அவசரநிலை (1975-1977), அரசாங்கத்தின் அடக்குமுறைக் கொள்கை, சங்கத்தின் பங்கு

VSK TN
    
 
     

அவசரநிலை (1975-1977), அரசாங்கத்தின் அடக்குமுறைக் கொள்கை, சங்கத்தின் பங்கு ஆகியவை குறித்து ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க சர்கார்யவஹ் தத்தாத்ரேய ஹோசபாலே ஜியுடன் விஷ்வ சம்வத் கேந்திரா இந்தியா நடத்திய சிறப்பு உரையாடலின் முக்கிய பகுதிகள்…–

புது தில்லி. நாட்டின் வரலாற்றில் அன்றைய அவசரகாலப் போராட்டத்தை இரண்டாம் சுதந்திரப் போராட்டம் என்று பலரும் அழைத்துள்ளனர். இன்றும் கூட சில சமயங்களில் இதுவே சரியான விளக்கம் என்று தோன்றுகிறது. அந்நிய ஆட்சிக்கு எதிராக நீண்ட போராட்டம் முன்னர் சுதந்திர இயக்கம் நடந்தது.. ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, நாட்டு மக்களின் குரலை அடக்கி, ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்ற ஒருவரை ஒடுக்கும் வேலையை நாட்டிற்குள்ளேயே நமது சொந்தக்காரர்கள் செய்தார்கள், சாமானியர்கள் ஒடுக்கப்பட்டனர், எனவே ஒரு பார்வையில் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் அழைக்கப்பட வேண்டியதாகும். ஏன் இந்த அவசரநிலை ஏற்பட்டது? நாடு பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும்போது நாட்டில் அவசரநிலை தோன்றலாம். எந்தவொரு நபரும் அல்லது கட்சியும் தங்களது பாதுகாப்பற்ற, நிலையற்ற உணர்வு மேலீட்டினால்  அரசியலமைப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது  ஜனநாயகத்தில் நடக்கவே கூடாது.

“அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் அவசரநிலைக் காலத்தில் ரத்து செய்யப்பட்டன. பேச்சு, எழுத்து, கருத்து என எந்த வகையிலும் கருத்துச் சுதந்திரம், அமைப்பு ரீதியில் இணைந்து செயல்படும் சுதந்திரம் போன்றவை இல்லாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.

ஜனநாயக வரலாற்றின் கருப்பு அத்தியாயமான எமர்ஜென்சி-1975 குறித்து விஸ்வ சம்வத் கேந்திரா பாரத் உடனான சிறப்பு உரையாடலின் போது, சர்கார்யாவா ஜி, 48 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை முழுவதுமாக நினைவு கூருதல் சற்று கடினம், ஆனால் அவசரநிலை மற்றும் அதற்கு எதிரான போராட்டம் சிறிது வித்தியாசமானது.  அதன் ஒரு சம்பவம் நினைவுகூரத்தக்கது. நான் அப்போது பெங்களூரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் மாநில அளவிலான ஊழியரான நானும் அந்த இயக்கத்தில் பங்கேற்றேன். ஊழலுக்கு எதிராக, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க, கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான போராட்டங்கள் நடந்தன, பின்னர் மே கடைசி வாரத்தில் நாட்டிற்குள் வித்யார்த்தி யுவ சங்கர்ஷ் சமிதியும், நாடு முழுவதும் ஜனதா சங்கர்ஷ் சமிதியும், வித்யார்த்தி ஜன் சங்கர்ஷும் உருவாக்கப்பட்டன. அத்தகைய இரண்டு இயக்கங்களின் தளமாக சமிதி ஆனது.

ஜூன் மாதத்தில் மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்தன. இந்த மூன்றுமே எமர்ஜென்சி என்கிற அவசரநிலை அறிவிப்புக்கு இட்டுச் சென்றது. ஜூன் 1 ஆம் தேதிக்குள், ஜே.பி.யின் தலைமையிலான இயக்கம் நாடு தழுவியதாக மாறியது, அது  தீவிரத்தின் உச்சத்தை எட்டியது. இரண்டாவது – குஜராத்தில் நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது, அவர் தோல்வியடைந்தார். ஜூன் 12 அன்று, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா, ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியின் மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை ரத்து செய்தார். இந்திரா ஜி மூன்று முனைகளிலும் தோற்கடிக்கப்பட்டார்.

ஒன்று நீதித்துறை, இரண்டாவது அரசியல் துறையில் தேர்தல், மூன்றாவது பொதுமக்கள் மத்தியில். அத்தகைய தோல்வி தந்த கலக்கத்தினால் தான் அவர் இந்த தீவிர நடவடிக்கையில் இறங்கினார். ஜூன் 25 அன்று இரவு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் மொபைல், டிவி, எதுவுமே கிடையாது. அன்றைய நிலையைப் புரிந்துகொள்வது இன்றைய மக்களுக்கு எளிதல்ல. ஐம்பது வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் தொலைக்காட்சியும் இல்லை, கணினிகளும் இல்லை. மின்னஞ்சலும் மொபைலும் இன்றைக்கு இருக்கிறது, அந்தக் காலத்தில் அது இல்லை, அப்புறம் எப்படி அந்தச் செய்தி தெரிந்தது? பிபிசி மற்றும் ஆல் இந்தியா ரேடியோ மூலம் அறிவிப்பு வெளியான உடனேயே தெரிந்து விட்டது. காலை 06:00 மணி முதல் செய்தி கிடைத்தது. நானும் மற்ற நண்பர்களும் பெங்களூர் காந்தி நகரில் உள்ள சங்கக் கிளையில் இருந்தோம், கிளைக்குச் செல்லும் போது செய்தி கிடைத்தது. அடல் ஜி, அத்வானி ஜி, மது தண்டவதே ஜி மற்றும் எஸ்என் மிஸ்ரா ஜி ஆகியோர் பார்லிமென்ட் கமிட்டியின் பணிக்காக பெங்களூரில் தங்கியிருந்தனர். ஷாகா முடிந்ததும், நாங்கள் அங்கு சென்றோம், அடல் ஜி, அத்வானி ஜி ஆகியோர் குளித்து, சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு கீழே வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது, ‘ எமர்ஜென்சி அமலுக்கு வந்துள்ளது’ என்று கூறினோம். ஒரு வேளை அதுவரைக்கும் அவர்களுக்குத் தெரிந்திருக்குமோ இல்லையோ என்று நினைத்ததால் அவரிடம் நாங்கள் தெரிவித்தோம்.  ‘ உங்களுக்கு எப்படித் தெரியும் ‘ என்று அடல்ஜி கேட்டார். ‘வானொலியில் கேட்டோம் ‘ என்று நாங்கள் சொன்னோம். . அத்வானி ஜி, ‘ யுஎன்ஐ, பிடிஐயை அழைக்கவும், எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க  போனிலேயே அறிக்கை கொடுக்க வேண்டும் ‘ என்றார். அடல்ஜி சொன்னார் – நீங்கள் என்ன செய்கிறீர்கள், நான் அறிக்கை தருகிறேன் என்றார். அடல் ஜி  ” சரி, நான் எனது அறிக்கையை அளிக்கிறேன்.  – யார் அச்சிடப் போகிறார்கள்? என்று  சொன்னார்,எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்டவுடனே, ஒரே நேரத்தில் பத்திரிகை தணிக்கை செய்யப்பட்டதால், மறுநாள் அந்த அறிக்கையை யாரும் அச்சிடப் போவதில்லை என்பது அடல்ஜிக்கு தெரிய வந்தது. சிறிது நேரத்தில் போலீசார் வந்து அடல் ஜி, அத்வானி, எஸ்.என்.மிஸ்ரா ஆகியோரை போலீசார் கைது செய்து ஹைகிரான் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர் மீது மிசா சட்டம் பிரயோகிக்கப்பட்டது நாங்கள் உடனடியாக தலைமறைவானோம். சங்க கார்யகர்த்தர்கள் மிசாவில் தேடப்பட்டு வருகிறோம் என்ற தகவல் கிடைக்கப் பெற்றோம்.  நான் டிசம்பர் வரை பூமிக்கடியில் இருந்தேன்.

Next Post

மாவீரன் அழகு முத்துக்கோன் !

Tue Jul 11 , 2023
VSK TN      Tweet    பாரத தேசத்தின் அடிமைத்தளை அறுக்க பாரத தேவியின் சுதந்திர மாண்பை மீட்டெடுக்க தங்கள் உயிரைத் துச்சமாக்கி அந்நியருடன் போராடிய எண்ணற்ற மாவீரர்களின் முன்னோடியானவர் நெல்லை சீமையில் எட்டயபுரம் சார்ந்த வீரன் அழகு முத்து கோன் ! வரலாற்றின் பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்ட அந்த சரித்திர நாயகன் , கால் நூற்றாண்டு காலம் கூட வாழாமல் தன் உடல் பொருள் ஆவி அத்தனையும் பாரத தேவியின் சுதந்திர வேள்விக்கு அர்ப்பணம் […]