அகில பாரத இணை செயலர் தத்தாத்ரேய ஹொசபலே அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்த தகவல்

16
VSK TN
    
 
     
அஸ்ஸாமிலும் மற்ற வடகிழக்கு மாநிலங்களிலும் படிக்க, வேலை செய்து பிழைக்க அதிக வாய்ப்பு இல்லை என்பதால் மற்ற மாநிலங்களுக்குப் பரவி வாழ்ந்து வரும் வடகிழக்கு மக்கள் இந்த அளவு கோரத்தைக் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க மாட்டார்கள். நாங்கள் சாக விரும்பவில்லை” என்று ஆகஸ்டு 16 வியாழனன்று சென்னை ரயில் நிலையத்தில் வடகிழக்கு மாநில இளைஞர் சமன்லால் பிரிஜ் சொன்ன சொல் மொத்த சூழ்நிலையையும் சித்தரித்துவிட்டது. ஆனால் இங்கே எங்களை யார் காப்பாற்றுவார்கள்?” என்று அதே இடத்தில் ஊருக்கு ரயிலேறக் காத்திருக்கும் போது இன்னொரு வடகிழக்கு இளைஞர் தினேஷ் சொன்ன சொல் தான் பிசிறடிக்கிறது. காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம் என்று பல சென்னை அன்பர்கள் அன்று இரவு முழுதும் உடனிருந்து தெம்பு தந்தார்கள். அவர்கள் – வேறு யார்? – ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள். சென்னையில் மட்டுமல்ல, பயணப் பாதை நெடுக ஆர்.எஸ்.எஸ்., ஏ.பி.வி.பி., பா.ஜ.கவினர் உள்ளிட்டோர் ரயிலில் அஸ்ஸாம் செல்லும் இளைஞர்களுக்கு உணவும் பாதுகாப்பும் ஏற்பாடு செய்தார்கள். அது மட்டுமல்ல, புனே, மும்பை, பெங்களூர், கேரளா, ஹைதராபாத், டில்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வடகிழக்கு பகுதி மாணவர்களையும் மற்றவர்களையும் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் சந்தித்துப் பேசி அவர்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க எல்லா விதத்திலும் உதவுவதாக உறுதி கூறியிருக்கிறார்கள். ஹெல்ப் லைன் தொலைபேசி எண்களையும் அறிவித்து உதவி இருக்கிறார்கள். சென்னை தொலைபேசி எண்: 044-24343457 (ஏபிவிபி)சி இது, ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத இணை செயலர் தத்தாத்ரேய ஹொசபலே ஆகஸ்டு 16 அன்று அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்த தகவல்.
இப்படி பல மாநிலங்களுக்கு வன்முறை மிரட்டல் பரவி பல்லாயிரக்கணக்கில் வடகிழக்கு இளைஞர்கள் வேலையையும் படிப்பையும் தொடர முடியாமல் உயிருக்கு பயந்து ஊர் திரும்பும் சூழ்நிலை உருவானது எப்படி என தத்தாத்ரேயா வெளியிட்ட அறிக்கையில் திட்டவட்டமாக ஆனால் முழு பொறுப்புணர்வுடன், தொகுத்தளித்திருக்கிறார். அந்த அறிக்கையிலிருந்து: நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மனதில் பயத்துடன் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களும், இளைஞர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து ஆர்.எஸ்.எஸ் வேதனை கொள்கிறது. ஜூலை 20 அன்று அஸ்ஸாமில் வெடித்த சம்பவங்களை அடுத்து அஸ்ஸாமில் நிலவும் சூழ்நிலை, ஏதோ ஒரு தனிப்பட்ட அல்லது திடீர் சம்பவம் அல்ல. முன்னதாக இது போல தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களின் இன்னொரு காட்சிதான் இது. கடந்த காலத்தில் இதுபோன்ற மோதல்களால் பரவலான அளவில் வன்முறைகள் வெடித்ததுண்டு; அதற்குக் காரணம் சட்ட விரோதமாக மிகப்பெரிய எண்ணிக்கையில் ஊடுருவியுள்ள பங்களா தேசத்தவர்கள் தான். 
வடகிழக்கில் பங்களாதேஷ் முஸ்லிம்களுக்கும் உள்ளூர் சமூகங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக பதற்றம் இருந்து வந்தது. பக்கீரா கிராம் ஈத்கா சம்பவம் சமீபத்தில் நடைபெற்றது; நான்கு ஆண்டுகளுக்கு முன் உதால்குரியில் வன்முறை வெடித்தது. இவையெல்லாமே அந்தப் பதற்றத்தின் காரணம் தான். அதிகரித்துக் கொண்டே இருக்கும் பங்களாதேஷ் முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் காரணமாக அமைதியும், நல்லிணக்கமும் வடகிழக்கில் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் சமூக – பொருளாதார பிரச்சினைகளையும் அரசியல் பிரச்சினைகளையும் ஏற்படுத்தி விட்டது. இவற்றையெல்லாம் நேரடியாக அனுபவிப்பதால் அஸ்ஸாம் மக்களுக்கும் வடகிழக்கின் மற்ற பகுதி மக்களுக்கும் இதெல்லாம் நன்கு தெரிந்த விஷயம். வங்க தேசத்தவர்களின் ஊடுருவலைப் பற்றி பல்வேறு அமைப்புகள் பிரச்சினை எழுப்பி இந்த தீராத தலைவலிக்கு தீர்வு காணும்படி மத்திய அரசையும், மாநில அரசையும் கோரி வந்துள்ளன. கடந்த 30 ஆண்டுகளாகவே தேசிய அளவில் ஆர்.எஸ்.எஸ்.ஸும் மற்றும் பலரும் கூட இதே கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கைகளுக்கு எதற்கும் தீர்வு தென்படக்காணோம் என்பது துரதிருஷ்டவசம். அவ்வப்போது வன்முறை வெடிப்பது அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் இந்தியப் பிரஜைகளுக்கும் சட்ட விரோதமாக ஊடுருவி உள்ளவர்களுக்கும் இடையே நடக்கும் மோதல்களால் தான் என்பதே கண் கூடான நிலவரத்தின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். கொண்டுள்ள தீர்மானமான கருத்து.”
நடப்பு சந்தர்பத்தில் வன்முறை சம்பவங்கள் பற்றி அவரது அறிக்கை இப்படி சொல்கிறது: அண்மையில் மும்பையில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. அதைப் பார்க்கும் போது நிலவரம் வெகுவாக கவலையளிக்கும் அளவுக்கு முற்றிவிட்டது என்பது புலனாகிறது. புனேயில் மாணவர்கள் தாக்கப்பட்டதும், மும்பை சம்பவமும் அனைவராலும் கண்டனம் செய்யப்படவேண்டிய சம்பவங்கள். ராஞ்சியிலும் இதுபோன்றே வன்முறை வெடித்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது தேசத்தின் மற்ற பகுதிகளில் பதற்றம் உருவாக்கி வன்முறையை பரவலாக வெடிக்கச் செய்ய விரிவான சதி தீட்டப்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. நிலவரம் கட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அனைவரின் பொறுப்பு.” 
தொடக்கத்தில் அஸ்ஸாமில் வன்முறை வெடித்த போது ஆர்.எஸ்.எஸ். அன்பர்கள் ஆற்றத் தொடங்கியுள்ள தொண்டுப் பணிகள் அந்த அறிக்கையில் இவ்வாறு பட்டியலிடப்படுகின்றன: அஸ்ஸாமில் வன்முறை வெடித்த உடனேயே ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்களும் சங்கத்திடம் ஊக்கம் பெற்ற மற்ற அமைப்பினரும் முழுவீச்சில் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போடோ பகுதிகளில் ஸ்வயம்சேவகர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக செயல்படுகிறார்கள். 60க்கும் அதிகமான நிவாரண முகாம்களில் உணவுப் பொருள்கள், சமைத்த உணவு, மருந்து, உடை, வீட்டு உபயோகப் பாத்திரங்கள் முதலியவற்றை வழங்கி வருகிறார்கள். குஜராத்திலிருந்தும், உத்தரப் பிரதேசத்திலிருந்தும் அணி அணியாக ஆர்.எஸ்.எஸ். அன்பர்களான டாக்டர்கள் வந்து மூன்று வார காலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ உதவி வழங்கினார்கள். நிவாரணம், மறுவாழ்வு குறித்து மேற்கொண்டு நடவடிக்கைகள் திட்டமிடப்படுகின்றன.”
ஒரு விஷயம் உறுதிப்படுகிறது: ‘நாட்டின் எந்தப் பகுதியிலும் எந்தப் பகுதியைச் சேர்ந்தவருக்கும் நாதியில்லாமல் போய்விடவில்லை’ என்பது போன வாரம் தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. தேசத்திற்கே எவ்வளவு மகத்தான நிம்மதி தரும் விஷயம் இது!
தேசம் பத்திரமாகத் தான் இருக்கிறது.
மற்ற மாநிலங்களில் வசிக்கிற அல்லது படித்துக் கொண்டிருக்கிற அஸ்ஸாம் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த நமது சோதரர்கள் பீதியடைய வேண்டாம். எனினும் என்ன உதவி தேவைப்பட்டாலும் உடனே அருகிலிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அல்லது ஏ.பி.வி.பி அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் 
தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேலும் தாமதமின்றி தயாரித்து பிரஜை உரிய விதத்தில் நடத்தவேண்டும்
பங்களாதேஷிலிருந்து ஏராளமானோர் இங்கு ஊடுருவியதுதான் அடிப்படை பிரச்சினை. கலவரம் வெடித்த கோக்ரஜார் பிராந்தியம் முழுவதும் இத்தகைய ஊடுருவல் காரர்கள் நிறைந்துள்ளனர். நிலப்பிரச்சினை தொடர்பாக அடிக்கடி மோதல்கள் நடைபெற்றுள்ளன. பூர்வீக குடிமக்கள் தங்களது நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். பங்களாதேஷிகள் நிலத்தை ஆக்கிரமித்தார்கள். இது பெரும்பான்மையினர் – சிறுபான்மையினர் பிரச்சினையல்ல, இது இந்து – முஸ்லிம் பிரச்சினை அல்ல. இது பங்களாதேஷி ஊடுருவல் காரர்களுக்கும் பாரதத்தின் பூர்வீக குடிமக்களுக்கும் இடையிலான பிரச்சினை-. ஊடுருவல் காரர்களை அஸாமிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றவண்டும். இதை உடனடியாக செய்தால்தான் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். சட்டவிரோதமாக ஊடுருவியவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அவர்கள் ரேஷன் அட்டைகளை பெற்றுள்ளார்கள். வேறு பல ஆவணங்களையும் பெற்றுவிட்டனர். ஆனால் இதற்கு அரசு சரியான வழிமுறையை கையாளவில்லை. முதலில் ஊடுருவல் காரர்களை அடையாளம் காணவேண்டும். அதன் பிறகு வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களது பெயரை நீக்கவேண்டும். மற்ற ஆவணங்களிலிருந்தும் அவர்களது பெயரை அகற்றவேண்டும். அதன் பிறகு அவர்களை இங்கிருந்து வெளியேற்றவேண்டும். இனிமேல் அவர்கள் மறுபடியும் இங்கு திரும்பவராதபடிக்கு கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். அரசியல் ஆதாயத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இப்பிரச்சினையில் மெத்தனம் காட்டப்பட்டு வந்துள்ளது. இது இந்த நாட்டின் நலனுக்கு ஊறுவிளைவித்துக் கொண்டிருக்கிறது. 
-பேட்டி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலர் சுரேஷ் ஜோஷி
பெங்களூரிலிருந்து சென்னை வழியாக அஸ்ஸாம் செல்லும் ரயில்களில் ஊர் திரும்பும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு ஆகஸ்ட் 16 வியாழன் அன்று இரவு முழுவதும் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் நூற்றுக்கணக்கான சென்னை ஸ்வயம்சேவகர்களும் மற்ற ஹிந்து அமைப்புகளின் தொண்டர்களும் உணவு வழங்கி ஆறுதல் கூறி வழி அனுப்பினார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Press release by Hindu munnani

Sun Aug 26 , 2012
VSK TN      Tweet     25-8-2012 இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! அறநிலையத்துறை நிலங்கள் வேறு அரசு துறைக்கு மாற்றக்கூடாது..   சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தோடு ஓர் ஒப்பந்தம் மூலம் பங்கு தாரராகி இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஆலயச் சொத்துகளில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறது. இதனை இந்து முன்னணி வன்மையாகக் […]