‘பாரதம்’ என்னும் சொல்லை பயன்படுத்துவோம், இந்தியா அல்ல, – ஆர் எஸ் எஸ் சர்சங்கசாலக் அறைக்கூவல்

VSK TN
    
 
     

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பகவத் ஜி, “பாரத்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். மூன்று நாள் பயணமாக கவுகாத்தியில் உள்ள பகவான் மகாவீர் தர்மசாலாவில் நடந்த நிகழ்ச்சியில் செப்டம்பர் 1, 2023 அன்று உரையாற்றும் பொழுது அவர் பேசுகையில், “நாம் அனைவரும் ‘இந்தியா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை விடுத்து ‘பாரதம்’ என்ற பெயரை பயன்படுத்தத் தொடங்க வேண்டும்” என்றார். மேலும் அவர், “ஆங்கிலம் பேசுபவர்களிடம் பேசும்போது சிறப்புப் பெயர்கள் மாறாது. உதாரணமாக கோபால் என்ற பெயர் ஆங்கிலத்தில் சொன்னால் மாறாது. நம் நாட்டில் பல நகரங்கள் உள்ளன, அவற்றின் பெயர்கள் பல ஆண்டுகளாக உள்ளன. அதேபோல், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் பேசும்போது ‘இந்தியா’ என்று சொல்ல வேண்டியதில்லை. நாம் பாரதம் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும்.
சர்சங்சாலக் ஜி மேலும் கூறுகையில், நாம் எங்கு சென்றாலும், ‘பாரதம்’ என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்த வேண்டும். யாருக்காவது புரியவில்லை என்றால், கவலைபட வேண்டாம். எப்பொழுது புரிய வேண்டுமோ அப்பொழுது அவர் புரிந்துகொள்வார்.
யாருக்காவது புரியவில்லை என்றால் கவலைப்பட தேவையில்லை. நாம் அந்த நபரை தான் புரிந்து கொள்ள வேண்டும், நாம் அவருக்கு புரிய வைக்க வேண்டும் என்று முனைய வேண்டாம். நாம் சுயசார்பு மற்றும் சுதந்திர எண்ணம் கொண்டவர்கள்.
“இன்று முழு உலகத்திற்கும் நமது தேவை இருக்கிறது. இன்று நம்மை யாரும் புறக்கணிக்க முடியாது. அனைவரையும் அரவணைத்து செல்வது நமது தேசத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் என்பதால் உலகம் முழுவதையும் ஒன்றாகக் கருதுகிறோம்.
இது நமது தேசத்தின் ஞானம், இன்று உலகம் முழுவதற்கும் இந்த அறிவு தேவை”
என்று ஆர்எஸ்எஸ் சர்சங்சாலக் மேலும் கூறினார்.
டாக்டர் மோகன் பகவத் ஜி, “ஒவ்வொருவரும் மாற்றத்தை விரும்பி, மாற்றத்திற்காக செயல்பட்டு, அதற்க்காக தியாகம் செய்யத் தயாராக இருக்கும் போதுதான் மாற்றம் ஏற்படும்” என்றார். “நாம் பல மொழிகளைக் கற்றுக்கொள்கிறோம். ஆனால் தாய்மொழியை மறக்கக் கூடாது. நம் குடும்பங்களில், குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் இந்தியில் அல்லது அசாமிய மொழியில் எண்களை எண்ணத் தெரிவதில்லை. நம் குழந்தைகள் மற்ற எல்லா மொழிகளையும் கற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் நாம், வீட்டில் நம் தாய்மொழியை மட்டுமே பயன்படுத்த வலியுறுத்த வேண்டும். இதன் மூலம்தான் நமது சமுதாயத்தையும், பாரதத்தையும் வலிமையானதாக மாற்ற முடியும்.”

Next Post

Spirituality and Science

Sat Sep 2 , 2023
VSK TN      Tweet     Rationalism and scientific temper are important. But they have limitations. One of the most rationalist leaders, Jawaharlal Nehru, became an ardent devotee of Ananda Mayi Ma in his later years and used to visit her abode in Dehradun many times. “I have been attracted towards the Advaita (non-dualist) […]