சிவபெருமான் ஆணையை ஏற்று அகத்திய முனிவர் தென் பாரதத்திற்கு வந்தார் என்று புராணம் சொல்கிறது. அதே சிவபெருமான் கருணையினால் தெற்கே கேரளாவில் பிறந்து, அகண்ட பாரதத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் ஒரு மகாநதியைப் போல பெருகி அனைவருக்கும் சனாதன தர்மத்தின் மேன்மைகளைக் கொண்டு சென்ற ஞான கங்கை தான் ஆதி சங்கரர். தோற்றமும் வாழ்வும் சங்கரன் இன்றைய கேரளாவின் பூரணா நதிக் கரையில் காலடியில் வைகாசி சுக்ல பட்ச (வளர் பிறை) […]