ஹிந்துக்களை ஹிந்துக்களாக மாற்றுவோம், அப்போது எல்லாம் சரியாகிவிடும் – சுவாமி சின்மயானந்தா

VSK TN
    
 
     

 

“பாலகிருஷ்ணன் ஆளப் பிறந்தவன்,” என்று  குலகுரு சட்டம்பி சுவாமிகள் ஆசிர்வதிக்க, வடக்கே குருபத் குட்டன் மேனனுக்கும் அவர் மனைவி  பாருகுட்டிக்கும் மனதில் கொள்ளா ஆனந்தம் பொங்கியது. ஆனால்…

எர்ணாகுளத்தில் 8 மே 1916 அன்று வழக்கறிஞரான வடக்கே குருபத் குட்டன் மேனனுக்கும் அவரது மனைவி பாருகுட்டிக்கும் பொய்த்தம்பள்ளி பாலகிருஷ்ணன் மகனாகப் பிறந்தார். அவருக்கு இரண்டு மூத்த சகோதரிகள் இருந்தனர்.

சட்டம்பி ஸ்வாமிகள் மற்றும் யோகிராஜ் பைரவானந்தா போன்ற துறவிகளை மதித்து கவுரவிக்கும் பாரம்பரிய குடும்பம் அது. இருப்பினும், பாலகிருஷ்ணன் வளரும் போது, இத்தகைய பாரம்பரியத்தை பின்பற்றும் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக இருக்கும் அறிகுறிகளை காட்டவில்லை. கடவுள் வழிபாட்டில் எந்த ஈடுபாட்டையும் காட்டவில்லை, மேலும் கட்டுப்பாடு மிக்க ஒழுக்கமான வாழ்க்கையின் அவசியத்தை கேள்விக்குள்ளாக்கினார். எதையும் ஏற்றுக்கொள்ள தர்க்கரீதியான பதில்களைக் கோரினார். அவரது அலட்சியத்தை போக்க ஒரு முயற்சியாக வீட்டில் மாலை பூஜைகள் அறிமுகப்படுத்தப்பட்டன, இவை அவருடைய பிற்காலத்தில் அவருடைய இருபதுகளின் நடுப்பகுதி வரை பக்தி வேகமாக பிரதிபலித்தன. பாலனின் கவனத்தை ஈர்த்த தெய்வம் கங்காதர வடிவில் இருந்த சிவனின் ரூபம்.

பள்ளிப்படிப்பு மற்றும் பட்டப்படிப்புக்குப் பிறகு, பாலன் ஆங்கிலேயர் ஆட்சியைக் கண்டிக்கும் விதத்தில் நெருப்பு போன்ற உரைகளை எழுதத் தொடங்கினார். பாலகிருஷ்ணனின் தேசியவாத நடவடிக்கைகள் அவர் சிறைவாசத்திற்கு வழிவகுத்தது – ஆச்சரியப்படுவதற்கில்லை, எதிர்ப்பு என்பது உண்மையில் அடிமைத்தனத்திற்கான செய்முறை என்பதை அவர் விரைவில் உணர்ந்தார்! ஆனால் அவர் அதர்மத்தை எதிர்க்கிறார் என்பதை அறிந்து  எதிர்த்தார்.

1936 ல்  ஸ்ரீ ரமண மகரிஷியை தரிசிக்க சென்றிருந்த பாலக்ரிஷ்ணனை மகரிஷி பார்த்தபோது, அவர் உடம்பில் மின்பிம்பம் பாய்ந்த உணர்வு ஏற்பட்டு ஆன்மீக ஞானத்தின் சிலிர்ப்பை அனுபவித்தார்,

எல்லா இளைஞர்களையும் போலவே, பாலனும் வெளிப்படையாக அமைப்பை எதிர்த்துப் போராடினார், ஸ்தாபனத்தை எதிர்த்துப் போராடினார், பகுத்தறிவின்மைக்கு எதிராகப் போராடினார், மூடநம்பிக்கையை எதிர்த்துப் போராடினார், குருட்டு நம்பிக்கையை எதிர்த்துப் போராடினார். இந்த வெளிப்படையான கிளர்ச்சியானது அவரது உள்ளார்ந்த ஆன்மீக தேடலின் முதிர்ச்சி பெறுவதின்  பிரதிபலிப்பாகும்.

ஆகஸ்ட் 1942 இல், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, தேசியப் பெருமையைத் தூண்டும் வகையில் துண்டுப் பிரசுரங்களை எழுதி, விநியோகித்த மாணவர்களில் பாலனும் ஒருவர். அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பாலன் அடுத்த ஆண்டு அபோதாபாத்திற்கு தலைமறைவாகச் சென்று விட்டார், பின்னர் டெல்லிக்குச் சென்றார்.

ஆங்கிலேயர்கள் கைது வாரண்ட் பிறப்பித்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இதனை மறந்துவிட்டதாக நினைத்து பாலன் பஞ்சாப் வந்து பல சுதந்திர போராட்ட குழுக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார், அப்பொழுது அவர் கைது செய்யப்பட்டார், சிறையில் அடைக்கப்பட்டு  உடல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டார். அவர் சிறையில் பல மாதங்கள் சுகாதாரமற்ற சூழ்நிலையில் டைபாய்டு நோய் ஏற்பட்டது . இதனால்  நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு சாலையின் ஓரத்தில் தூக்கி எறியப்பட்டார், அந்த வழி சென்ற ஒரு தாயார்  அவரைக் கண்டு தனது மகன் இராணுவத்தில் பணிபுரிவதை நினைவுகூர்ந்து  அவனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தாள்.

பாலன் மெல்ல குணமடைந்தார். தி நேஷனல் ஹெரால்டில் பத்திரிக்கையாளராக பாலனுக்கு முதல்   வேலையை கே.ராமாராவ் கொடுத்தார். அங்கே பணிபுரியும் போது ஒரு நாள், பாலகிருஷ்ணன் இமயமலைப் பகுதிகளில் உள்ள ஸ்வாமிகளின்  (அப்போது அவர் நம்பியதைப் போல) போலித்தனத்தை அம்பலப்படுத்த எழுத முடிவு செய்தார். இதற்காக  ரிஷிகேஷில் உள்ள சுவாமி சிவானந்தரின் ஆசிரமத்திற்கு அவர் பயணம் செய்தார்.

இந்தியாவின் தலைசிறந்த ஆன்மிக ஆசிரியரின்  வாசற்படியில், பாலகிருஷ்ணனின் பயணம் தன்னறியாமலேயே அவரது சொந்த ஆன்மீகச் சிந்தனை மற்றும் பரிணாமத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. சுவாமி  சிவானந்தாவின் தெய்வீகத்தன்மை, அன்பு மற்றும் வேதாந்த போதனைகள் இந்த இளம் சந்தேகிக்கிறவனை முற்றிலும் மூழ்கடித்தன. பாலகிருஷ்ணனுக்குள் ஒரு குறிப்பிடத்தக்க உள் மாற்றம் ஏற்பட்டது, வெளி உலகத்தை கேள்விக்குட்படுத்தி எதிர்கொள்வதற்கு பதிலாக, அவர் தனது எண்ணங்கள் மற்றும் யோசனைகளின் உள் உலகத்தை எதிர்கொள்ளத் தொடங்கினார். அவர் வாழ்க்கையின் நோக்கம் மற்றும் நிரந்தர மகிழ்ச்சியின் ரகசியம் குறித்து  கேள்வி எழுப்பவும் சிந்திக்கவும் தொடங்கினார்.

பாலன் ஒரு துறவியாக மாற முடிவு செய்தார். மஹாசிவராத்திரியான பிப்ரவரி 25, 1949 அன்று, பாலகிருஷ்ணன் சுவாமி சிவானந்தரால் சந்நியாச தீட்சை பெற்றார், அவர் அவருக்கு ‘சுவாமி சின்மயானந்த சரஸ்வதி’ என்ற பெயர் சூட்டினார். சின்மயானந்தா என்றால் ‘தூய உணர்வின் பேரின்பம்’ என்று பொருள். சுவாமி சிவானந்தா பின்னர் சின்மயானந்தாவை இமயமலையில் உள்ள உத்தரகாசியில் வாழ்ந்த சுவாமி  தபோவனத்திடம் அனுப்பினார். அரிதாகவே சீடர்களை ஏற்றுக்கொண்ட ஸ்வாமி தபோவனம் கடுமையான நிபந்தனைகளை முன்வைத்தார், ஆனால் சின்மயானந்தர் தனது குருவின் ஒவ்வொரு நிபந்தனையையும் ஏற்றுக்கொண்டார். ஸ்வாமி தபோவனத்தின்  தீவிர பயிற்சி மற்றும் கடின வாழ்க்கையின் காலம் இந்த சீடருக்கு  தொடங்கியது.

1951 இல் சின்மயானந்தா வேதாந்தத்தின் போதனைகளை சாதாரண மக்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்தார். தனது முதல் விரிவுரைத் தொடரை 1951 டிசம்பரில் புனே நகரில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் நடத்தினார். ஆரம்பத்தில் அவர் பேச்சை கேட்க வந்த ஒரு சிலர் விரைவில் ஆயிரக்கணக்காக பெருகினர்.

1953 இல் சென்னையில் நடந்த இரண்டாவது ஞான யக்ஞத்தின் முடிவில், வேதாந்தத்தின் ஆய்வு மற்றும்  விவாதத்திற்கு ஒரு மன்றத்தை உருவாக்க ஒரு சிலர் விருப்பம் தெரிவித்தனர். சின்மயானந்தா ஒப்புக்கொண்டார், ஆனால் அவர் தன பெயரில் எந்த அமைப்பையும் தொடங்க வேண்டாம் எனச் சொன்னார். “சின்மய” என்ற சொல் சின்மயானந்தாவின் பெயரைக் குறிக்க வேண்டியதில்லை; சமஸ்கிருதத்தில், அதன் பொருள் “தூய ஞானம்,” என்று அவர்கள் திருப்பி எழுதினர், சின்மயானந்தர் அவர்களின் ஆசைக்கிணங்கினார். ஆகஸ்ட் 8, 1953 அன்று, சின்மய மிஷன் உருவாக்கப்பட்டது.

1956 ஆம் ஆண்டில், டெல்லியில் 23 வது ஞான யஞம்  இந்திய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் தொடங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளில், சின்மயானந்தா நாடு முழுவதும் 25 ஞான யாகங்கள் மூலம் 50,000 க்கும் மேற்பட்ட  நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார். 1965 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி, சின்மயானந்தா தனது முதல் உலகளாவிய சுற்றுப்பயணத்தை 18 நாடுகளில் உள்ள 39 நகரங்களை உள்ளடக்கினார். அடுத்த 28 ஆண்டுகளில், அவர் இந்த சர்வதேச சொற்பொழிவுகளைத் தொடர்ந்தார், ஒவ்வொரு இடத்திலும் ஒரு வாரம் அல்லது அதற்கு குறைவாகவே தங்கி, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு சொற்பொழிவுகளை வழங்கினார், மேலும் பல கூட்டங்கள், நேர்காணல்கள், விவாதங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைக் கையாண்டார். ஒவ்வொரு நாளும்  பல கடிதங்கள் எழுதினார்.

சின்மயானந்தாவின் தகவல் மற்ற மதத் தலைவர்களிடம் வரவேற்பு பெற்றது. பம்பாயில் அவரது யாகங்களில் ஒன்று அக்காலத்தின் முக்கிய கத்தோலிக்க பேராயர் கார்டினல் வலேரியன் கிரேசியஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. திபெத்திய பௌத்த அமைப்பின் தலைவரான தலாய் லாமா, 1981 இல் சித்பாரியில் உள்ள சின்மய மிஷன் ஆசிரமத்திற்கு வருகை தந்தார். சின்மயானந்தா மதங்களுக்கு இடையேயான உரையாடலை ஆதரித்து பல சமய நிகழ்வுகளில் பங்கேற்றார்.

1963 இல், சுவாமி சின்மயானந்தா ஒரு உலக இந்து கவுன்சில் அமைக்க அழைப்பு விடுத்து ஒரு கட்டுரை  எழுதினார்,

“இந்து கலாச்சாரத்தின் உயிர்வாழ்வு மற்றும் வளர்ச்சி” தொடர்பான சிரமங்கள் மற்றும் தேவைகளைப் பற்றி  விவாதிக்க உலகம் முழுவதிலுமிருந்து பிரதிநிதிகளை அழைத்தார். அப்போது இதே போன்ற கருத்துக்களை வெளியிட்ட RSS பிரச்சாரகர் S. S. ஆப்தேவின் கவனத்தை ஈர்த்தது.

அதே ஆண்டில், கன்னியாகுமரியில் RSS அமைப்பினர்  விவேகானந்தர் பாறை நினைவிடம் கட்ட நிதியாக ₹10,000 திரட்டி தந்தது சின்மய மிஷன் . மேலும், ஆகஸ்ட் 1964 இல், போப் சர்வதேச நற்கருணை மாநாடு நவம்பரில் பம்பாயில் நடைபெறும் என்று அறிவித் மேது அதில் 250 இந்துக்கள் கிறிஸ்தவர்களாக மாற்றப்படுவார்கள் என்று கூறினார்; பதிலுக்கு 500 கிறிஸ்தவர்களை இந்து மதத்திற்கு மாற்றப்போவதாக சின்மயானந்தா  அறிவித்தார்.

ஆகஸ்ட் 1964 இல் சாந்தீபனி ஆசிரமத்தில் ஆப்தே மற்றும் சின்மயானந்தா இணைந்து ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்ததன் இதன் விளைவாக விஷ்வ இந்து பரிஷத் நிறுவப்பட்டது. அதன்  தலைவராக சுவாமி சின்மயானந்தாவும், பொதுச் செயலாளராக ஆப்தேவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சின்மயானந்தாவின் கூற்று, “VHP இந்துக்களை விழித்தெழுப்பி உலகில் அவர்களின் பெருமைக்குரிய இடத்தை அவர்களுக்கு         உணர்த்த வேண்டும். ஒவ்வொரு இந்துவும் தனது சொந்த அடையாளத்தை உணர்ந்து கொண்டவுடன், பரிஷத் அதன் வேலையைச் செய்துவிட்டது. இந்துக்களை இந்துவாக மாற்றுவோம், அப்போது எல்லாம் சரியாகிவிடும்.”

VHP இந்து புலம்பெயர்ந்த உறுப்பினர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் அவர்களின் “கலாச்சாரக் கடமைகள் மற்றும் ஆன்மீக விழுமியங்கள்” பற்றிய அறிவைப் பற்றிக் கற்பிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று  அவர் நம்பினார். 1980களில், சின்மயானந்தா VHPயின் ஏகத்மாதா யாத்ராக்களையும் ஆதரித்தார். 1992 ஆம் ஆண்டு, ஜெர்மனியில் நடந்த அயோத்தி பிரச்சனை முக்கிய விவாதப் பொருளாக இருந்த VHP மாநாட்டில், பாபர் மசூதியின் இந்துக் கோவில் தூண்களாக அடையாளம் காணக்கூடிய 14 தூண்களை இந்துக்களுக்கு வழங்க வேண்டும் என்று சின்மயானந்தா கூறினார்.

ஜனவரி 1993 இல், அவர் ராம் மாதவ்க்கு அளித்த பேட்டியில் பாபர் மசூதி இடிப்பு பற்றி விவாதித்தார். முதலில்  இந்த ராமர் கோவிலைக் கட்டுவோம்” என்று கூறிய அவர், “இன்று ராமர் கோவிலுக்கு உள்ள உற்சாகம் போதாது, இராமனின் வாழ்க்கையை வாழ நாம் தயாரா?” என்றும் இந்துக்களிடம் கேட்டார்.

டிசம்பர் 2, 1992 அன்று, சின்மயானந்தா ஐக்கிய நாடுகள் சபையில்  “நெருக்கடியில் உள்ள கிரகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார் .

அவரைப் பின்பற்றுபவர்களால் குருதேவ் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட அவர், இந்து தர்மத்தைப் பாதுகாப்பதற்கும் பரப்புவதற்கும் எண்ணற்ற நிறுவனங்களை நிறுவினார். பள்ளிகள், கல்லூரிகள், வேத பாடசாலைகள் மற்றும் குடியிருப்பு பள்ளிகள் நிறுவப்பட்டுள்ளன. குழந்தைகள், இளம் பருவத்தினர், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியோர்களின் தர்மத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல்வேறு ஆய்வுக் குழுக்கள் உலகம் முழுவதும் செயல்படுகின்றன. சின்மய மிஷன் மருத்துவமனைகள் பெங்களூரு மற்றும் சித்பாரியில் செயல்படுகின்றன. சுய அதிகாரம் மூலம் ஏழைகளுக்கு ஒருங்கிணைந்த நிலையான வளர்ச்சியை எளிதாக்க சின்மயானந்தாவால் நிறுவப்பட்ட கிராமப்புற மேம்பாட்டுக்கான சின்மய அமைப்பு. சின்மயானந்தா தனது வாழ்நாளில் 95 வெளியீடுகளை எழுதியுள்ளார், இதில் நாற்பது செவ்வியல் நூல்கள், எட்டு தொகுப்புகள், 13 இணை-ஆசிரியர் படைப்புகள் மற்றும் 34 அசல் படைப்புகள் உள்ளடங்கியுள்ளன.

சின்மயானந்தாவுக்கு நாள்பட்ட இதயப் பிரச்சனைகள் ஏற்பட்டன. 1969 ஆம் ஆண்டில் அவருக்கு முதல் மாரடைப்பு ஏற்பட்டது, பெங்களூரில் புதிதாக திறக்கப்பட்ட சின்மய மிஷன் மருத்துவமனையில் அவரது சிகிச்சை அவரை அதன் முதல் நோயாளியாக்கியது. 1980 இல்  அவர் தொடர்ச்சியான ஞான யஞ்ஞங்களுக்காக அமெரிக்காவில் இருந்தபோது, அவருக்கு பல இதய பைபாஸ் அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. 26 ஜூலை 1993 அன்று, அவர் கலிபோர்னியாவின் சான் டியாகோவில் மூச்சுத்திணறல் பிரச்சனையால் அவதிப்பட்டார், அங்கு ஜூலை 29 அன்று அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால் அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. குருதேவ் ஐந்து நாட்களுக்குப் பிறகு 3 ஆகஸ்ட் 1993 அன்று 77 வயதில் மகாசமாதி அடைந்தார்.

8 மே 2015 அன்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சுவாமி சின்மயானந்தாவின் பிறந்த நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அந்த வருடமே 100 நாட்கள் நடந்த சின்மய  ஜோதி யாத்திரையை அப்போதைய இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் துவக்கி வைத்தார்.

இன்றும் சின்மய மிஷன் நம் நாட்டின் பல தர மக்களுக்கும் ஹிந்து சமுதாயத்தை காக்கும் விதத்தில் தார்மிக  வழிநெறிகளை தொடர்ந்து அளித்து வருகிறது. குருதேவின் எண்ணங்கள் படி ஹிந்துக்களை ஹிந்துவாக்கும் பணிகளில் இன்றும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது அவர் நிறுவிய சின்மய மிஷனும் விஸ்வ ஹிந்து பரிஷத்தும்.
– கட்டுரையாளர் திருமதி. யமுனா

Next Post

Pokhran Nuclear Tests 1998 - Operation Shakti and the Tamil Nadu connection

Wed May 11 , 2022
VSK TN      Tweet      Pokhran Nuclear Tests 1998 – Operation Shakti and the Tamil Nadu connection Russia attacked Ukraine more than 2 months ago. The whole world was stunned then, but now it is being seen as reality and a grave situation to deal with. Have we ever wondered , what gave […]