Sevabharathi’s free medical service completes 1000th camp in Chennai

70
VSK TN
    
 
     
Sevabharathi , the largest seva organization of our country has been working in the areas of Education, Healthcare, Social Welfare, Disaster relief and Economic Development. Lakhs of service activities are being carried out across India.
One such initiative by Sevabharathi Tamilnadu is Free Mobile Medical unit in Chennai. Two Sevabharathi Medical van, one for North Chennai and another for South Chennai, are into the service for this purpose. Qualified Doctors and Nurses from Sri Chakra Multi-speciality Hospital have been providing free medical checkup to people.
Recently at Mappedu, near Chennai Selaiyur, the 1000th Free Medical Camp of South Chennai was conducted. On 29th July 2018, Volunteers and medical team who are part of this service were honoured by Seva Bharati Tamilnadu at a simple function held at Selaiyur. 
It was presided by Shri. K. Vedhagiri, President, Sevabharthi Tamilnadu. Dr. Sathiya Narayanan, Managing Director of Sri Chakra Multi-speciality Hospital was the Chief Guest.

Other Special invitees included Dr. V. Niranjan, Director of RxMD Pvt. Ltd., Ln. V. Kalyana Sundaram – President of Lions Club of Madras, Hasthinapuram, Shri VA. BalaSubramanian, Managing Director of Arivar Retail Pvt. Ltd. and Shri B. Rabu Manohar, President Seva Bharathi Tamilnadu

So far, more than 40,000 people have participated in these medical camps. The beneficiaries shared their experience and thanked Sevabharathi Tamilnadu for this noble service.

எளியவர்களுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் தொண்டுக்கு ஒப்பாகும் என்கிறார் ஸ்வாமி விவேகானந்தர். இதை ஆதாரமாக கொண்டு தேசத்தின் மிகப்பெரிய தொண்டமைப்பான சேவாபாரதி தேசம் முழுவதும், கல்வி, மருத்துவம், சமூக சேவை, பொருளாதார மேம்பாடு, பேரிடர் மேலாண்மை துறைகளில் பல்வேறு சேவை பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சென்னையில் கடந்த 3 ஆண்டுகளாக இலவச நடமாடும் மருத்துவ முகாமை, ஸ்ரீ சக்ரா பன்னோக்கு மருத்துவமனையுடன் இணைந்து சேவாபாரதி தமிழ்நாடு நடத்தி வருகிறது. தினமும் தென் சென்னைக்கு ஒன்று, வட சென்னைக்கு ஒன்று என்று இரண்டு நடமாடும் மருத்துவ வாகனம் சென்று, எளிய மக்கள் வாழும் பகுதியில் இலவச மருத்துவ முகாமை நடத்தி வருகிறது. தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. ஸ்ரீ சக்ரா பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றும் திறமை வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் இந்த முகாமில் மக்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்ப்பதுடன், மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

தென் சென்னையின் 1000வது மருத்துவ முகாம் கடந்த ஜுலை மாதம், தாம்பரத்தை அடுத்த மப்பேடு பகுதியில் நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற விழாவில் ஸ்ரீ சக்ரா பன்னோக்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சத்திய நாராயணன், RxMD Pvt Ltd நிறுவனத்தின் இயக்குனர் திரு. நிரஞ்சன், ஹஸ்தினாபுரம் லயன்ஸ் கிளப் தலைவர் திரு கல்யாண சுந்தரம், Arivar Retail Pvt Ltd நிர்வாக இயக்குனர் திரு Va பாலசுப்ரமணியன், சேவா பாரதி தமிழ்நாடு தலைவர் திரு. B. Rabu Manohar மற்றும் துணை தலைவர் திரு K வேதகிரி ஆகியோர் பங்கேற்றனர்.

எவ்வித வேறுபாடும் இல்லாது நடத்தப்பட்டு வரும் இந்த இலவச மருத்துவ முகாம்களில், இதுவரை 25,000 பெண்கள் உட்பட சுமார் 40,000 பேர் பயனடைந்துள்ளனர். பல்வேறு காரணங்களால் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் இருந்த பலர், தங்கள் பகுதிக்கே வந்து இலவச சேவையளிக்கும் சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பிற்கு பாராட்டு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

SAKSHAM voices for girl children in Kanyakumari

Tue Jul 31 , 2018
VSK TN      Tweet     Recently a reputed CSI run mentally retarded centre for girls was in news.  It is reported that a 17 year old mentally retarded girl has been rescued from the orphanage.  The girl children with disability has been tortured by the care-takers.  As per reports, around 14 girl children […]