1991ல் நரசிம்மராவ் பிரதமரானபோது, அவருக்கு வயது 70. தேர்தலுக்கு முன்னரே காங்கிரஸ் கட்சியிலிருந்து அவருக்கு கட்டாய ஓய்வு கொடுத்திருந்தார்கள். டெல்லி வீட்டை காலி செய்துவிட்டு, பம்பாயில் ஒரு சின்ன பிளாட்டில் குடியேறியிருந்தார். ஆந்திராவுக்கு திரும்பச் செல்வதற்கு மனமில்லை. ராஜீவ் காந்தி படுகொலை, நரசிம்மராவின் அரசியல் வாழ்க்கையை அடியோடு மாற்றியமைத்தது.   நரசிம்மராவ் வந்த நேரம், சரியான நேரமில்லை. தாராளமயமாக்கலை அமல்படுத்துவதற்கு சர்வ நிச்சயமாக சரியான நேரமல்ல. ராஜீவ் காந்தி […]