Chandra Shekhar Azad !

VSK TN
    
 
     
நம் தேசத்தை அடிமைப்படுத்திய பரங்கிய அரசுக்கு எதிராக போராடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதினைந்து வயது சிறுவன் நீதிபதிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு இருக்கிறான். விசாரணை தொடங்கியது.
நீதிபதி : உனது பெயர்
சிறுவன் : விடுதலை ( ஆஸாத் )
நீதிபதி : உனது தந்தையின் பெயர்
சிறுவன் : சுதந்திரம்
நீதிபதி : உனது இருப்பிடம்
சிறுவன் : சிறைச்சாலை
இப்படி பதில் கூறும் சிறுவனிடம் என்ன விசாரிக்க முடியும். நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார் – பதினைந்து கசையடிகள்.
தண்டனையை வீரமுடன் ஏற்ற அந்த சிறுவன், ஒவ்வொரு பிரம்படிக்கும் “பாரத் மாதா கீ ஜே”என குரலெழுப்பி பாரத நாட்டின் மீது கொண்ட சுதந்திரப்பற்றை வெளிபடுத்தினார். அன்று முதல் அந்த சிறுபுயல் அவர் ‘சந்திரசேகர ஆசாத்’ என அழைக்கப்பட்டார்.
பி் அந்த புயல் தனக்குத் தானே ஒரு தீர்ப்பை வழங்கிக் கொண்டது – இனி ஒருபோதும் பரங்கியர்களிடம் பிடிபடப் போவதில்லை. உயிரோடு என்னை இவர்கள் பிடிக்கக் கூடாது என்று.
பாரத நாட்டின் பெரும்புரட்சியாளர்களில் ஒருவராகவும் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் ஆர்மியின் தளபதியாகவும், பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, படுகேஸ்வர் தத் போன்ற போராட்ட வீரர்களின் வழிகாட்டியாக, நண்பனாக விளங்கியவர் ஸ்ரீ சந்திரசேகர ஆஸாத் அவர்கள்.
காகோரி ரெயில் கொள்ளை வழக்கு,இதோடு, லாலாலஜதிராயின் கொலைக்கு பதிலடியாக ஆங்கிலேயே போலீஸ் அதிகாரிக்கு பதிலடி கொடுத்த வழக்கிலும் வரை பிடிக்க முடியாமல் பிரிட்டிஸ் போலீசார் மாவீரர் சநந்திரசேகர் ஆஸாத்தை உயிருடனோ,பிணமாகவோ பிடித்து
கொடுப்பவர்களுக்கு அந்த காலத்திலேயே 5000-ரூபாய் பரிசு (அதன் மதிப்பு இன்று கோடி ரூபாய்க்கு சமம்) வழங்கப்படும் என்று அறிவித்து
விளம்பரம் செய்யப்பட்டும் அவரை பிடிக்க முடியவில்லை.
லாகூர் நீதிமன்றத்தில் பகத்சிங்,ராஜகுரு,சுகதேவ் மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து ஆசாத், சிறைக் கதவுகளை உடைத்து தோழர்கள் மூவரையும் விடுதலை செய்து விடவேண்டும் என்ற சிந்தனையிலே குறியாய் இருந்து அதற்கான
செயல்களில் ஈடுபட்டு கொண்டுயிருந்த ஆஸாத்,முன்னால் தோழனும் நண்பனுமான ஒருவனை அலகாபாத் ஆல்பிரட் 1931ம்ஆண்டு பிப்ரவரி 27ம் நாள் காலை 10 மணிக்கு பூங்காவில் சந்திக்க சுக்தேவ் அவருடன் சென்றபோது, அந்த நண்பன் காட்டிக்கொடுத்ததால் பிரிட்டிஷ் காவல்துறையினர் ஆசாத்தை சுற்றி வளைத்தனர்.
சுக்தேவை தப்பிக்க விட்டுவிட்டு ஆசாத் நீண்ட நேரம் காவல்துறையினரிடம் போராடினார். காலில் குண்டடிபட்டதால் ஆசாத்தால் அங்கிருந்து தப்பிக்க இயலாமல் போனது. தன் துப்பாக்கியில் ஒரு தோட்டா மட்டுமிருக்க காவல்துறையினரிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.
அவர் மரணனித்ததுதெரிந்தும்எதற்கு வம்பு உயிருடன் இருந்தால் ாம் தொலைந்தோம் என கிட்டதட்ட 5 மணிநேரம் அவரின் பூதஉடலுக்கு அருகில் கூட செல்லவில்லை என்றால் தெிந்து கொள்ளுங்கள் அவரின் வீரத்தை.
பிறகு அவரின் உடலை கைப்பற்றி கண்களை பிடுங்கி முகத்தை சிதைத்து தனது அல்பதனமான வெறியை தனித்து கொண்டனர் பரங்கிய போலீஸ்காரா்கள்.
ஆனால் பிரிட்டிஷ் காவல்துறையினர் அவரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாகவே கூறிக்கொண்டனர். அவர் பயன்படுத்திய துப்பாக்கி அலகாபாத் அருங்காட்சியகத்திலும் அதன் ஆவணங்கள் லக்னோ சி.ஐ.டி. தலைமையகத்திலும் உள்ளது..
மாவீரர் ஆசாத்தின் பத்து ஆண்டுகால புரட்சி போராட்ட வாழ்க்கையில் ஒருநாள்கூட போலீஸ்காரர்களால் பார்க்கவும்முடியவில்லை,தொடவும்
முடியவிலலை. பிடிக்கவும் முடியவில்லை,
ஆசாத் மீது இருந்த 28 பிடிவாரண்டு வழக்குகளிலும், போலீசார் அளித்த வாக்குமூலம் என்ன தெரியுமா????
சந்திரசேகர ஆஸாத்தை இந்தியநாடு பூராவிலும் தேடிவிட்டோம். அவரை கண்டு பிடிக்க எங்களால் முடியவில்லை.. என்பதே!!!!!!!!!
இந்த மாபெரும் வீரரின் தியாகத்தை அவரது நினைவு நாளில் போற்றுவோம். பெற்ற சுதந்திரத்தின் நன்மதிப்பை உணர்ந்து நடந்துகொள்வோம்.
இவரின் வரலாற்றையும் இவர் போன்ற தியாக புருஷர்களின் வரலாற்றையும் பாடதிட்டங்களில் சேர்க்க நமது அரசுகளை வலியுறுத்துவோம்.
–திரு.ரஞ்ஜீத்.V.C

Next Post

Somnath has been a sacred place from time immemorial - Dr. Rajendra Prasad

Tue Feb 28 , 2023
VSK TN      Tweet    Tamil Nadu is the land of holy temples. It houses thousands of ancient temples built by the great Hindu-Tamil kings. One among the thousands of temples in Tamil Nadu is the Ramanathaswamy temple, a Jyotirlingam, situated in today’s Rameshwaram. Although the 12 Jyotirlingams have great sanctity in the worship […]