சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பின் சார்பில் அத்திவரதர் உற்சவத்தில் தொண்டாற்றியவர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கும் விழா

16
VSK TN
    
 
     
காஞ்சிபுரத்தில் 8.9.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சமுதாய கூடத்தில் சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பின் சார்பில் அத்திவரதர் உற்சவத்தில் தொண்டாட்றியவர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கும் விழாவானது நடைபெற்றது.
ஆர்.எஸ்.எஸ். காஞ்சி கோட்ட தலைவர் இராமா. ஏழுமலை தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ். காஞ்சி நகர தலைவர் டாக்டர் அரவிந்தன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இதில் சிரிதர் – கூடுதல் ஆட்சியர், எம். அருண்குமார் -பாரதிதாசன் மெட் பள்ளி தாளாளர், அன்புச்செழியன், ஜெய்சங்கர் – ஆடிட்டர், உதயகுமார் – ராஜம் செட்டி ஜூவல்லர்ஸ் உரிமையாளர், டாக்டர் மகேஷ், நாராயணன் – சேவா பாரதி மாநில துணைத் தலைவர், டி.சி. ராமன் – சேவா பாரதி தமிழ்நாடு காஞ்சி மாவட்ட தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் வட தமிழக அமைப்பாளர் திரு பி.எம். ரவி குமார், சேவா பாரதி அமைப்பு தனது 20 ஆண்டுகால சேவையை நிறைவு செய்யும் இந்த நல்ல வேளையில், அத்திவரதர் சேவையில் ஈடுபட்ட தன்னார்வத் தொண்டர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு கடைக்கோடி வரை ஏழ்மையில், அறியாமையில் உள்ள ஏழைகளுக்கு நாம் உதவிகள் சென்று சேர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பானது தான் செய்யும் சேவையை தம்பட்டம் அடிப்பது இல்லை. மாறாக ஒரு குடும்பத்திற்கு மகன் செய்யும் உதவிக்கு எந்த விளம்பரமும் இல்லாமல் செய்கிறோம். அதுபோல நாம் அனைவரும் பாரதமாதாவின் குழந்தைகள். அந்த எண்ணம் இருந்தால் நல்லது என்று குறிப்பிட்டார்கள். ஒரு குறிப்பிட்ட ஆன்மீக விஷயங்களுக்கு மட்டுமல்லாமல் தொடர் பணியாக சேவை செய்ய வேண்டும். அதன் மூலம் பாரதநாடு உயரிய நிலைக்கு செல்லும் என்று கூறினார்கள். இந்த விழாவில் 500க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். நிறைவாக டாக்டர் பி.டி. சரவணன் மகிழ்ச்சியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Saragarhi Day

Thu Sep 12 , 2019
VSK TN      Tweet     Battle of Saragarhi – Where 21 Sikh Soldiers Killed 600 Afghans In The Greatest Last Stand Ever Those who were fascinated with the movie ‘300’ would be even more impressed by what a group of 21 young Sikh men did in the Battle of Saragarhi.  The Battle of […]