Chennai Sandesh (SETHU)

14
VSK TN
    
 
     

சேது 
——————————————————————–
சென்னையிலிருந்து; செய்தியுடன் பண்பாடு
கலி 5113 கர பங்குனி 24 ( 2012, ஏப்ரல் 6)
ஹிந்துக் கோயில் என்றால் இளப்பமா?
‘ஒரு சிறு கல்லை கூட கோவிலிருந்து பெயர்க்க விட மாட்டோம்’, என பக்தர்கள் தீவிரத்துடன் முழக்கமிட்டார்கள். கோவில் என அவர்கள் குறிப்பிட்டது 1300 வருட பழமை வாய்ந்த பனங்காட்டீஸ்வரர் (சிவன் கோவில்). இது , விழுப்புரம் மாவட்டம் பனயபுரம் கிராமத்திலுள்ளது, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கோவிலின் ஒரு பகுதியை, நெடுஞ்சாலையை விரிவுபடுத்த இடிப்பதற்கு தேர்வு செய்தனர். அதிர்ச்சியும் கோபமும் அடைந்த கிராமவாசிகள் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் திரு புகழேந்தி தலைமையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டரை சந்தித்து, ஒரு புகார் மனு தந்தனர். மேலும் சென்னையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை நேரில் சென்று மற்றுமொரு மனுவை கொடுத்தனர். புகழேந்தி கூறுகையில், “நாங்கள் பல நாட்கள் தூக்கம் இல்லாமல் தவிக்கிறோம். அவர்கள் இக்கோவிலை தகர்க்க நினைத்தால், இங்குள்ள சத்யாம்பிகா கர்பக்ரஹம், பிள்ளையார் சிலை, முருகன் சந்நிதி முதலியன தகர்க்கப்படும். மாற்றாக கோவிலின் மேற்கு பகுதியில் உள்ள இடங்களின் மூலம் நெடுஞ்சாலையை விரிவுபடுத்தலாம்” என்றார். முன்னாள் தொல்லியல் துறை இயக்குனர் டாக்டர் ஆர். நாகசாமி கூறுகையில், “ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் நாள் சூரியனின் கிரணங்கள் சிவலிங்கத்தின் மீது விழும்படி இந்த கோவில் அமைந்துள்ளது,” என்றார். ராஜேந்திர சோழன் கடாரத்தை (மலேசியா) வென்ற கல்வெட்டு குறிப்பும் இங்குள்ளது. 
தொண்டுக்கு 11 கோடி கொடுத்த தமிழ் எழுத்தாளர்
அமரர் ஆர். சூடாமணி பிரபல போன தலைமுறை சிறுகதை எழுத்தாளர். அவருடைய எழுத்துக்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் பொறிக்கப்பட்டவை. அவருடைய எண்ணங்கள் எழுத்து வடிவம் மட்டும் இல்லாமல் செயல் வடிவம் கொண்டதாக இருக்கிறது. தன் சொத்துக்கள் அனைத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு சென்று அடைய வேண்டும் என்பது அவருடைய உயில். இதன் மூலம் சமுதாயத்தில் ஏழைகளுக்கு நல்வாழ்வளிக்க விரும்பினார். சென்ற வாரம் ராமகிருஷ்ண சர்வமத கோவில் வளாகத்தில் அவருடைய உயில் இரண்டாம் கட்ட செயலாக்கம் பெற்றது. பங்குகள், கடன் பத்திரங்கள் மூலம் வந்த தொகை மற்றும் பிற சொத்துக்கள் மூலம் வந்த தொகை ராமகிருஷ்ண மிஷன் மாணவர்கள் இல்லம், ராமகிருஷ்ண மிஷன் வைத்தியசாலை, வாலண்டரி ஹெல்த் சர்வீஸ், அடையார் ஆகிய தொண்டு நிறுவனங்களுக்கு சமமமாக பிரித்த ளிக்கப்பட்டது. மொத்த வருமானமாக வந்த ரூ.6 .3 கோடி தலா 2 .1 கோடி ரூபாயாக பிரித்து கொடுக்கப்பட்டது. இதற்கு முன் 4 .5 கோடி மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு சமமமாக பகிர்ந்து அளிக்கப்பட்டது. விழாவில் பேசிய ஜஸ்டிஸ் ராமசுப்ரமணியம் அவர்கள், “எழுத்தாளர் சூடாமணி அவர்களின் எழுத்துகள் மட்டுமில்லை, அவர்களுடைய தொண்டு கார்யங்களும் சமுதாயத்தை வழி நடத்தக்கூடிய ஒரு நல்ல உதாரணம்” என்றார். சூடாமணி தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ராகவனின் மனைவி.
ஹிந்துக்கள் பொறுப்பேற்றால் ஊருக்கே நன்மை
திருநெல்வேலி மாவட்டம் சேரன் மகாதேவி ஒன்றியம், சடையமான்குளம் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இரண்டு குளங்கள் அங்குள்ள கிறிஸ்துவர்களால் சுமார் 97 வருடங்களாக ஆக்கிரமப்பு செய்யப்பட்டு வந்தது. ஹிந்து முன்னணி உள்ளூர் தலைவர் திரு பெருமாள், கோவிலின் ஆவணங்களை சேகரித்து வழக்கு தொடுத்தார். சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை பெஞ்ச் வழக்கை விசாரித்து பெருமாள் மற்றும் 18 பெயரில் உரிமம் வழங்கியது. இதன் மூலம் கோயில் குளங்களில் மீன்பிடி குத்தகை மூலம் வரும் வருவாய் ஊர்மக்கள் அனைவருக்கும் இன்று பயன்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

vsk chennai sandesh

Sat Apr 14 , 2012
VSK TN      Tweet     Chennai Sandesh —————————– April 13, 2012 A Cultural Crime The NHAI Is Set To Commit in Tamilnadu   “We will not allow even a single stone from the temple to be removed,” devotees asserted. The temple referred to is a 1,300 year old Tirupuravar Panankateesvarar  (Shiva Temple) in […]