்னை மாவட்ட செயலாளர் திரு எஸ் மனோகரன் கேள்வி எழுப்புகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Chennai - Sandesh

Tue Aug 7 , 2012
VSK TN      Tweet     August 4, 2012  In this Tamilnadu village, Hindus had their way Agaram village, Pochampalli Taluk, Krishnagiri District (Tamilnadu), did not have any Muslim family 12 years back. Then came Siddhique, the District Collector, a Muslim obviously. He is said to have pressurized the gram Panchayat and got a […]