Vijayadhasami Bowdhik By Sarsangachalak ( Tamil Translation)

17
VSK TN
    
 
     

மதிப்பிற்குரிய சிறப்பு விருந்தினர், மரியாதைக்குரிய விஷேச அழைப்பாளர்கள், கனவாங்கள், தாய்மார்கள், சகோதிரிகள், மா.சங்கசாலகர்கள் மற்றும் பிரியமான ஸ்வயம்சேவக சகோதர்களே….

நமது புனிதமான சங்க கார்யத்தை 90 ஆண்டுகள் முடித்த பின்பு இன்று கலியுகாப்தம் 5118 அதாவது 2016ல் நாம் கொண்டாடும் இந்த விஜயதசமி விழாவானது விஷேச முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கடந்த ஆண்டு நான் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயஜியின் நூற்றாண்டுப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அந்த நிகழ்வுகள் இந்த ஆண்டும் தொடரப் போகிறது. இந்த ஆண்டும் அதே போன்று பெருமை மிக்க மேலும் சில சரித்திர நாயகர்களை, யாருடைய வாழ்வும் வாக்கும் இன்றைய தேவையாக இருக்கிறாதோ அவர்களின் நினைகளை புதுபிப்போம்.
ஆசார்யா அபிநவகுப்தாவின் ஆயிரமாவது ஆண்டு இது. தன்னை உணர்ந்த சைவ தரிசனத்தை ஆதரித்த முதன்மையான குரு அவர். கவிதை, இசை, மொழி, ஒலியியல் என பல துறைகளில் அவரின் பங்கு மிகவும் அதிகாரம் கொண்டதாகவும், அத்துறைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியதாகவும் இருந்திருக்கிறது. அவரின் “சப்தம்” பற்றிய கோட்பாட்டாராய்ச்சி, ஒருவர் சப்தத்தின் மூலம் கடவுளை அடையமுடியும் என்பதற்கு ஆதாரமாக மட்டுமில்லாமல் இன்றைய கணிணி அறிஞர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டிய பாடமாகவும் இருக்கிறது. அவரது சாதனைகளுக்கெல்லாம் சாதனை தன் வாழ்நாள் தவமாக காஷ்மீர் மண்ணிலிருந்து நம்முடைய சானாதன் தர்மத்தை உயிர்ப்பித்தது நம் தேசத்தின் வேற்றுமையில் ஒற்றுமையை காண உதவுகிறது. சைவ சிந்தாந்ததின் தீவிர பின்பற்றுபவராக இருந்தாலும், மற்ற சிந்தாந்தகளின் மதிப்புகளையும் அதே போல் அறிந்து அதன் மெய்கருத்தை உள்வாங்கியவர். அன்போடும், பக்தியோடும் தூய்மையான மற்றும் இணக்கமான வாழ்க்கை வாழ்வதற்கு தன்னுடைய வாழ்க்கை மற்றும் உபதேசம் மூலம் செய்தியாக கூறி “பைரல் குக்பா” என்ற குகையில் (காஷ்மீர் உள்ள பாத்கியான் அருகில்) சைவ தத்துவத்துடன் ஒன்றென கலந்தார்.

நமக்கெல்லாம் ஸ்ரீபாஷ்யம் கொடுத்த தென்பாரத்தை சேர்ந்த பெருமைமிகு ராமானுஜாச்சாரியாரின் ஆயிரமாவது ஆண்டும் கூட இது. தெற்கிலிருந்து டில்லி வரை நடந்தே சென்று பூஜைக்குரிய கடவுள் சிலையை சுல்தானிடமிருந்து மீட்டது மட்டுமல்லாமல், அந்த கடவுளுக்கு பக்தையாக மாறிய சுல்தானின் மகளை அதற்கு தகுதியானவளாக்கியவர். ஜாதி, மதம் என எந்த வேறுபாடில்லாமல் பக்திக்கும், ஞானத்திற்குமான கதவுகளை அனைவருக்குமாக திறந்தவர். சமுதாய நல்லிணக்கம் மற்றும் பழமை மாறாத தர்மத்தை கடைபிடித்தது மட்டுமல்லாமல், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் தேசம் முழுவதும் ஊக்குவித்தவர்.

இந்த தேசத்தை, சமுதாயத்தை, தர்மத்தை பாதுகாக்கவும், சுயமரியாதையை உயர்த்தவும், மூடதனத்தை அகற்றவும், பெருஞ்செயற் பண்பு மற்றும் ஞானம் (ஆநநசi யஅன Pநநசi) என இரு அணிகளனிந்த சீக்கிய பரம்பரையின் பத்தாவது குருவான ஸ்ரீகுருகோவிந்சிங் அவர்களின் 350வது பிறந்த ஆண்டாகவும் இந்த ஆண்டு அமைகிறது. குருகோவிந்சிங் அவர்களின் முழு ஈடுபாடும் தேசத்திற்காகவும், தர்மத்திற்காகவும் கடுமை தணியாத போராட்டங்களும் இன்றைய ஹிந்து இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என சுவாமி விவேகானந்தர் தன்னுடைய லாகூர் சொற்பொழிவின் பொழுதும் கூட நினைவு கூறுகிறார்.

இந்த ஆண்டு ப்ரஜ்னாக்ஷூ ஸ்ரீகுலப்ரோ மகராஜின் நூற்றாண்டும் கூட. அவர் தன்னை ஸ்ரீ ஞானேஸ்வரின் மகளாக கூறிக்கொண்டு, நம்முடைய மற்றும் மேற்கத்திய ஆன்மீகம், நவீன அறிவியல் பற்றி கடும் ஆராய்ச்சி செய்தவர். நாம் வெட்க படக்கூடிய ஆங்கில ஆட்சியில் காலத்தில் அவர் மறுக்க முடியாத தர்க்க முறையில் நம்முடைய பழமையான அறிவு மற்றும் நவீன அறிவியல் கோட்பாட்டின் மூலம் தர்மத்தின், கலாச்சாரத்தின் மேன்மையை நிலைநாட்டி தேசத்தின் தன்னம்பிக்கையை வலுவூட்டினார். அவர் தன்னுடைய பல தொகுதிகள் மூலம் வருங்கால அறிவியல் வளர்ச்சி, அதன் மனிதத்துவம், பொருள், உலகில் உள்ள அனைத்து மதங்கள் இணக்கமான கூட்டிணைப்பு ஆகியவை நம்முடைய ஆன்மீக காலச்சாரத்தை அடிப்படையாக கொண்டால் மட்டுமே முடியும் என தெளிவாக்கினார்.

இந்த புகழ்ப்பெற்ற பெருமைமிகு தலைவர்களின் படிப்பினைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்பது கடந்த ஓராண்டு நாம் சந்தித்த சூழ்நிலைகளை கவனமாக பார்க்கும் பொழுது நமக்கு புரியும்.

வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தும், நம்முடைய ஆசைகள் அதிகமாக நிறைவேறாமல் இருந்தால் கூட இந்த அரசு எடுத்துள்ள கொள்கைகள் மூலம் நம் தேசத்தில் முன்பு சூழ்ந்திருந்த அவ நம்பிக்கை தற்பொழுது அகன்று நம்பிக்கை வளர தொடங்கியுள்ளதால் நம் தேசம் முன்னேறுவதாக தெரிகிறது. அதே நேரத்தில் நாம் ஏற்றுக்கொண்ட இந்த ஜனநாயக மாதிரியில் நாம் எதிர்ப்பார்த்தது போல் ஆட்சிக்கு வர முடியாத அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் லாபத்திற்காக இந்த அரசின் குறைபாடுகளையும், நிர்வாகத்தையும் விமர்சிக்க புதிய உத்திகளை வகுத்து அதில் தங்களுடைய கவனத்தை செலுத்துகின்றனர். ஜனநாயகத்தில் இந்த விமர்சனங்கள் ஒருமித்த தேசத்தின் வளர்ச்சிக்காகவும், அரசியல் மேற்பார்வைக்காகவும், ஆய்வுகாகவும் தேவையாக இருக்கிறது. ஆனாலும் கூட கடந்த ஒராண்டு நாம் பார்த்த அதற்காக அவர்கள் கையாண்ட கீழ்தனமான தந்திரங்கள் நம்முடைய கவனத்தை ஈர்கிறது. ஒருவர் நம் நாட்டின் இன்றைய நிலையையும், உலகத்தின் நிலையையும் மேம்போக்காக பார்த்தால் கூட அவருக்கு அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், சுயநலவாதிகள் ஆகியவர்களுக்கு திறமான, ஒன்றிணைந்த, சுய நம்பிக்கையுடைய பாரதம் திறமான அரசுடன் இருப்பது சகிக்க முடியாமல் தங்களுடைய வேலைகளை நாடு முழுவதும் கட்டவிழ்த்து இருப்பது தெரியும். நம்மிடையே இருக்கும் வேற்றுமைகளையும், பிரிவிகனைளையும், பிராந்திய குறுகிய எண்ணங்களையும் சமூகத்திலிருந்து முழுமையாக நம்மால் அகற்ற முடியாததால் அங்கும் இங்கும் சில அசம்பாவித சம்பங்கள் நிகழ்கின்றன. அந்த சம்பவங்களை தவறாக உபயோகித்து, அதன் மீது பிரச்சைகளை கிளப்பி, இல்லாத ஒரு சம்பவத்தை உருவாக்கி தேசவிரோத சக்திகள் இந்த அரசையும், நிர்வாகத்தையும், இவர்களின் தவறுகளைக் கூட களையக்கூடிய தீங்கில்லாத சுளுளு போன்ற அமைப்புகளை, தேவையில்லாத சர்ச்சைக்கு உள்ளாக்கி, அமைப்பைப் பற்றி தீய எண்ணங்களை மக்கள் மனதில் பதியவைக்க முயல்கின்றன. தங்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இந்த சக்திகளின் ஆசைகளை பார்க்கும் பொழுது அவர்களுடைய பொதுவான மற்றும் தனிப்பட்ட லாபத்திற்காக இவர்கள் கைக்கோர்த்து கொள்வார்கள் என்று தெரிகிறது. எனவே பிரிவினை மற்றும் பகைமையை உருவாக்குவதை லட்சிமாக கொண்ட இந்த சக்திகளின் ஏமாற்றுதலிருந்து நம்மை பாதுக்காத்து கொள்ள முயற்சி உடனடி தேவையாக இருக்கிறது.

சங்க ஸ்வயம்சேவகர்கள் இந்த திசை நோக்கி முன்னேற ஆரம்பித்துவிட்டனர். பல மாநிலங்களில் சமூக நல்லிணக்கம் இன்றைய நிலைப் பற்றிய கணக்கெடுப்பு நடந்துக் கொண்டிருகிறது மற்றும் அதற்கான தீர்வுகளை சங்க ஷாகாகளின் மூலம் மக்கள் மனதில் பல கிராமங்களிலும் பகுதிகளிலும் கண்டறியப்படுகிறது. எடுத்துக்காட்டாக மத்ய பாரத் பிராந்தத்தில் 9000 கிராமங்களில் விரிவான கணக்கெடுப்பு எடுத்து முடிக்கப்பட்டிருகிறது. அதன்படி தற்பொழுது நமக்கு தெரிந்து 40மூ கிராமங்களில் கோவிலில் நுழைதல் சம்பந்தமான பாகுபாடு; 30மூ கிராமங்களில் நீர்நிலைகளை உபயோகித்தல் சம்பந்தமான பாகுபாடு; 35மூ கிராமங்களில் சுடுகாடு பொதுவாக உபயோகித்தல் சம்பந்தமான பாகுபாடு நிலவுகிறது. ஸ்வயம்சேவகர்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசியலமைப்புப்படி கிடைக்க வேண்டிய நன்மைகளை பெற்று தரவும், அரசு மற்றும் நிர்வாகம் கொடுக்கக் வேண்டிய மானியங்களையும் உறுதிச் செய்துக் கொண்டிருக்கின்றனர். சங்க ஸ்வயம்சேவகர்கள் தங்களுடைய வலிமை, அறிவு மற்றும் தகுதிக்கேற்ப சமுக நல்லிணக்கம் உருவாக்க முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயத்தில் சமுதாய நன்மைக்காக துணை நிற்க கூடிய தனிநபரும், அமைப்பும் இதற்காக மேலும் செயல்பட வேண்டும். கண்டிப்பாக 21வது நூற்றாண்டில், இந்த தேசத்தின் வாரிசு ஒருவரின் மேல் ஆதிக்க காரணத்தாலும், அற்பான விஷயத்தினால் ஏற்படும் கோபத்தினாலும் அவமானப்படுத்தப்பட்டால், உடலால் துன்புறுத்தப்பட்டால் அதை விட கேவலம் வேறுறொன்றுமில்லை மேலும் அது பிரிவினைவாதிகள் பாரத்தின் மதிப்பை உலகளவில் குறைக்க அது உபயோகிக்கப்படும் மட்டுமல்லாது நாடு முழுக்க இன்று நடைபெறும் சமூக சீர்த்திருத்தங்களின் வேகத்தை குறைக்கவும் செய்யும்.

நம் அரசியலைப்பு சட்டத்தின்படி பசுவை பாதுகாத்தல், வளப்படுத்துதல், கால்நடை செல்வத்தின் முக்கிய பகுதியான உள்நாட்டு வகைகளை வளர்ச்சியடைய செய்தல் என்பது முக்கிய குறிக்கோளாக கூறப்பட்டுள்ளது. நம்முடைய பாரதீய சமுதாய நம்பிக்கை மற்றும் வழக்கப்படி அது நம் புனித கடமை. சங்க ஸ்வயம்சேவக் மட்டுமல்லாது, பல துறவிகளும் மற்றவர்களும் கூட நாடு முழுவதும் அரசியலமைப்பு மற்றும் சட்டப்படி இந்த புனித பணியை முன்னெடுத்து செல்கின்றனர். நவீன அறிவியல் நம்முடைய உள்நாட்டு பசுகளின் பெருமையையும், உபயோகத்தையும் ஒத்துக்கொள்கிறது. பல மாநிலங்களிலும், பசுவதையும், மிருக வதையும் சட்டப்படி தடுக்கப்பட்டிருகிறது. ஆனால் சில நேரங்களில் சில இடங்களில் பசு பாதுகாவலர்கள் அந்த சட்டங்களை சரிவர உபயோகிக்கப்பட தீவிர பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இக்காரணம் கொண்டும் பசுவதை மூலமாக அரசியல் லாபம், சுய லாபம் தேடும் சில தேச விரோதிகளுடன் அவர்களை ஒப்பிட்டுச் சொல்ல முடியாது. இருப்பினும் இந்த பசு பாதுகாவலர்களின் புனிதப்பணி தொடரும், வேகம் அதிகரிக்கும். சட்டத்தின் படி நடக்கும் நம்மவர்கள் சுதந்திர இந்தியாவின் ஜனநாயக நல்லொழுக்கத்தை மனதில் கொண்டு, பல ஆத்திரமூட்டும் சம்பவம் நடந்தாலும் அவர்களின் பணியை சட்டப்படி தொடர்வார்கள். பசுவதை சட்டம் குறைவில்லாமல் நடைமுறைப்படுத்துவதையும், பொது சட்டம், ஒழுங்கு முறையாக இருப்பதையும் கண்காணிக்கும் பொழுது நிர்வாகம் (அரசு) சட்டப்படி நடக்கும் மக்களையும், தேச விரோத சக்திகளையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது. அதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் பொழுது, அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் லாபத்திற்காக ஒரு பக்கம் இருக்காது, அவர்களின் செயல்பாடு அந்த பிளவை மேலும் விரிவாக்க செய்யாமல் பார்த்துக் கொண்டும், எண்ணம், சொல் மற்றும் செயல் இம்மூன்றும் பகைமையை குறைக்க உதவுமாறு இருக்க வேண்டும். அதுவே சமுதாயம் விரும்புகிறது. சில ஊடகங்கள் இதுப்போன்ற சம்பங்களை தங்களின் வியாபார லாபத்திற்காக மிகைப்படுத்தி பல மடங்கு அதிகரிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர். அவர்கள் அந்த சலனத்திருந்து விடுப்பட வேண்டும். பலரின் வலிமையாலும், தீவிர சகோதரத்தினாலும் மட்டுமே சமுதாயத்தில் சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை நிலை நாட்ட முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இந்த வலிமையினால் மட்டுமே தேசம் தன் முன்னே இருக்கும் சவால்களை சமாளிக்க முடியும். பாதுகாப்பு, ஒற்றுமை, இறையாண்மை மற்றும் நேர்மை ஆகியவற்றிக்கு அச்சுறுதல் மேகங்கள் சூழ்ந்த இந்த வேளையில் ஸ்ரீ அபிநவ்குப்தா மற்றும் ஸ்ரீ ராமானுஜாசாரியார் முன்வைத்த நல்லெண்ண பாரம்பரியங்களை முன்னெடுத்து செல்ல வேண்டிய தேவை அதிகம் உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை நமக்குக் கவலை அளிப்பதாக உள்ளது, சர்வதேச அளவில் ராஜரீதியாக நாம் எடுத்து வரும் முயற்சிகள். தற்போதைய மத்திய அரசு மற்றும் பாராளுமன்றத்தின் உறுதி ஆகியவை வரவேற்கத்தக்கவை. ஆனால். அதே உறுதியோடு நமது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதும் முக்கியம், மாநிலத்தின் பெரும் பகுதிகளான ஜம்மு மற்றும் லடாக் ஆகியவை அமைதியாகவும் நமது கட்டுப்பாட்டுக்குள்ளும் உள்ளது, தேசிய சிந்தனை ஊட்டும் நிகழ்ச்சிகளையும், இயக்கங்களையும் இந்தப் பகுதிகளில் ஆதரித்து, ஊக்குவிப்பது மிகவும் அவசரமான தேவையாகும், பதட்டத்தை உருவாக்கக் கூடிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளை அடக்கி வைக்க. மத்திய அரசு மாநில அரசு மற்றும் நிர்வாகம் ஆகியவை ஒன்றாக இணைந்து உறுதியான மனப்பான்மையோடு ஒருமித்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும், மிர்புர். முசாபராபாத். கில்ஜிட் மற்றும் பலுசிஸ்தான் ஆகிய பகுதிகள் சேர்ந்த முழுமையான காஷ்மீர் மாநிலம். பாரதத்தின் பிரிக்க முடியாத. ஒன்றிணைந்த அங்கம் என்பதில் எந்த விதமான சமரசமும் இருக்கக் கூடாது, இந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மூரிந்துக்களையும் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து துரத்தப்பட்ட பண்டிட்களையும். கவுரவமான மற்றும் பாதுகாப்பான முறையில் மறுகுடியமர்த்த வேண்டியது அவசரமான தேவையாகும், தேசப் பிரிவினை சமயத்தில். பிரிக்கப்பட்ட பாகிஸ்தான் பகுதிகளில் இருந்து குடி பெயர்ந்த மூரிந்துக்களை அந்த மாநிலத்திலேயே நிரந்தரமாக தங்க வைக்க ஆவன

செய்வதாக அந்நாளைய ஜம்மு காஷ்மீர் அரசு உறுதி அளித்தது, அவர்களுக்கு. அந்த மாநிலத்தின் குடிமக்களுக்கான எல்லா அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும், ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளின் மீது அரசு காட்டி வரும் வேற்று மனப்பான்மை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும், ஜம்மு காஷ்மீர் அரசு மற்றும் நிர்வாகம் தேசிய உணர்வோடும். பரிவு உணர்வோடும். பாரபட்சமில்லாமலும். வெளிப்படையாகவும் பணியாற்றினால் மட்டுமே. அந்த மாநில மக்கள், வெற்றி மனோபாவத்தோடும் தன்னம்பிக்கையோடும் வாழ்வர், அப்போது தான் பள்ளத்தாக்கில் வசித்து வரும் மக்கள் மற்ற பகுதிகளோடு இணையும் சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்,

எல்லை தாண்டி வரும் ஊக்கமே. தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவி வரும் பதட்டத்திற்கு காரணம் என்பது உலகமே அறிந்த உண்மை, உலகின் பல்வேறு நாடுகளின் ஆதரவோடு நாசகார. பயங்கரவாத. வன்முறை மற்றும் போதை பொருட்கள் கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் எல்லையோரத்தில் இயங்கி வரும் சில குழுக்கள் இவர்களோடு இசைந்து செயல்படுகின்றன, இந்தச் சூழ்நிலையில். ‘ஊரி’ ராணுவ முகாமில் நடந்த பயங் கரவாத தாக்குதல் சம்பவம். நமது ராணுவம் என்றென்றும் தயார் நிலையில் இருக்க வேண்டிய அவசியத்தையும். ராணுவம் ஆயுதப்படை மற்றும் புலனாய்வுத் துறையினரிடையே இருக்க வேண்டிய அவசியத்தையும் நமக்கு உணர்த்துகிறது, ஏனெனில். ஒரு சிறு கவனக்குறைவு ஏற்பட்டாலும் நாம் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கிறது, இந்தச் சம்பவத்திற்கு சாதுர்யமான முறையில் உறுதியான தக்க பதிலடி கொடுத்த எல்லாப் பிரிவைச் சேர்ந்த நமது ஆயுதப் படையினருக்கும். ராணுவ வீரர்களுக்கும் மத்திய அரசுக்கும் நான் எனது உளமார்ந்த பாராட்டுக்களைத் தொரிவித்துக் கொள்கிறேன், ராஜரீதியான உறவிலும் நாட்டின் பாதுகாப்பிலும் தற்போது காட்டப்பட்டு வரும் உறுதியும் சாதுர்யமும் என்றென்றும் நமது நாட்டின் கொள்கையில் பிரதிபலிக்க வேண்டும், நமது எல்லையோர பகுதிகளிலும். கடல் எல்லையிலும் நடக்கும் எல்லா விதமான சமூக விரோத செயல்களையும் அதற்கு ஆதரவளிப்பவர்களையும் வேரோடு களைந்தெறிய நிர்வாகமும் பொது மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்,

மாநிலத்திலுள்ள சட்ட ஒழுங்கு அமைப்புகளின் முழு ஒத்துழைப்பும் இதற்கு அத்தியாவசியமாகும், நமது நாட்டில் நாம் கூட்டாட்சி முறையைப் பின்பற்றுகிறோம், இதை அங்கீகரித்து நேர்மையாக செயல்படுத்தும் அதே நேரத்தில். நம்மிடைய உள்ள பல்வேறு வேற்றுமைகளுக்கிடையே நாம் பன்னெடுங்காலமாக ‘ஒரே மக்கள்’. ‘ஒரே நாடு’. ‘ஒரே தேசம்’ என்றே இருந்திருக்கிறோம் என்றும் எதிர்காலத்திலும் அவ்வாறே இருப்போம் என்றும் நாம் அனைவரும். குறிப்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களும் நினைவில் கொள்ள வேண்டும், நமது எண்ணம். சொல். செயல் ஆகிய எல்லாம் இதை உறுதிப்படுத்தும் விதமாகவே இருக்க வேண்டுமே அல்லாமல். பலவீனப்படுத்துவதாக இருக்கக்கூடாது, நமது சமுதாயத்தில் பல்வேறு துறைகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் இந்த பொறுப்புணர்வை வெளிப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும், அத்தோடு. நமது மக்களும் இந்தப் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளும் விதமாக சமுதாய அமைப்பு அமைய வேண்டும்,

நமது நாட்டின் கல்விக் கொள்கையைப் பற்றி கடந்த பல வருடங்களாக விவாதங்களும் கருத்துப் பாரிமாற்றங்களும் நடந்து வருகின்றன, கல்வியின் நோக்கம். தனி நபர்களின் செயல் திறனை அதிகரிப்பதாகவும். பொறுப்புணர்வை ஏற்படுத்துவதாகவும். தேசிய சமுதாய சிந்தனையை விதைப்பதாகவும் இருக்க வேண்டும், பல்வேறு முயற்சிகளால். தற்போது கல்வி வசதி என்பது சுலபமாக மலிவான விலையில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற ஒருமித்த கருத்து உருவாகி உள்ளது, கல்வி என்பது ஒரு நபரின் வாழ்வாதாரத் தேவையை பூர்த்தி செய்ய அவனுக்கு உதவுவதாகவும். சுய சார்பு உடையவனாகவும், சுய மரியாதை உடையவனாக ஆக்குவதற்கும் ஏதுவாக இருக்க வேண்டும், அறிவை வளர்த்துக் கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் கல்வி பயன்படுவதோடு. அவனை பொறுப்புள்ளவனாக ஆக்கவும். குடிமகன் என்கிற முறையில் சுமுகமான மனப்பாங்கு உள்ளவனாக ஆக்கவும். நல்ல நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்க்கையை அமைத்துக் கொள்பவனாகவும் ஒருவனை கல்வி மாற்ற வேண்டும், இந்த அம்சங்களை பூர்த்தி செய்வதாக கல்வியும் பாடத் திட்டமும் அமைய வேண்டும், ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சியானது. அவர்கள் இந்தப் புனிதமான பணியில் சிறப்பாக ஈடுபட தேவையான தகுதியையும் திறமையையும் கொடுப்பதாக இருக்க வேண்டும், அரசாங்கமும் சமுதாயமும் இணைந்து கல்வித் துறையில் ஈடுபட்டு கல்வித் துறை வணிகமயமாகாமல் தடுக்க வேண்டும், மத்தியில் புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன். இந்த அம்சத்தை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, கல்வித் துறையிலுள்ள கல்வியாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் சிந்தனையோடு இந்த குழுவின் பரிந்துரைகள் அமைந்துள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும், அவ்வாறு அமைந்தால் மட்டுமே ஒருமித்த கருத்து ஏற்பட்டு செல்ல வேண்டிய சரியான பாதையில் செல்ல திட்டம் உருவாகும், இல்லையென்றhல். இது ஒரு பகற்கனவாகவே இருக்கும்,

தற்கால தலைமுறையினருக்கு. பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் பல்கலைக் கழகங்களில் இருந்து கிடைக்கும் கல்வியுடன். குடும்பம் திருவிழாக்கள் மற்றும் சமுதாயத்தில் நிகழும் நிகழ்வுகள் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும், நமது குடும்பங்களில். மூத்த தலைமுறையினருக்கும் இளைய தலைமுறையினருக்கும் இடையே சுமுகமான முறையில் கருத்துப் பரிமாற்றம் நடைபெறுகிறதா? அவ்வாறு நடக்கும் கருத்துப் பாரிமாற்றங்கள். இளைய தலைமுறையினரிடையே சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தவும். தனி நபர் மற்றும் தேசிய ஒழுக்கத்தை ஏற்படுத்தவும். நெறிமுறைகளுக்கு மதிப்பு கொடுக்கவும். பணியில் ஈடுபாடு ஏற்படுத்தவும். பாசத்தையும். தீய பழக்கங்களிலிருந்து விலகி இருக்கக் கூடிய பக்குவத்தையும் உருவாக்கக் கூடியதாக இருக்கிறதா? பொரியவர்கள் தங்களுடைய நடத்தையினால் அனைவரும் பின்பற்றக் கூடிய நல்ல முன்னுதாரணமாக இருக்கின்றனரா? வேறு யாரால் இந்தக் கேள்விகளுக்கு விடை காண முடியும்? எங்கெல்லாம் குழந்தைகள் நல்ல பழக்க வழக்கங்களுடனும். நல்ல நோக்கத்துடனும் வீட்டில் வளர்க்கப் படுகின்றனரோ. அந்தக் குழந்தைகளே பிற்காலத்தில் படிப்பில் கடின முயற்சி செய்பவர்களாகவும் தான் கற்றுக் கொண்டதை நல்ல வழியில் பயன்படுத்துபவர்களாகவும் இருக்கிறhர்கள் என்பது நமது அனுபவத்தில் இருந்து நாம் காண்கிறேhம், அத்தகைய கருத்துப் பாரிமாற்றாங்கள் துவங்கி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்கிற நோக்கில், பல மகான்கள், பல தனி நபர்கள். பல நிறுவனங்கள் பணி செய்து கொண்டு இருக்கின்றன. சங்கத்தில் கூட. பல ஸ்வயம்சேவகர்கள் ஆர்வமான பணியாற்றிக் கொண்டிருக்கும் ‘குடும்ப ப்ரபோதன்’ என்பதும் அதன் ஒரு அங்கமே, வெளியில் இருந்து வேறு ஒருவர் மூலம் அந்த முயற்சி எடுக்கப்படாமல். நமது குடும்பங்களில் நாமாகவே இதை துவக்க வேண்டும்,

சமுதாய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள். சமூக கல்வியையும் கலாச்சாரத்தையும் போதிக்கும் நோக்கில் அமைந்தவையே, ஆனால். சில சமயங்களில். நோக்கத்திலிருந்து விலகி அவை வெற்றுச் சடங்காகவோ அர்த்தமில்லாத நிகழ்வாகவோ அமைந்து விடுகின்றன, நாம் சற்று கவனம் கொடுத்து தற்கால தேவைகளுக்கு ஏற்றவாறு அவைகளை சீர்படுத்தினால். சமூக கல்வியை போதிக்கும் ஒரு சிறந்த வழியாக அமையும், மஹாராஷ்ட்ர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை பொது விழாவாகக் கொண்டாடும் அமைப்புகள் பல புதிய உத்திகளைக் கையாண்டுள்ளது, அதே போல். புத்தாண்டு கொண்டாடும் முறையிலும் பல நல்ல ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன, சீர் திருத்தம் செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களை ஊக்குவித்து ஆதாரிப்பது அவசியமாகும், அரசாங்க அளவிலும் அரசு சாரா அளவிலும் பல புதிய முயற்சிகள் எடுக்கப் பட்டள்ளன, அதிக அளவில் பொது மக்கள் இந்த முயற்சிகளில் பங்கெடுக்கச் செய்ய வேண்டியது சமூக ஆர்வலர்கள் மற்றும் ஸ்வயம்சேவகர்களின் பணியாக இருக்க வேண்டும், சமூக நல்லிணக்கம். சமூக சுய சார்பு மற்றும் சமூக உணர்வு ஊட்டக்கூடிய நிகழ்ச்சிகளான மரம் நடுதல். தூய்மை பாரதம். யோகா தினம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு பொது மக்களோடு சேர்ந்து பல ஸ்வயம்சேவகர்கள் இதில் பங்கேற்கின்றனர், இதன் மூலம் இந்த நிகழ்ச்சிகளை அனைவரையும் கவரக் கூடிய வகையிலும் சிறப்பான முறையிலும் நடத்துவதோடு மட்டுமல்லாமல். நோக்கத்தை நிறைவேற்றக் கூடிய வகையிலும் நடத்த முடிகிறது, நாம் தொடர்ந்து இத்தகைய பணிகளில் ஈடுபடுவோம், தன்னிடையே ஒருங் கிணைந்த நிலையிலுள்ள சமுதாயமே நாடு மற்றும் உலகளாவிய சீரிய வளர்ச்சிக்கும். ஒருமைப்பாட்டிற்கும் அமைதிக்கும் காரணமாக அமையும், இந்த உண்மையின் அடிப்படையிலேயே ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் கடந்த 90 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டு முன்னேறிச் செல்கிறது.

பாரம்பரியமாக நமது சமுதாயம் பல்வேறு வேற்றுமைகளில் வாழ்ந்து வருகிறது. இந்த முழு படைப்பில், பல நிறங்களுடைய இந்த வேற்றுமையில் இறைதன்மையுடைய ஒற்றுமை ஒன்று அடித்தளமாக வெளிப்படையாக சமுதாயத்தில் வியாப்பித்து இருக்கிறது என்பதை நமது முன்னோர்கள் உணர்ந்திருந்தனர். இந்த உண்மையை உலகிற்கு உணர்த்துவதற்கான கருவியாக அவர்களின் கடும் தவத்தில் பிறப்பெடுத்தது தான் நமது ராஷ்ட்ரம் மற்றும் அந்த புனித பணி நிறைவேறுவதற்காக இன்றும் அது இருக்கிறது. படைப்பு என்பது முடியும் வரை இந்த பணி இருப்பதால், அது வரை நமது ராஷ்ட்ரம் உயிர் வாழும். அதனால் நமது ராஷ்ட்ரத்திற்கு பெயர் “அமர ராஷ்ட்ரம்” அல்லது “இறப்பில்லா ராஷ்ட்ரம்”. தங்களுக்குள்ளேயே உண்டாக்கிக் கொண்ட சிலந்தி வலை போன்ற வேற்றுமைகளாளும், போகத்தாலும் பிண்ணி பிணைந்திருக்கும் இந்த உலகிற்கு இதை உணர்வுறுத்துதலுக்கான தேவை மீண்டும் வந்திருக்கிறது மற்றும் இதில் நமது பங்காக நமக்களித்த கடமையை செய்து, நமது பிறப்பிற்கான காரணத்தை நிருபித்து முன்னேறுவதற்காக தக்க தருணம் இது.

இந்த முழுப்படைப்பும் ஒற்றுமை என்னும் உண்மையின் அடித்தளத்தில்தான் இருக்கிறது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள நமது சனாதன தர்மத்தை படித்தல், புரிந்துக் கொள்ளுதல் மட்டுமின்றி நவீன காலத்திற்கேற்ப நேரம், காலம் மற்றும் சூழ்நிலைகளுகேற்ப புதிய வடிவத்தில், நமது ஒன்றிணைந்த, வலிமைமிக்க, சுரண்டாத, சமத்துவமான, முழுமையான, மகிழ்ச்சியான தேசிய வாழ்க்கை மூலம் வாழும் எடுத்துக்காட்டாக இந்த உலகிற்கு முன் வைக்க வேண்டும். நமது பல்லாண்டு அடிமைத்தனத்தால் உருவான சுயமறதியின் தவறான தாக்கத்திலிருந்து விடுப்பட்டு, நமது சொந்த பாரம்பரிய அறிவாற்றலால் நம்முடைய தேசிய கொள்கையை வகுக்க வேண்டும். அதற்காக நம் இதயத்தை நம்முடைய பெருமைமிகு, உயர்ந்த மதிப்புகளால், கொள்கைகளால், கலாச்சாரத்தால் ஊக்குவிக்க வேண்டும். பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த உலகை நச்சரிக்கும் துன்பம தரக்கூடிய பல பிரச்சனைக்களுக்கு தீர்வு கண்டறிந்து, தன் நம்பிக்கையுடன் நாம் ஒரு தேசமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதை நம்முடைய செயல் மற்றும் வாழ்க்கை மூலம் இந்த உலகத்திற்கு காண்பிக்க வேண்டும். துறவி குலப்ரோ மகராஜ் தன்னுடைய பல தொகுதிகள் மூலமும், தன்னுடைய தவ வாழ்க்கை மூலமும் நமக்குக் அளித்த மிகபெரிய செய்தி இதுதான்.

அரசு இந்த திசையில் உறுதியோடு முன்னேற வேண்டும் மற்றும் நிர்வாகம் அரசின் கொள்கையை திறமையோடும், உற்சாகத்தோடும் இந்த திசையில் செயல்படுத்தி இருவரும் கடை நிலையில் உள்ள கடை மனிதனும் மற்றும் அனைவரும் சந்தோஷத்துடன், பாதுக்காப்புடன், நலமாக திருப்திகரமான வாழ்க்கை வாழ உறுதிச் செய்ய வேண்டும். அதே போன்று, மக்களும் ஒன்றிணைந்து, இணக்கமாக, விழிப்புடன் அரசுக்கும், நிர்வாகத்திற்கும் உதவிச் செய்து தேசிய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக தேவைப்பட்டால் தங்களின் அதிகாரத்தையும் பயன்படுத்த வேண்டும். இந்த மூன்றும் இணைந்து ஒரே திசையில் திட்டமிட்டு, பரஸ்பர புரிதல் மூலம் முன்னேறினால் மட்டுமே நன்மையை அழிக்கக்கூடிய தீய சக்திகள், துரோகிகள் தந்திரங்களால் நமகேற்படுத்திய கஷ்டங்களை வென்று வெற்றியை உறுதிச் செய்ய முடியும்.

இந்த பணி மிகவும் கடுமையானதே. நமக்கு வேறுவழியுமில்லை, இதனை செய்தே ஆக வேண்டும். சந்தேகத்திற்கு இடமில்லாமல், செய்ய முடியாது எனப்படுகின்ற விஷயத்தை கூட முழுமையான ஈடுபாடு, வீரம், அற்பணிப்பு, பற்றின்மை மற்றும் சயநலமின்மை மூலம் செய்ய முடியும் என வாழ்ந்து காட்டிய ஸ்ரீ குருகோவிந்தசிங் அவர்களின் ஒப்பற்ற வாழ்க்கை மரபு நம் கண் முன்னே இருக்கிறது. நம்முடைய முழு பலத்துடன் அந்த கொள்கையை அர்ப்பணிப்புடன் கொண்டுச் செல்வது நம்மிடையேதான் உள்ளது.

இந்த சமுதாயத்தில் மேற்கூறிய பண்புகளை உட்புகுத்துவதற்குதான் உதவிகரமான சூழ்நிலையை உருவாக்கி, வாழும் எடுத்துக்காட்டுளை கொடுத்துக், அதற்கான வேலையைச் செய்துக் கொண்டிருக்கின்றது ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம். ஒவ்வொரு தனிமனிதனையும் சயநலமில்லாத, கலபடமற்ற அன்பின் வழியாக ஒருகிணைத்து, இந்த புனித ஹிந்து தேசத்தை உலகின் புகழ் உச்சிக்கு கொண்டுச் செல்லும் லட்சியத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள தயார் செய்வது, பொதுவான எளிய நிகழ்ச்சிகள் மூலம் உடல், மனம், அறிவுசார் விஷயங்களை பண்படுத்தக்கூடிய ஷாகா பயிற்சி அளித்தல்; அப்படி பயிற்சிப் பெற்றவரை அவரின் திறனிற்கேற்ப தேசத்தின் வெவ்வேறு துறைகளில் சேவை நோக்கதோடு, தேவையான வேலையை செய்வதற்காக எங்கு எப்பொழுது தேவைப்படுகிறதோ அனுப்புவதே ஆர். எஸ். எஸ் எடுத்துள்ள பணியாகும்.

சமுதாயத்தில் உடனடியாக தேவையான மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய நோக்கத்தைக் கொண்ட சமரஸ்தா, பசு-பாதுக்காப்பு, குடும்ப ப்ரபோதன் போன்ற விஷயங்களில் நம்முடைய வேலையை பற்றி நான் முன்னே சுருக்கமான குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் முழு சமுகமும் இந்த திசையில் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது.நவராத்திரியின் ஒன்பது நாட்கள் கடவுள், முனிவர்கள், அன்றைய நல்ல சக்திகள் தங்களின் பலத்தை ஒன்றிணைத்து தொகுத்ததன் விளைவு, பத்தாம் நாள் மனிதர்களின் துன்பத்தை அகற்ற சண்ட, முண்ட, மஹிஷாசுரா போன்ற அசுரர்கள் அழிக்கப்பட்டனர். இன்று விஜயதசமி, வெற்றியின் திருநாள். ஆர்.எஸ்.எஸ் எடுத்துள்ள இந்த தேசிய பணிக்கு நீங்கள் அளிக்கும் அன்பிற்கும், உற்சாகத்திற்கும் உங்களிடம் ப்ரார்த்தனை செய்வதோடு விடைபெறும் முன் உங்களின் மேலான ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் பணிவுடன் கோருகிறேன்.

என்னுடைய விஜயதசமி வாழ்த்துக்களை இந்த ப்ரார்த்தனை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

“சிவா! என்னை கூறியவாறு ஆசிர்வதி:

நான் என்றும் புனித காரியம் செய்வதற்கு தயங்ககூடாது,

நான் போர்களத்தில் பகைவருடன் சண்டையிடும் பொழுது எனக்கு

பயம் இருக்கக் கூடாது;

நான் வெற்றி பெறுவதில் தீவிரமாய் இருத்தல் வேண்டும்;

எனக்கு கற்றுக் கொடுக்கும் பார்வையோடு

நான் என்றும் உன்னை துதிக்க வேண்டும்;

என்னுடைய இறுதிகாலம் வந்தால்

நான் போர்களத்திலே போராடி உயிர் துறக்க வேண்டும்”

“பாரத் மாதா கீ ஜெய்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Hindu Munnani strongly condemns Christudoss Gandhi's remarks on Lord Ram

Wed Oct 19 , 2016
VSK TN      Tweet     Thanthi TV, a regional based television had a debate on 18th October with a title ‘Is Modi’s slogan on Lord Ram a Human Right? Or Religious Politics? (மோடியின் ராமர் கோஷம்: மனித உரிமையா? மத அரசியலா?). In the heated debate, Christudoss Gandhi, Retd IAS, who participated in the show, gave […]