“சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பிறந்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்,” என்று கர்ஜித்தான் அந்த இளைஞன். அன்றிலிருந்து அவன் தீரன் சின்னமலை என்று அழைக்கப்பட்டான்! ஈரோடு காங்கேயம் அருகே மேலப்பாளையத்தில் 1756 ஏப்ரல் 17ம் தேதி இரத்தினசாமி கவுண்டர் – பெரியாத்தாவுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு தீர்த்தகிரி என பெயரிட்டனர். வசதியான செல்வாக்கு மிக்க குடும்பம், பழைய கோட்டை பட்டக்காரர்கள் வம்சாவழியைச் சேர்ந்த கவுண்டர் தம்பதி, […]

விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர், ‘பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும்,  வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். பட்டியல் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், அந்த  மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று […]

  வ.வெ.சு.ஐயர்      “3 இனிஷியல்” பெற்ற சில பேர் தமிழகத்திலும் இந்தியாவிலும் சரித்திரம் படைத்துள்ளனர் என்பது மிகவும் விசித்திரமானது. அத்தகையோர் சில பெயர்களை நினைவுபடுத்துகிறோம்: எம்.ஜி.ஆர் [மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்] நன்கு அறியப்பட்ட பரோபகாரி, சுறுசுறுப்பான நடிகர், நேர்மையான அரசியல்வாதி மற்றும் எல்லாவற்றையும் விட ஒரு நல்ல மனிதர். பொறுத்திருங்கள் நான் எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதவில்லை. VOC [வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை], ஒரு பிடிவாதமான சுதந்திரப் […]

திரு தண்டியடிகள் நாயனார்       பெருவளம் கொழிக்கும் திருவாரூர் என்னும் பழமையான நகரம் சோழவளநாட்டில் உள்ள பல நகரங்களில் தலைசிறந்து விளங்கிய ஒன்றாகும். இத்தலத்திற்கு எத்தலமும் ஈடு இணையாகாது.      “ஆரூரில் பிறக்க முக்தி” எனபது ஆன்றோர் வாக்கு. இத்தகு பெருமைவாய்ந்த திருவாரூர் என்னும் தலத்தில் தண்டியடிகள் வாழ்ந்து வந்தார்.இவர் பிறவியிலேயே கண்பார்வை  இழந்தவர்.  புறக்கண்ணற்ற இவர் அகக்ககண்களால் திருவாரூர் தியாகேசப்பெருமானின் திருத்தாளினை இடையறாது வழிபட்டு […]